Author: Farmer

நாட்டு பசு மாடே போதும்

*நாட்டு பசு மாடே போதும்!*‘’

”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல…
அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்…

காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க…

சடசடவென பொழிந்தார் பாலேக்கர்.
”*ரசாயன விவசாயம் வேண்டாம்… இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்ள் சிலர்.

‘யூரியா போடவேண்டாம்… மண்புழு உரம் போடுங்கள்’,
‘பொட்டாஷ் தேவையில்லை… ஆர்கானிக் உரம் போதும்’,
‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்… பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்’ என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்ள்.

இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள்.

‘ஐசெனியா ஃபெட்டிடா’ என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல… காளி.

அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிடம் இல்லை.

தீவிரவாதிகள் ஊடுருவது போல வெளிநாட்டிலிருந்து இந்த மண்புழுவை நம்நாட்டில் ஊடுருவச் செய்துள்ளனர். இது செய்கின்ற வேலையைக் கேட்டால் பலருக்கு மயக்கம் வந்தாலும் வந்துவிடும்.

ஆர்சானிக், காட்மியம், ஈயம் (Heavy metals) போன்றவை மண்ணில் இயற்கையாகவே உள்ளன. இதைத் தேடிப்பிடித்து மேலே கொண்டு வந்து சேர்க்கும் வேலையைத்தான் *மண்புழு* என்று பலராலும் சொல்லப்படும் இந்தக் காளிகள் செய்கின்றன. மண்புழு உரம் வழியாக பயிருக்குச் செல்லும் இந்த கடின உலோகங்கள், மனித உடம்பில் கலந்து விடுகின்றன. இதனால் புற்றுநோய் உருவாகிறது. எனவே, ரசாயன விவசாயமும், ஆர்கானிக் விவசாயம் என்று சிலரால் சொல்லப்படும் இயற்கை விவசாயமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

இதனால், விவசாயிகளின் இடுபொருள் செலவுகள் குறைந்தபாடில்லை.

ஒரு மூட்டை யூரியா ரூ. 280. ஆர்கானிக் உரம் ஒரு மூட்டை ரூ 600. ஒரு லிட்டர் என்டோசல்பான் ரூ 250. உயிர் பூச்சிக்கொல்லி 1 லி ரூ. 1,500. இப்படி இடுபொருட்கள் விலையை அதிகமாக வைத்து விற்று, அதன் காரணமாக புதிதாக பல பிரச்னைகள் கிளம்பும் வகையில்தான் இந்த ஆர்கானிக் பரப்பப்பட்டுள்ளது” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன பாலேக்கர் தொடர்ந்தார்…

*தாயைப் பரிசோதிப்பதா*..?

”இந்தப் பிரச்னைகள் எதுவும் வேண்டாம். காசு வேண்டாம். ஆள் வேண்டாம். அம்பு வேண்டாம்… அத்தனை பிரச்னைகளிலிருந்தும் உங்களை தப்பிக்க வைக்கும் சக்தி ஜீரோ பட்ஜெட்டுக்கு உண்டு. முப்பது ஏக்கரில் காய்கறி, பழம், மரம் என்று எதை வேண்டுமானலும் சாகுபடி செய்யுங்கள். உங்களுக்கு ஒன்றே ஒன்று தான் தேவை…

அது, *நாட்டுப் பசுமாடு*…”

இப்போது பாசனத்துக்காக நீங்கள் பயன்படுத்தி வரும் நீரில் 10% போதும். முதல் வருடத்தில் இருந்தே முழுபலனும் பெறலாம்.

ஒரு நாட்டு பசு மாட்டை வைத்துக்கொண்டே ஒரு ஏக்கரில் 60 டன் கரும்பு வெட்ட முடியும்.
ஏக்கருக்கு 24 குவிண்டால் நெல் மகசூல் பெறலாம்.
எந்தவித இடுபொருட்கள் செலவும் இல்லாமல் இதைச் சாதிக்கமுடியும்.

