நாவல் பழப்பயிர் சாகுபடி

Agriwiki.in- Learn Share Collaborate
நாவல் பழப்பயிர் சாகுபடி

நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது.

இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது. விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

நாவல் மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுபான்மை பழப்பயிர். இதன் பழங்களில் கனிமங்கள், சர்க்கரை, புரதங்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளன.

நாவல் மரத்தில் நாற்றுகள் 8 முதல் 10 ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் 6 முதல் 7 ஆண்டுகளிலும் பலன் கொடுக்கும். மேலும் மரங்கள் தொடர்ந்து 50, 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.

நாற்று மூலம் வளர்ந்த மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 80 முதல் 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மரத்திலிருந்து 60 முதல் 70 கிலோ வரை மட்டுமே பழங்கள் கிடைக்கும். நன்கு பழுத்த தரமான பழங்கள் சந்தையில் கிலோ ரூ.300 வரை விற்பனையாகின்றன.

நாவல் ஒரு இலை உதிரா மரம். இவை வசந்தகாலம் (பிப்ரவரி – மார்ச்) மற்றும் மழைக்காலம் (ஜ%லை – ஆகஸ்ட்) ஆகிய இரண்டு பருவங்களிலும் நடவு செய்யலாம். பிந்தையப் பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜ%ன் மாத வறட்சியை தாங்கி வளருவது கடினமாக இருக்கும்.

நடுவதற்கு முன் விளைநிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ குழிகளை 10 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பொதுவாக, பருவமழைக்கு முன்பே குழிகள் தோண்டுவதை நிறைவு செய்ய வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25 % தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும்

. பொதுவாக நாவல் மரம் நிழலுக்காக பண்ணை மற்றும் கிணற்றடிகளில் வளர்க்கப்படுகிறது. இங்கே இவை பழங்களைத் தவிர நிழலையும் வழங்குகின்றன. புதிய விதைகளை விதைக்க வேண்டும். முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழை காலத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடலாம்.

நாவல் பழப்பயிர் சாகுபடி
நாவல் பழப்பயிர் சாகுபடி

இந்த நாவல்பழம் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது, அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இவற்றின் பழம், விதை, இலை, பட்டை என்று அனைத்துமே சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம் தினமும் உட்கொண்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும்.

நாவல் பழம் பயன்கள்

நாவல்பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும்.

வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.

தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.
வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.

பசியைத் தூண்டக்கூடியது.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து.

நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.

நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது.

வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.

Rsga Seed Kannivadi

2 Responses to “நாவல் பழப்பயிர் சாகுபடி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.