செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம்: பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும். ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அடி இலைகளில் முதலில் பாதிப்பு ஏற்படும். பற்றாக்குறை அதிகம் ஆகும்பொழுதுதான் மேல்உள்ள இலைகளிலும் பாதிப்பு அறிகுறிகளைக் காணலாம்.
மெக்னிசியம், துத்தநாகம், மாங்கனிசு, கந்தகம், மாலிப்டினம், இரும்ப, தாமிரம் போன்ற சத்துகள் குறைந்த வேகத்தில் பரவும். இவை பற்றாக்குறை ஆரம்பிக்கும்போது அறிகுறிகள் இளம் இலைகளில் காணலாம்.
சுண்ணாம்புச்சத்து, போரான் போன்ற சத்துகள் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணலாம்.