இதற்குக் கொஞ்சம் அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால் போதும்.

மண்ணில் சத்துப் பற்றாக்குறை உள்ளது. மண்பரிசோதனை செய்யவேண்டும் என்கிறார்கள். தன் தாயை யாராவது கற்பு உள்ளவர்தானா என்று பரிசோதனை செய்வார்களா?
என்ன முட்டாள்த்தனமான செயல்.

பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்வதைப் போல மண்ணை எடுத்து நான்கு ஆய்வு கூடத்துக்கு அனுப்பினோம். ஒவ்வொரு இடத்திலிருந்தும் தாறுமாறான முடிவுகள் வந்தன. இதுதான் அவர்கள் ஆராய்ச்சி செய்யும் லட்சணம். ‘ஒன்பது அங்குல ஆழத்தில் மண் எடுங்கள்’ என்கிறார்கள். பயிரின் வேர் நாலரை அடி, ஐந்தரை அடி ஆழத்தில் இருக்கிறது. இந்த ஆழத்தில் பயிருக்குத் தேவையானச் சத்துக்கள் இயற்கையாகவே உள்ளன.
இதைத் தெரிந்து கொள்ளாமல் *மண்ணை பரிசோதனை செய்*…
*மாவை பரிசோதனை செய்*… என்கிறார்கள்.

பயிர்கள், அந்த விஞ்ஞானிகளைக் காட்டிலும் புத்திசாலிகள்.
மூன்று விதமான வேலையை அவை திறம்பட செய்கின்றன.

🍊முதலாவது…

புவிஈர்ப்பு சக்தி. வானத்தில் இருந்து விழும் மழைத்துளியை இந்த சக்தியின் மூலம் இழுத்துக் கொள்கின்றன.

🍋இரண்டாவது…

கீழே இருந்து மேலே செல்கின்ற சக்தி. இதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களை வேர்கள் அருகே கொண்டுவந்து சேர்க்கின்றன. 25 அடி ஆழத்தில் சத்துப் பொருட்கள் இருந்தாலும் மேலே கொண்டு வரும் சக்தி இயற்கைக்கு உண்டு. அப்புறம் எதற்கு நுண்ணூட்டச்சத்து போடவேண்டும்?

எந்தத் தாயும் குழந்தையைப் பட்டினி போடமாட்டாள். இயற்கையும் அப்படித் தான். பயிரை நோய், நொடியில் எப்போதும் அது தள்ளாது. நாம்தான் அவற்றை ஆபத்தில் தள்ளி விடுகிறோம்.

🍅மூன்றாவது…

கட்டுப்படுத்தும் சக்தி. பயிர் ஆரோக்கியமாக வளர இது உதவுகிறது.
பயிர்களின் உற்றத் தோழனாக நாட்டு மண்புழுக்கள் உள்ளன. 15 அடிக்கு கீழே வாழும் வல்லமை பெற்றவை இவை. ஆழத்தில் உள்ள நுண்சத்துக்களை மேலே கொண்டுவந்து சேர்க்கின்றன. மேலும் கீழுமாக இவைகள் ஏற்படுத்திய ஓட்டைகளில் மழைநீர் மண்ணுக்குள் இறங்குகின்றன. இவற்றின் கழிவுகள், நீருடன் கலந்து பயிருக்கு ஊட்டம் அளிக்கின்றன.

இலை, தழை, மண், சுண்ணாம்பு போன்றவையும் பயிருக்கு நோய் தரக்கூடிய நுண்ணுயிர்களும்தான் நாட்டு மண்புழுக்களுக்கு உணவு.

இப்புழுக்களின் கழிவில் 7 மடங்கு தழைச்சத்து உள்ளது.
9 மடங்கு மணிசத்து இருக்கிறது.
சாம்பல் சத்து 11 மடங்கு உள்ளது.
இன்னும் மக்னீஷியம், கந்தகம்…. என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அப்புறம் எதற்கு மற்ற உரமெல்லாம்?

