இயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும்.
பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை
