ஜீவாமிர்தம்

Agriwiki.in- Learn Share Collaborate

ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தம் தேவையான பொருட்கள்

🍯 நாட்டு பசுஞ்சாணம் – 10 கிலோ

🍯 நாட்டு பசுங்கோமியம் – 5 முதல் 10 லிட்டர்

🍯 வெல்லம் – 2 கிலோ (அ) கரும்புச்சாறு – 4 லிட்டர்

🍯 தானிய மாவு – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)

🍯 காட்டின் மண் – கையளவு

🍯 தண்ணீர் – 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

​ தயாரிக்கும் முறை

​ 🍯 200 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானியமாவு ஆகியவற்றுடன் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டியில் இட்டு கலக்க வேண்டும்.

🍯 தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன.

🍯 இவ்வாறு கலக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜீவாமிர்தம்.

🍯 தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.

🍯 ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை, குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கன ஜீவாமிர்தம்

🍯 பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

🍯 விதைநேர்த்தி செய்ய ஜீவாமிர்தம் மிகவும் உகந்ததாகும். விதைநேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

🍯 ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது. 🍯 ஜீவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .

🍯 வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.

🍯 ஜீவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.

🍯 ஜீவாமிர்தம் தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.