Month: April 2019

மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க

பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கவீட்ல உம்பளாச்சேரி வகைய சேர்ந்தமாடு ஒன்னு இருந்துச்சி நெத்திசுட்டி, வெடிவால், வெங்கொழும்பு, தட்டுபுள்ளி,நாலுகாலு வெள்ளனு உம்பளாச்சேரிக்கான அந்த ஐந்து அடையாளத்தோடும் பயிர்கொம்போடு கட்டுதரையில் அந்த சூரியங்காட்டு மாடு நிற்பதை நாள்முழுவதும் பாத்துகிட்டே இருக்கலாம்.

Continue reading

பருவநிலை மாற்றம்

#பருவநிலை_மாற்றம்
#கல்வி

ஏந்தம்பி தீர்வுக்கு விதை, தற்சார்புனு சொல்றிங்களே இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? உலகமே பணத்த பாத்து ஓடிகிட்டு இருக்குது, நீங்க நுகர்வை குறைனு சொல்லிகிட்டு திரியறிங்க…மாற்று சக்தி, அறிவியல் கண்டுபுடிப்பு எல்லாரும் நம்மள காப்பாத்தும்…

மாற்று சக்தி ஒரு ஏமாத்து வேலைங் மாமா, அத இன்னொரு நாள் சொல்றேன். தீர்வு எல்லாம் மேற்கத்திய வணிக சிந்நனை வழியா தான் வருது, இது பணம் எப்படி பாப்பதுனே இருக்குது, மண்ணுக்கேத்த தீர்வுனு எதுவும் நம்ம அரசு கிட்ட பெருசா இல்ல

அதென்ன மண்ணுக்கேத்த தீர்வு?

மாம்ஸ் காவிரி கழிமுகம் கடல் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும், கொங்கு பெரும்பாலும் பஞ்சத்தில் காயும். இதுக்கு மொத்தமா மரபணு மாற்றிய நெல்ல போடுங்கனு சொல்லுது அரசு நிறுவனங்கள். இது வேலைக்கு ஆகுமா? இரண்டு நிலத்துக்கும் ஒரே பயிர விளைவிக்க முடியாது தான?

ஆமா…

இந்த மண்ணுக்கேத்த அறிவு கோயமுத்தூர் விவசாய கல்லூரில இருக்கும் மாச சம்பளகாரன் கிட்ட இருக்குமா இல்ல இந்த மண்ணுல விளைவிக்கறவன் கிட்ட இருக்குமா?

விஞ்ஞானிகள் தான் பயிர் பரிந்துரை எல்லலாம் பண்றாங்க, மகசூல் பத்தி எல்லாம் சொல்றாங்களே?

அது பருவநிலை சீரா இருக்கும் போது. அப்பவே மழை கொஞ்சம் பத்தலனா பெரும் நட்டம். இப்ப பருவநிலை மொத்தமா சிதைஞ்சு போச்சு. அப்புறம் எப்படி அவங்க சொல்றத நம்பறது? கம்பு வெளையற காட்டுல கரும்பு, திராட்சைய போட சொல்றவங்க எப்படி இடர் காலத்தில் எப்படி பரிந்துரைப்பாங்க…

இதுக்கு தீர.வு?

தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குது. இன்னிக்கு பெப்சி விதை சட்டத்த காட்டி விவசாயிகளக அடிமைபடுத்த பாக்குது, பைப் தண்ணி தரோம்னு தண்ணிக்கு விலை வெச்சாச்சு. நாம தண்ணிய பத்தியும் கவலைபடல, விதைய பத்தியும் கவலைபடல, எவனாச்சும் வந்து காப்பாத்துவான்னு அவென்ஜர்ஸ் படத்த வாய் பொழந்நு பாத்துகிட்டு இருக்கோம்

தம்பி தீர்வு இன்னும் வரல….

நம்ம பாதி வாழ்நாள் ஏதோ இயல்பா போயிடுச்சு, நம்ம பிள்ளைங்க வாழ்நாள் எப்படி இயல்பு மாறி இருக்குதுனு கொஞ்சம் யோசிச்சா தீர்வு தானா வரும்ங்க தாமஸ்

அதான் பெரிய பள்ளிகோடத்துல படிக்க வெக்கறோமே? அங்க இத பத்தி சொல்லி தர போறாங்க…

எந்த பள்ளி வேளாண்மைய, உடல் உழைப்ப முன்னிலை படுத்துது? மாற்று கல்வி பள்ளிங்க கூட இத பத்தி பெருசா பேசறதில்லயே? நாம தான் நம்ம புள்ளைங்களுக்கு சொல்லி தரோனும்

எனக்கே ஒன்னும் தெரியாது, இதுல நான் எங்க போய் சொல்லி குடுக்க? நேரமும் இல்ல…

நேரம் நம்ம புள்ளைங்களுக்கு தான் இல்ல. உங்களுக்கு நீச்சல் தெரியுமே? அத சொல்லி குடுங்க, உங்க நண்பர் வட்டத்துல யாராச்சும் வெள்ளாம வெச்சா கூட்டிகிட்டு போய் காட்டுங்க, மீதி இருக்கற காடுகளுக்கு தொந்தரவு குடுக்காம போய்ட்டு வாங்க, உணவு பழக்கத்த மாத்துங்க, சேமிப்பு பத்தி சொல்லி குடுங்க. முக்கியமா தற்காப்பு கலைய கத்துக்க ஏற்பாடு பண்ணுங்க, இடம். இருந்தா மரம் நடுங்க, இப்படி நிறைய இருக்குதுங் மாமா…

இந்த தற்சார்பு எல்லாம்…..

இத பண்ணிணாலே பாதி கிணறு தாண்டியது போல தான், மீதிய புள்ளைங்க பாத்துக்குவாங்க. அவங்களுக்கு தேவை அனுபவ அறிவு தான், அதை போன தலைமுறைல இருந்து வருங்கால தலைமுறைக்கு முடிஞ்ச வரைக்கும் கடத்துவோம்…மீதிய இயற்கை பாத்துக்கும்னு நம்புவோம்

Prakash thangavel

லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி

திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

Continue reading

செலவில்லாத சுத்திகரிப்பு கருவி வெட்டிவேர்

vetiver grass

கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது… இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்…சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது” என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்…வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை !!! விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற !!

Continue reading

மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை

உழவர்கள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.

Continue reading

தண்ணீருக்காக தமிழகம் கையேந்த வேண்டிய அவசியமில்லை

தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் *தமிழகம் கையேந்த வேண்டிய* அவசியமில்லை…ஏன்????தண்ணீருக்கான நோபல் பரிசு பெற்ற திரு”ராஜேந்திரசிங்”அவர்கள்.தமிழ் நாட்டின் காவேரி நதி வறட்சியை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு கூறியதாவது….

Continue reading