கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை
Category: Cattle rearing
கால்நடைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள்
விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மற்றும் நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம்.
இவற்றிற்கு தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யலாம்.
கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்?
கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்
கோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார்.
இன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்… அதில் தூய நாட்டுக்கோழி இனங்கள் பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் என்று சொல்வார்கள். கடக்நாத் என்பது கருங்கோழி இனம்
மாடுகளுக்கான அடர் தீவனமுறை
பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு…
இந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்தது அதைத்தான் இங்கு உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்…
வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள்
நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள் மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம்.
சினை நிற்காமல் போன கால்நடைகள் சினைநிற்க
சினை நிற்காமல் போன கால்நடைகள் சினைநிற்க இயற்கை மருத்துவம்.
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு
கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி
கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி?
கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை..!!
வீடுகளில் எளிய முறையில் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்க, கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
கலப்பு தீவனத்தை, கடைகளில் வாங்கி மாடுகளுக்கு உணவாக கொடுப்பதை காட்டிலும், தீவனங்களின் அளவுக்கேற்ப வீடுகளிலே தயாரிக்க இயலும்.
மாடுகளின் செரிமான முறை, தீவனத்தில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எடைக்கேற்ப தயாரிப்பதன் மூலம், மாடுகளுக்கு சத்துள்ள மாற்று தீவனத்தை தயாரிக்க முடியும்.
கலப்பு தீவன தயாரிப்பு குறித்து, கால்நடை பயிற்சி மையத்தில், மாதிரிகள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில், மலிவாக கிடைக்கும் தீவனங்களான, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, பயிறு வகைகள், புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு மற்றும் கரும்பு சர்க்கரை ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த தீவன மாதிரியை, கறவை மாடுகளுக்கு உணவாக அளித்தில் நல்ல பலன். இதில், முன்பை காட்டிலும் அதிகளவு பால் உற்பத்தியாவதும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்:-
10 கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, நான்கு கிலோ தானியங்கள், மூன்று கிலோ புண்ணாக்கு, 2.5 கிலோ தவிடு, 250கிராம் நாட்டு சர்க்கரை மற்றும் 100 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 150 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைத்து, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், சத்துக்குறைபாடு பிரச்னை ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும்.
கூடுதல் தகவலுக்கு, கால்நடை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.
தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.