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில்தான் நாட்டு மண்புழுக்கள் பலமடங்கு பெருகுகின்றன. இந்தச் சாணத்தின் வாசனையைக் கண்டவுடன் 15 அடி ஆழத்தில் இருந்துகூட மண்புழுக்கள் மேலே வந்து விடுகின்றன.

சீமைப்பசுக்களின் சாணத்தை, மண்புழுக்கள் தொடுவதே இல்லை” என ஆணித்தரமாக அவர் சொல்லி, இதை தன்னுடைய ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்ததை அடுத்து விவரித்தார்.

பசுவே உரத்தொழிற்சாலை!

”என்னுடைய ஆராய்ச்சியின்படி ஒரு ஏக்கருக்கு, மாதம் ஒன்றுக்கு நாட்டுமாட்டுச் சாணம் 10 கிலோ போதும். ஆரம்பத்தில் 1,000 கிலோ வரை கூட பயிருக்குப் போட்டுப் பார்த்தேன். பின்பு 700, 500, 400, 200, 100 என்று கடைசியில் 10 கிலோ போதும் என்று முடிவு செய்தேன்.
பாலைத் தயிராக்க கொஞ்சம் பிறைமோர் ஊற்றுவது போலத்தான் 10 கிலோ சாணம். இதைப் போட்டவுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகுகின்றன.

விதைப்பதற்கு முன்பு 100 கிலோ சாண உரம் போட்டால் இன்னும் வேகமாக நுண்ணுயிர்கள் வளரும். அகில உலகத்துக்கும் இந்த அளவு பொருந்தும்.

பசு மாட்டை நாம் இதுவரை பால் கொடுக்கும் ஜீவனாகத்தான் பார்த்து வந்துள்ளோம். அது அற்புதமான உரத்தொழிற்சாலை. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணுயிர்கள் பசுமாட்டின் வயிற்றில்தான் உற்பத்தியாகின்றன. கரும்பு போடும்போதும், காய்கறி பயிரிடும்போதும் பாஸ்பேட் உரம் போடுகிறோம். இந்த பாஸ்பேட், பயிர்களின் வேர்களால் உட்கிர கிக்கும் வகையில் இருக்காது. இதைச் சமைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளுமளவுக்குப் பக்குவப் படுத்தி கொடுக்கிறது பாஸ்பேட் சாலிபலஸ் பாக்டீரியா. இந்தப் பாக்டீரியா, பசுமாட்டின் குடலில் வசிக்கிறது. இனி, பாஸ்பேட் உரம் போடவேண்டாம்… பசு மாட்டைத் தேடுங்கள்” என்று சொன்னவர், அடுத்து சவால் விடவும் தவறவில்லை.

”நான் சவால் விடுகிறேன்! சாதாரணமாக நிலத்தில் எப்போதுமே பாஸ்பரஸ் சத்து குறைபாடு இருக்காது. உரமூட்டையை விற்கத்தான் *சத்துப் பற்றாக்குறை* என்று பொய் சொல்கிறார்கள் விவசாய விஞ்ஞானிகள்.
ஐயா விஞ்ஞானிகளே…!
எந்த நிலத்திலாவது பாஸ்பரச் சத்து இல்லை என்று நிரூபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்” என்று சொல்லி கைத்தட்டல்களை அள்ளியவர்,

”சாம்பல் சத்துக்களை உண்டாக்கும் பேசிலஸ் சிலிகா என்ற நுண்ணுயிர், நம் பசு மாட்டின் வயிற்றுப் பகுதியில் வாழ்கிறது. அப்புறம் தழைச்சத்து. இதை தருகின்ற அசோஸ்பைரில்லம் கூட மாட்டின் வயிற்றில் உள்ளது. அப்புறம் கந்தகம், இரும்பு, மாங்கனீசு… என்று பயிருக்கு எத்தனை விதமான நுண்சத்துக்கள் வேண்டுமோ அத்தனையையும் மைக்கோரைசா என்ற உயிரி உருவாக்குகிறது. இதுவும் பசுவிடம் உள்ளது.

