நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை

Macrophomina phaseolina
Agriwiki.in- Learn Share Collaborate

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை:

வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா(Macrophomina phaseolina)
என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது.
விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும்.
நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது.
Macrophomina phaseolina
Macrophomina phaseolina
மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும்.
நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும்.
நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.
இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும்.
இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும்.
பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்.
Macrophomina phaseolina
Macrophomina phaseolina

கட்டுப்படுத்தும் முறைகள்:

கோடையில் ஆழமாக உழுதல் வேண்டும்.
பயிர் சுழற்சி முறையை கடைப்படிக்க வேண்டும்.
முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும்.
தரமான விதைகளை ‘டிரைக்கோடெர்மா விரிடி’ 4 கிராம் / கிலோ அல்லது ‘சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்’ 10 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும்.
கடலை சாகுபடிக்கு வயல் தயார் செய்யும் முன் ‘சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்’ / ‘டிரைக்கோடேர்மா விரிடி’ 2.5 / கிலோ / முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் 6 லிட்டர் ஏக்கருக்கு என்ற அளவில் அதனுடன் 100 கிலோ தொழு உரம் கலந்து கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும்.
ஆரம்பக்கட்டத்திலேயே வேரழுகல் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையை எளிமையாக தடுத்துவிடலாம்.
நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம்…

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.