Month: November 2020

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அன்புள்ள விவசாய சொந்தங்களே எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு ஒரு சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
1. வட மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலை பயிர்களான மா கொய்யா மற்றும் எலுமிச்சை விவசாயிகள் அதிக காற்றினால் மரங்கள் சாய்ந்து மரங்களை இழக்கும் நிலை உள்ளது அதிக அடர்த்தியை குறைக்கும் வண்ணம் தேவையற்ற கிளைகளை குறைப்பது மற்றும் மரங்களுக்கு மண் அணைத்து பாதுகாக்கலாம்.
2. நெற்பயிருக்கு முட்டை கரைசல் தயார் செய்து இருமுறையாவது கொடுப்பது காற்றினால் நெற்பயிர் சாய்ந்து பாதிப்பு ஏற்படுவது பெருமளவு குறையும்.
3. சரிவு குறைவாக உள்ள நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் இப்போதே முறையான வடிகால்கள் இருக்கும் வகையில் கரைகளை மாற்றி அமைத்து நீர் எளிதில் வெளி செல்லும் வகையில் திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது.
4. அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கிராம நிர்வாக அலுவலர் போன்றோரின் தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது நல்லது.
5. எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் கைபேசியில் உள்ள நோட் கேம் என்ற செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலம் புகைப்படம் எடுத்து அலுவலகங்களில் சமர்ப்பிப்பது எளிமையாக நிவாரணம் பெற வசதியாக இருக்கும்.
6.கால்நடைகளை முறையாக பாதுகாக்கும் வண்ணம் அதன் கொட்டகைகளை சரி செய்து கொள்வது நல்லது. அதற்கான தீவனங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
7. முடிந்தவரை மெழுகுவர்த்தி கொசுவர்த்தி சுருள் தீப்பெட்டி போன்றவற்றை பாலிதீன் கவருக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
8. தென்னையில் அதிகமாக உள்ள ஓரளவுக்கு முற்றிய காய்களை வெட்டி எடுத்துவிடுவது நல்லது.
9. அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களில் இருந்து சூடோமோனாஸ் ,விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற இயற்கை பாதுகாப்பு பொருள்களில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 2 கிலோ என்ற வீதத்தில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Telegram Groups
9944450552

பார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்

பார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்
பார்த்தீனிய விஷ செடிக்கு நச்சு கொல்லி தெளிக்க வேண்டாம்னு சொல்ல காரணம் இந்த புகைபடத்தை பார்த்தால் புரியும்..
நச்சு தெளிச்சதால தாய் செடி காய்ந்திருக்கு..
ஆனா காய்ந்த செடிக்கு கீழே பாருங்க
எத்தனை பார்த்தீனீய நாற்று முளைத்து வந்திருக்குனு..!
அப்போ நச்சு கொல்லியால விதை வீரியமடைந்து ஆரோக்கியமா வளர்வது தெரியுது..
இதைதான் ஆறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டுள்ளோம்..
அப்போ இதற்கு தீர்வுதான் என்ன??
ஏற்கவே சொன்னது போல கல் உப்பு கரைசல்தான்ங்க..
பத்து லிட்டர் தண்ணீரில்
ஐந்து கிலோ கல் உப்பு (சாப்பாட்டு உப்பு) கரைத்து பூத்த பால்த்தீனீய செடி மேல நன்கு படும்படி தெளிச்சு பாருங்க..
ஒரு சில மணி நேரத்திலேயே தாய்செடி காய்ந்துவிடும்..
அடுத்த ஒரு வாரம் விட்டு பாருங்க,
காய்ந்த செடிக்கு கீழே ஒரு விதை கூட முளைக்காது..
இதுதான் இயற்கையான தீர்வு..
இது வரப்பு,தென்னை தோப்பு, வாழை காடு,இப்படியான பயிர்களுக்கு இடையிலும் தெளிக்கலாம்..
வெங்காயம், மிளகா செடி இன்னும் வேறு பயில்களுக்குள்ளே தெளிக்கவேண்டாம்..
காரணம் பயிர்கள் மீது உப்பு தண்ணி பட்டால் காய வாய்ப்பு இருக்கு..
அதற்கு நடவுக்கு முன்பே பார்த்தீனியாவை நன்கு முளைக்க வச்சு உப்பு தண்ணி தெளிச்சு அதன் பிறகு உழவு ஓட்டி மேற்சொன்ன பயிர் நடவுங்க..
பாதிக்காது..
ஏங்க இத்தனை கஷ்டத்திற்கு பர்த்தீனீயாவை பிடிங்கி உரமாக்கிடலாம்னு யாரும் சொல்ல வராதீங்க..
காரணம்,
பார்த்தீனீய பூ பூத்து கிடக்கிற காட்டு பக்கம் போனாலே தொடர்ச்சியா தும்மல் வருவதும்,
கையில் செடிபட்டாலே கொப்பலங்கள் வருவதும்
எனக்கு உட்பட நிறையா பேருக்கு இருக்கு..
அதனால இந்த விஷ செடியை வைத்து
விஷ பரீட்சை வேண்டாம்..!!
மண்ணுக்கு உரம போட வேறு நிறையா செடிகள் இருக்கு..
அதை பிடுங்கி போடுங்க..!
சரி உப்பு தண்ணி தெளிச்சா மண் மலடாகாதானு சந்தேகம் வரும்..
மலடாகும்..
தொடர்ந்து தெளித்தால்..
வருடதிற்கு இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் ஒன்னும் பிரச்சனையில்லைங்க..
அதும் போக இது போல தெளித்தாலே பார்த்தீனீயா படிப்படியா கட்டுபடுகிறது..
அதனால தொடர்ந்து தெளிக்கனும்னு அவசியமில்லை..
அப்போ அருகு,கோரைக்கு என்ன வழினு கேட்ப்பீங்க..
அதற்கு மூடாக்கு ஒன்றே தீர்வு..
மூடாக்கு போட இலை, தழை கிடைக்கலைனா உயிர் மூடாக்கான நரிப்பயறு போன்ற பயிரை விதைச்சு
கட்டுபடுத்துங்க..
வேறு வழியில்ல..
நன்றி..
சத்தியமங்கலம்..

யூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை

2லிட்டர் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் பொன்னியம் 25கிலோ யூரியாவுக்கு சமம் என சொல்லராங்க. இந்த சம்மன்பாட்டை சரியா என ஆராயவில்லை. ஆனால்

இரண்டு லிட்டர் பொன்னியம் தயாரித்தால் ஏக்கருக்கு 400மில்லி விதம் ஒரு போகம் யூரியாவின்றி நெல் அறுவடை செய்யமுடியும்.
அதாவது 30மில்லி பத்துலிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.

Continue reading

இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்

*இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்*

*தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் ;*

10 லிட்டர் கோமியம்
2 கிலோ எருக்கம் இலை
2 கிலோ – கல்உப்பு
அரைக்கிலோ – சுண்ணாம்புக்கல்
(சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது)
தேவைகேற்ப எலுமிச்சை பழம்

*செய்முறை;*

எருக்கன் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும்.

பிறகு சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும்.

கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும்.

ஒரு வாரத்தில் இயற்கை களைக் கொல்லி தயாராகி விடும்.

*பயன்படுத்தும் முறை:*

களைக் கொல்லி கரைசல் ஒரு லிட்டரை
9 லிட்டர் தண்ணீரில்
(1:9 என்ற விகிதத்தில்) கலந்து
களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

தெளிக்கும் பொழுது ஒரு எலுமிச்சைப் பழத்தின்சாறு கலந்து தெளிக்கவும்

*பயன்கள் ;*

சிறிய களைகள் முதல் பெரிய களைகள் வரை நன்றாக காய்ந்து விடும்

களைக் கொல்லி தெளிக்கும் பொழுது பயிர் சாகுபடி செய்திருந்தால் அவற்றின் மேல் படாதவாறு தெளிக்க வேண்டும்.

*இது முற்றிலும் இயற்கையான களைக் கொல்லி*

*செலவு குறைவு பலன் அதிகம்*

*சுற்றுபுற சூழல் பாதுகாப்பானது*

*குறிப்பாக இரசாயன களைக் கொல்லி மண் ணை மலடாக்கி விடும். இந்த களைக் கொல்லி மண் வளத்தைக் காக்கும்.*

JADAM method of natural farming

JADAM method of natural farming:
பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது.
பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது.

Continue reading

மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்

மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்

விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம்.

Continue reading