பசுவைக் காமதேனு என்றும் சொல்வார்கள். அதற்குப்பொருள், நாம் விரும்பியதை எல்லாம் தரும் என்பார்கள்

இதோ… பயிருக்கு வேண்டிய அத்தனைச் சத்துக்களையும் உற்பத்தி செய்யும் உரத் தொழிற்சாலை, சாதுவாக நிற்கிறது பசு அதைப் பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள்” என்று அழைப்பு வைத்தார் பாலேக்கர்…

ஜீரோ பட்ஜெட்டின் முக்கியமான சூத்திரங்களை அடுத்து விவரித்த பாலேக்கர், ‘மூன்று ஆண்டுகளில் தமிழகத்தையே யாருடைய உதவியும் இல்லாமல் நாம் மாற்றிவிட முடியும்’ என்றும் சூளுரைத்தார்.

தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை* :

விளைச்சலை அதிகப்படுத்த தென்னந்தோப்பிற்கு செல்லும் போது கீழ்க்கண்ட விவரங்களை உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.

1. அனைத்து மரங்களிலும் அடித்தண்டு முதல் தலைப்பகுதி வரை மரத்தின் சுற்றளவு சீராக உள்ளதா அல்லது ஏதேனும் ஒரு மரத்தில் தலைப்பகுதி வரை அருகில் உள்ள தண்டு பகுதி சூம்பிப் உள்ளதா?
2. தண்டுப் பகுதியில் தரையில் இருந்து மூன்று அடிக்குள் சிவப்பு நீர் வெளியேற்றம் உள்ளதா?
அல்லது மர தண்டின் முழு உயரத்திலும் ஆங்காங்கே சிவப்பு நீர் வெளியேறுகிறதா?
3. தென்னையின் தண்டுப்பகுதியில் கருப்பாக நீளமான திட்டு போன்ற படிவங்கள் உள்ளதா?
4. தென்னை மரத்தின் பட்டைகள் இறுக்கமாக இல்லாமல் வெடித்து தனித்தனியாக தூக்கிக் கொண்டு இருப்பது போல் ஒட்டாமல் இருக்கிறதா?
5. கிளி பொந்துகள் போன்று அமைப்பு உள்ளதா அல்லது மரங்களில் வெடிப்பு உள்ளதா
6. மரத்தின் மொத்தம் மட்டைகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 28 உள்ளதா?
7. மரத்தில் இலைகள் ஆங்கில எழுத்து v. வீ வடிவில் வெட்டப்பட்டு உள்ளதா அதாவது முக்கோண வடிவில் மட்டையின் பாதி இடத்தில் வெட்டப்பட்டுள்ளதா
8. இலைகளின் நுனி காய்ந்தது போல் உள்ளதா? காய்ந்தது போல் இருந்தால் அதன் உள் பகுதியில் வெள்ளை படிவம் உள்ளதா
9. அடி மட்டைகள் தொங்கிக்கொண்டு உள்ளதா
10.காய்கள் முறையான வடிவத்தில் உள்ளதா
அதன் மேல்பறப்பில் சிவப்பு நிற திரவம் வழிவது போல் உள்ளதா
11. புதிதாக பாலை வந்துள்ள நிலையில் தரையில் பூக்கள் அதிகம் கொட்டி உள்ளதா குரும்பைகள் கொட்டி உள்ளதா அல்லது காய்களில் கீழே விழுந்துள்ளதா
12. மட்டைகளின் அடிப்பகுதியில் கருத்துப்போய் உள்ளதா மரத்தூள் கீழே கொட்டியது போல் உள்ளதா
13. ஒவ்வொரு மரத்திலிருந்தும் சராசரியாக பறிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா அல்லது தோப்பின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதா
14. பாசன நீர் அனைத்து மரங்களுக்கும் சரியாக செல்கிறதா? சரியான இடைவெளியில் கொடுக்கப்படுகிறதா? எவ்வளவு தண்ணீர் அல்லது எவ்வளவு நேரம் கொடுக்கப்படுகிறது என்ற விபரம்
15. இடு பொருள்கள் எவ்வாறு கொடுக்கப்படுகிறது அனைத்து மரங்களுக்கும் சரியாக பிரித்து கொடுக்கப்படுகிறதா என்ற விபரம்
16. மரத்தினுள் அடிக்கும் வெயிலின் அளவு, அதனை பொறுத்து ஊடுபயிர் எதுவும் செய்ய வாய்ப்பு உள்ளதா?
17. ஒவ்வொரு தென்னைக்கும் வட்டப்பாத்தி அல்லது சதுர பாத்தி உள்ளதா? நிலம் அரிக்கப்பட்ட மாதிரி உள்ளதா
18. தென்னை மட்டைகள் மஞ்சளாக இருந்தால் அதற்கான காரணம் என்ன? தண்ணீர் கொடுக்காததா அல்லது இடுபொருள் கொடுக்கப்படாததா
19. களைக்கொல்லி அடிக்கப்பட்டுள்ளதா? கடைசியாக பசுந்தாள் உரங்கள் வளர்த்த விபரம்
20. தரைவழியாக கடைசியாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பு பொருட்களின் விபரம்

