துளைகள் உடைய பேவர் பிளாக்

Agriwiki.in- Learn Share Collaborate

#use_hole_paver_blocks

#for_rainwater_drainage_

பொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம்.இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் டைல்ஸ் அல்லது சிமெண்ட் தரை கொண்டு தளம் அமைத்து நீர் மண்ணுக்குள் கொஞ்சம் கூட இறங்காமல் தடுத்து விடுகிறார்கள்.

இது போல தளம் இடுவதற்கு காரணம் காலில் மண் படாமல் இருக்கவும் சுத்தம் செய்வதற்கு சுலபம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் இதையே செய்து விடுகின்றனர்.

இதற்கு மிக சிறந்த தீர்வு படத்தில் காட்டியுள்ளபடி துளைகள் உடைய பேவர் பிளாக் கற்களை தரைக்கு பயன்படுத்துவதால் சுத்தம் செய்வதும் சுலபம்.காலில் மண் ஓட்டுவதையும் தடுக்கலாம் ..

நன்றி
ஹரி…