இந்திய விவசாயத்தின் இரண்டு சக்கரங்கள் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள். இரசாயன சாகுபடி வயலில் நிலம் முழுவதும் தோண்டிப் பார்த்தாலும் ஒரு மண்புழு பார்க்கமுடியாது, ஜீவாமிர்தம் கொடுத்தால் 10 நாட்களில் பெரிய மண்புழுக்களை பார்க்க முடியும். நிலத்தில் மண்புழுவே இல்லை என்றாலும் 10 நாளில் மண்புழு வந்துவிடும். ஜீவாமிர்தம் மண்புழுவை அழைக்கும்.
Category: Zero budget farming
ஐந்தடுக்கு மாதிரி-விதை தேர்ந்தெடுத்தல்
ஆயிரமாயிம் ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது.
இந்த மாற்றங்கள் மூலம் புவியில் ஏற்படும் போராட்டங்களை சமாளித்து உயிர் வாழும் திறனைப் பெறுகின்றன. வறட்சி, குறைவானமழை, அதிக மழை, வெள்ளம், பனிப்புயல், சூறாவளி, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல், என போன்ற பல இயற்கை இடம்பாடுகளையும் நோய்த் தாக்குதலையும் தாங்கி வளர்கின்றன. இப்படித் தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் பருவநிலை மாற்றைத்தையும் தாங்கும் விதமாக உள்ளன.
முக்கோண முறையில் வாழை சாகுபடி
சாதாரணமாக சதுர நடவு முறையைவிட இந்த முக்கோண நடவு முறையில் அதிகமான வாழையை நடவு செய்ய முடியும். அதாவது 30 சதவீதம் வரை கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழை வரிசைகள் 4.5 அடி இடைவெளியுடனும், கன்றுக்கு கன்று 6 அடி இடைவெளியும் இருக்கும். கன்றுகள் குறுக்கும் மறுக்குமாக (Zig Zag) நடப்படுவதால் மரத்திற்கு மரம் 6 அடி இடைவெளி இருக்கிறது.
இயற்கைக்கு திரும்புவோம்
நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.
நீர் மேலாண்மை
பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில் கொடுத்தால் அந்த தண்ணீர் இரண்டு பக்கமும் இருக்கும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு சாலிலும் தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று விட்டு ஒரு சாலில் தண்ணீர் கொடுத்தால் 50 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
வாப்சா என்பது என்ன
இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது.
இந்த வெற்றிடங்களில் தண்ணிர் இல்லை. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. இந்த முழு சூழ்நிலைகளும் சேர்ந்ததே வாப்சா ஆகும்.
பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்
பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்
நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்)