தோப்பிற்கு செல்லும்போது உத்தேசமாக ஆய்வு செய்து ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்ளவும் .தென்னையிலிருந்து முறையான லாபம் கிடைக்க இந்த விபரங்கள் பலன் அளிக்கும்.

தகவல்

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

காய்கறி பயிர்களுக்கு இத்தனை இடுபொருட்கள்

காய்கறி பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள்.

1. ஜீவாமிர்தம்
2. அமிர்த கரைசல்
3. பஞ்சகவ்யம்
4. இஎம்
5. வேஸ்ட் டி கம்போஸர்
6. புண்ணாக்கு கரைசல்
7. எருக்கு கரைசல்
8. தொல்லுயிர் கரைசல்
9. நொதித்த மாட்டு சிறுநீர்
10. மீன் அமிலம்

Continue reading

மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை

மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை. நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம்.

Continue reading

சீமைக்கருவேலம் : விவசாயிகளின் கடைசிப் புகலிடம்

Prosopis_juliflora

சீமைக் கருவேலத்தின் தாயகம், பண்புப் பெயர், அறிவியல் பெயர், அட்டவணைப் பிரிவு இத்யாதி இத்யாதி விபரங்களெல்லாம் ஏற்கனவே திகட்டும் அளவிற்கு வெகுஜனப் பத்திரிகைகளில் ஊட்டிவிட்டார்கள். அதனால் சீமைக் கருவேலங்களைச் சுற்றி உண்டாகும் சில நடைமுறைப் பிரச்சனைகள், அதன் பின்னால் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் கொஞ்சம் பார்க்கலாம்.

பூர்வீக மரம், புகுத்தப்பட்ட மரம், இயல் தாவரம், அயல் தாவரம், நல்ல மரம், கெட்ட மரம் என்கிற பதாகைகளைத் தூக்கிக் கொண்டு பல குழுக்கள் வரிசையாகக் கிளம்பிவிட்டன. முதலில் கெட்ட செடி என்று பார்த்தீனியத்தை வேரறுக்கப் புறப்பட்டது. பிறகு அயல்தாவரங்களென அறியப்பட்ட அனைத்தையும் வேரறுக்கப் புறப்பட்டது. இன்று கெட்ட மரம் என்று சீமைக் கருவேலம் மரத்தை வேரறுக்கப் புறப்பட்டுவிட்டது.

Continue reading