Month: October 2020

மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல்

நெற்பயிரில் தண்டுதுளைப்பான்(குருத்துபூச்சி),ஆணைக்கொம்பன்,வெட்டுக்கிளி,பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு,இலைப்பேன், கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க(வந்துட்டுனா பகுதியளவுதான் போக்கமுடியும்) பயன் படுத்தபடும் திறன்மிகுந்த கரைசல் தான் மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல்.

Continue reading

சோளம் அன்றும் இன்றும்

சோளம் அன்றும் இன்றும்
பழைய வேளாண் முறைக்கும் நவீன வேளாண் முறைக்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அந்தவேறுபாடு மக்களுக்குச் சாதகமானது அல்ல. பாதகமானது.
அதாவது நவீன சாகுபடி என்ற பேரால் மிகையான உற்பத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாதிப்பையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அத்தகைய வேறுபாடு என்னவென்றால் விளைபொருட்கள் நிலுவையில் இருக்கும்பொது பச்சையாகவே பறித்து உண்ணக்கூடியதாக முன்னர் இருந்தது. இப்போது பச்சையாக உண்ணத் தகுதியோ சுவையோ இல்லாத விளைபொருட்கள்தான் விவசாயத்தில் உற்பத்தி செய்வது என்ற கொடுமையான நிலைமை ஏற்பட்டுவிட்டது.
உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சோளம்.
சோளம் 
முன்பு வெள்ளைச்சோளம், சடைமஞ்சள்சோளம், கிட்டஞ்சோளம், மொட்டைவெள்ளச் சோளம் போன்ற பல பெயர்களில் விவசாயத்தில் முக்கியப்பங்கு வகித்தது. வெள்ளைச் சோளத்தைக் கார் சோளம் என்றும் சொல்வார்கள்.
மாசி பங்குனிப்பட்டம் அதற்கு ஏற்றது. மஞ்சள் சோளம் பரட்டாசிப்பட்டத்துக்கு மிகவும் ஏற்றது.
சோளப்பயிர் வளரவளர அதன்மணம் காற்றில் மிதந்து வந்து நம்மை மயக்கும்.
அதன் இளம் பயிரில் ஒருவிதமாகவும் கதிர் வெளிவரும்போது ஒருவிதமாகவும் கதிர் பால்பிடிக்கும்போது ஒருவிதமாகவும் விளைந்தபயிர் ஒருவிதமாகவும் மணக்கும்.
உங்களில் எத்தனைபேருக்கு நான் சொல்லும் செய்தி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதாவது வெள்ளைச் சோளப் பயிர் கதிர் பிடிக்கும்நேரத்தில் இரண்டுவிதத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். முதலில் அதன் பால்கதிரை ஒடித்து இரண்டு கைகளாலும் நசுக்கித் தேய்த்து அந்த விளையாத இளஞ்சோளத்தை ருசித்துத் தின்பது. நெருப்பில் சுட்டும் சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாக இருக்கும்.
இரண்டாவதாக அதன் அடித் தட்டு (தட்டை என்றும் சொல்வார்கள்). அதை ஒடித்து கரும்பைப் போலவே மென்று சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். இனிப்பாக கரும்பைப்போலவே இருக்கும்.
இது இன்றுள்ள பெரும்பாலோருக்குத் தெரியாது. காரணம் அத்தகைய சோள வகைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.
இப்போது உள்ள சோளவகைகள் எல்லாம் மிகை உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட சுவையில்லாத அல்லது கசப்புச் சுவை உள்ள சக்கைகள் ஆகும். சோளத்தையே தின்னமுடியாது அப்புறம் அதன் தட்டையைத் தின்பதெங்கே?
உண்மையாகவே இப்போது விளையும் நெல் உட்பட எந்தத் தானியத்தின் வைக்கோல் அல்லது தட்டைகளையும் கால்நடைகள்கூட விரும்பிச் சாப்பிடுவது இல்லை!
இதே கதிதான் கம்பு, ராகி, பயறுவகைகள், சாமை, தினை போன்ற சிறுதானியங்கள், போன்றவற்றுக்கும் ஏற்பட்டது.
இதில் பொதிந்துள்ள மக்கள் உணராத ஒரு உண்மையும் சோகமும் என்வென்றால் முன்னர் இயற்கை உணவு என்கின்ற உணர்வு இல்லாமல் இயல்பாகவே உண்டு வந்தவை ஒழிந்துவிட்டன. இன்று அந்த இடத்துக்குப் பல்வேறு முறைகளில் சமைக்கப்பட்டும் இயந்திரங்கள் அல்லது உயர்வெப்ப அடுப்புகளில் பல ரசாயனக் கலவைகளையும் சேர்த்துச் சுட்டெடுக்கப்பட்டும் வெளிவரும் நச்சுப்பொருட்களைத்தான் உணவென்ற பெயரில் உண்ணும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.
முன்பு விவசாயத் தொளிலாளியான ஒரு ஏழைகூட தான் வேலை செய்யும் நிலத்தில் விளைந்த சோளக் கதிரைத் தேய்த்துத் தின்றான். நிலக்கடலைச் செடியைப் பச்சையாகப் பிடுங்கி அதன் காய்களைப் பறித்துச் சாப்பிட்டான். பயறு வகைகளும் கம்பும் ராகியும் அவனுக்கு பசிக்கு உணவாகப் பயன்பட்டன.
நான் அப்படியெல்லாம் சிறுவயதில் உண்டு அனுபவப்பட்டிருக்கிறேன். மாடுமேய்க்கும் மேய்ச்சல்நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் இருந்து செட்டிக்காரச் சிறுவர்கள் கட்டுக்காவலை மீறி கொண்டு வந்து பச்சையாக பசிக்கும் விளையாட்டுக்குமாக உண்பார்கள். நான் உண்டிருக்கிறேன்.
ஆனால் அந்தப் பாரம்பரிய முறைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டதால் இன்று ஒரு ஏழைகூட வெந்ததையும் ஆலையில் இருந்து வெளிவரும் உணவுப்பண்டங்ளையும் உண்டுவாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் உள்ள சிறு கடைகளில்கூட வெளிநாட்டுக் குளிர்பான வகைகள் மதுக்கடைகளில் மதுவகைகளும் குவிந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நோயெதிர்ப்பு சக்தியை இழந்து மருத்துவமனைகளும் மருந்தும்தான் கதி என்று நிறையப் பேர் வாழும் நிலை உள்ளதை அனைவரும் அறிவோம்.
இன்றைய நவீன விவசாயம் மக்களை இயற்கை உணவைவிட்டுத் தூர விரட்டியடித்துவிட்டது. இப்போதைய தலைமுறையினர்க்கே அதுபற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அடுத்துவரும் தலைமுறையினருக்கு இந்தக் கதையைச் சொல்லக்கூட ஆள் இருக்காது. எனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அந்த அனுபவங்களைக் கதைகதையாகச் சொல்லும்போதே ஒரு பக்கத்தில் சோகத்தால் உள்ளம் வேதனைப்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை!
சோளம் அன்றும் இன்றும்
(இந்தப் படத்தில் உள்ளது நவீன ரகம். மனிதனுக்கோ மாட்டுக்கோ ருசிக்காது. பழைய ரகத்தின் படத்தை இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை)
Subash Krishnasamy from Facebook group vivasayam

அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி

அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி
கொய்யா சாகுபடியில் விவசாயியின் அனுபவம் – அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி
திரு. சசிக்கண்ணன் என்ற விவசாயி கொய்யா சாகுபடி செய்துள்ளார் சாதா முறையில் கொய்யா சாகுபடி செய்தால் 15 அடிக்கு ஒரு செடி என்ற அளவில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 120 செடிதான் நடவு செய்ய முடியும். அதிக மகசூல் எடுக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி செய்வது வரிசைக்கு வரிசை 10 அடியும் செடிக்கு செடி 8 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யணும் ஒரு ஏக்கருக்கு 500 செடி வரை நடவு செய்யலாம்.
கொய்யா நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 600 கிலோ தொழுவுரம் , அசோஸ்பைரில்லம் 10 கிலோ, பாஸ்போபாக்டீரியா 10 கிலோ, வேம் 10 கிலோ அனைத்தையும் எருவில் கொட்டி நன்றாக கலந்து 1..5 அடி ஆழம், அகலம் உள்ள குழி எடுத்து அதில் நடவு செய்யும் பொழுது ஒரு கிலோ வீதம் உயிர் உரங்களின் கலவையை போட்டு நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
இவ்வாறு தொடர்ந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை உயிர் உரங்களை எருவில் கலந்து போடவும் ஆறு மாதத்தில் காய் வர ஆரம்பிக்கும.
காய்களை பரித்துவிட்டு வளரக் கூடிய செடிகளை ஒரு கணு விட்டு செடியை மேலே வெட்டி விடனும் ஒவ்வொரு கணுவு விட்டும் செடியை வெட்டும்; பொழுது செடியின் கணு பகுதி கருப்பாக இருக்கனும் அவ்வாறு இருந்தால் அவை பக்க கிளை எடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிந்து அவற்றை வெட்டி விடவும்.
இதேபோல ஒரு மரத்திற்கு 25 பக்க கிளைகள் வரும் வரை வெட்டி வரவேண்டும். பக்க கிளைகள் அதிகமாக வந்தால் தான் நமக்கு மகசூல் கூடும். தொழுவுரம், நுண்ணுரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை காய் காய்க்கும் கவாத்து செய்து கொண்டே இருந்தால் மரமாக வளராமல் செடியாக இருக்கும். செடியாக இருந்தால் காய் தொடர்ந்து ஆண்டு முழுவதும் காய்த்து கொண்டே இருக்கும்.
ஒரு காய் 200 கிராம் அளவு இருக்கும். ஒரு மரத்துக்கு 50 காய் என்று வைத்தால் கூட 10 கிலோ வரும் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை காய் வரும் என்று வைத்தால் மொத்தம் 30 கிலோ காய் கிடைக்கும்.
ஒரு கிலோ விலை ரூபாய் 30 என்று விற்றால் ஒரு மரத்துக்கு 800 ரூபாய் கிடைக்கும் (செலவு ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வரும்) – 500 மரத்துக்கும் மூன்று லட்சம் வருமானம் கிடைக்கும் செலவு போக நமக்கு நல்ல லாபம் தான்.
கொய்யா கன்றுகள் பதியன் போட்டு விற்கலாம்.
நன்றி :

Rsga Seed Kannivadi

காளான் புரட்சி

காளான் புரட்சி

காளான் என்றால் என்ன?
குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு முக்கியமாக பயன்படுவது தாவரங்களுக்கென இருக்கும் பச்சையம் என்ற நிறமி.காளானும் தாவரம்தான். ஆனால் பச்சையம் இல்லாத தாவரம்.பச்சையம் என்ற நிறமி இல்லாததால், காளானால் ஒளிச்சேர்க்கை செய்து தானாகவே தனக்கான உணவை தயாரிக்க முடியவில்லை.அதனால், சில உயிரினங்கள் மீது ஒட்டி வாழ்கிறது.

Continue reading

தூங்குவாகை தூங்குமூஞ்சி மரம்

தூங்குவாகை தூங்குமூஞ்சி மரம்

தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது.

Continue reading

மாவுப்பூச்சி கட்டுப்படுத்த எளிய முறை

மாவுப்பூச்சி கட்டுப்படுத்த எளிய முறை
மாவுப்பூச்சி கட்டுப்பாடு

இன்றைக்கு விவசாயிகளுக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்குவது மாவு பூச்சி பிரச்சனை.. இதற்கு ஒரு எளிய தீர்வை முன்னோடி விவசாயி திரு மேட்டுப்பாளையம் நவநீத கிருஷ்ணன் அவர்கள் கூறியதை பகிர்கிறேன்
ஒரு ஏக்கருக்கு 100 லிட்டருக்கு ஆன அளவு.
வெல்லம் 5 kg
புகையிலை தூள் 500 gram
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து 7 நாட்கள் புளிக்க வைத்து பின் அதனுடன் புகையிலை தூள் கஷாயம் கலந்து தெளித்தால் மாவு பூச்சி கட்டுப்படும்.
புகையிலை தூளை 3 நாட்கள் 1 liter தண்ணீரில் ஊறவைத்து பின் அம்மியில் அரைத்து மீண்டும் ஊறவைத்த நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி கஷாயம் தயார் செய்து கொள்ளவேண்டும்
8ம் நாளில் இவை இரண்டையும் கலந்து செடிகள் மீது நன்றாக படும்படி தெளிக்க வேண்டும்..
இந்த கலவை மாவு பூச்சிகள் மீது நன்றாக படும்படி தெளித்தால்.. மாவு பூச்சிகள் கட்டுப்படும்..
ஒரு முறை அடித்து பின் ஒரு வாரம் கழித்து ஒரு முறை மீண்டும் தெளிக்கும் போது மாவு பூச்சி பிரச்சனை கட்டுக்குள் வரும் . நன்றி
லோ. ஜெயக்குமார்
மறைமலை நகர்.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்