Category: Agriculture News

உயிர் உரங்கள்

ரைசோபியம்

ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித் தோற்றம்,இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும்.

Continue reading

இலந்தை தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மர

இலந்தைமரம்

தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மரம்……….

#விதைஇயக்கம்
#தெற்குஆனைக்கூட்டம் | #சிவகாசி

*மரத்தின் பெயர் 😗 *இலந்தை மரம்**

தாவரவியல் பெயர் : சிசிபஸ் ஜுஜுபா

ஆங்கில பெயர் : Jujube tree

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்

தாவர குடும்பம் : ராம்னேசியே

பொதுப்பண்புகள் :

🌳 இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம்.

🌳 இந்த மரம் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. இலந்தை மரம் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய மரமாகும்.

🌳 வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.

🌳 குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.

🌳 புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது.

🌳 பழங்களின் விதை மிகவும் கெட்டியாக இருக்கும்.

🌳 அமெரிக்க, நியூயார்க்கில் அதிகமாக இலந்தை காணப்படுகிறது.

🌳 தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் இலந்தைமரம் அதிகம் வளர்கிறது.

பயன்கள் :

🌳 வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.

🌳 உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.

🌳 உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

🌳 இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும்.

🌳 உடலில் மேற்பகுதில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது இந்த இலைகளை அரைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

🌳 இலந்தை பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

🌳 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74%, மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.

🌳 இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

🌳 இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன.

🌳 இலந்தை பழம் உண்பதால் மூளை புத்துணர்வு பெறும்.

🌳 இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருள்களாகப் பயன்படுகின்றன.

🌳 மரத்துப் பட்டையையோ, இலைகளையோ நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிருடன் கலந்து குடிந்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும்.

🌳 மரப்பட்டையை அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து சிரங்குகள், உடம்பில் காயம்பட்ட இடங்களின் மீது தேய்த்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது.

வளர்ப்பு முறைகள் :

🌳 இலந்தையில் பல இரகங்கள் உள்ளன. பனரசி, உம்ரான், கோலா, கைத்தளி, முண்டியா மற்றும் கோமா கீர்த்தி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

🌳 அனைத்து மாதத்திலும் பயிர் செய்ய ஏற்றது இலந்தை மரம். ஆனால் மார்கழி மாதம் சிறந்த பருவம் ஆகும்.

🌳 இலந்தையை உவர் நிலங்களில் வறட்சிப் பகுதிகளில் பயிரிடலாம். இருமண்பாட்டு செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.

🌳 குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவிட்டு விதையை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் தரம் பிரிக்கப்பட்டு , பெரிய விதைகளை விதைத்துவிட வேண்டும்.

🌳 நிலத்தை நன்கு உழுது 8 மிட்டர் இடைவெளியில் 1 மிட்டர் ஆழ, அகல மற்றும் நீளத்தில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு 2 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு குழிகளை நிரப்பி நீர் பாய்ச்சி குழிகளை ஆறவிட வேண்டும்.

🌳 6- 12 மாதங்கள் ஆன நாற்றுகளை குழிகளில் நடவு செய்யலாம்.

🌳 இளஞ்செடிகளுக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாகப் பயிரிடப்பட்டு இலந்தை மரங்களுக்குத் தேவையான நீரைத் தேக்குவதற்கு சாய்வுப் பாத்திகளை பெரிதாக அமைக்கவேண்டும்.

🌳 எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் அதிகமான காய்ப்பிடிப்பு ஏற்படும். காய்க்கத் தொடங்கிய இலந்தை மரங்களுக்கு குறைவான நீர் போதுமானது.

🌳 ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 20 கிலோ தொழு உரம், 1 கிலோ அளவுக்கு தழை, சாம்பல், மனிசத்துள்ள உரம் இட வேண்டும். இரண்டு வருடத்திற்கு பின் 30 கிலோ அளவுள்ள உரங்களை இட வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

🌳 பழங்கள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்பொழுது அறுவடை செய்ய வேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 70 – 80 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்….

Arun Sankar

மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா

*இன்றைய (18/01/2020) வேளாண்மை செய்தி*

*மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா?*

By MuruganSivasakthi Sachinsakthi

மண் பரிசோதனை :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை மாற்றுங்கள்.

மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?

உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட
மண்ணில் உள்ள கார, அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும்
மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல்.
மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும்.
பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும்.
தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும்.
இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும்.
அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும்.
மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம்.
மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள்

மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
உவர்த்தன்மை (ஈசி 3.0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும்.
மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.
சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது.
மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்

மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்
மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்

நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
உரமிட்டடவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது
மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில் எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

இவ்வாறாக குறைநத பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 1/2 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

சேகரித்த மண்

நன்றாக கலக்கி விடுதல்

நான்காக பிரித்தல்

எதிர் பகுதியை நீக்கிவிடுதல்
சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.

பைகளில் சேகரித்தல்

விவரங்கள் குறிப்பிடப்பட்ட சேகரித்த மண்
பயிர் வகை மண் மாதிரி எடுக்கும் ஆழம் (செ.மீ.)
புல் மற்றும் புல் வெளி 5 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறு தானிய பயிர்கள் (சல்லி வேர் பயிர்கள்) 15 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் (ஆணி வேர் பயிர்கள்) 22 செ.மீ ஆழத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும்.
நிரந்தர பயிர்கள், மலைப் பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் 30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
மண் மாதிரிகளை ஆய்வு செய்யும் இடம்

வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம் (அ) இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம் (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைந்த ஆய்வு கூடங்களின் மூலம் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன்பெறவும்.

மண் பரிசோதனை ஆய்வகங்கள்

இடம் முகவரி
கடலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கரும்பு அராய்ச்சி நிலைய வளாகம்
சேமமண்டலம்,
கடலூர் – 607 001
காஞ்சிபுரம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சுபேட்டை
காஞ்சிபுரம் -631 502
வேலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடியாத்தம் TK
மேலலத்து 638 806
வேலூர் மாவட்டம்
தர்மபுரி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்
தர்மபுரி – 638 702
சேலம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
35/37, B 11 ராஜாராம் நகர் க்ராஸ்
வனியகலா கல்யாண மண்டபம் அருகில்
சேலம் – 636 007
கோயமுத்தூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
லாலி ரோடு,
அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல்
கோயமுத்தூர் – 642 013
புதுக்கோட்டை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
குடுமியான்மலை – 622104
புதுக்கோட்டை மாவட்டம்
ஈரோடு

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
திருச்சி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காஜாமலை
திருச்சி – 620 020
மதுரை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை -625 001
ஆடுதுறை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஆடுதுறை – 612101
தஞ்சாவூர் மாவட்டம்
தேனி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
136/2, 2வது வீதி,
சடயல் நகர்
பங்களா மேடு (தெற்கு)
தேனி – 625 531
தேனி மாவட்டம்
திண்டுக்கல்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
3, கூட்டுறவு காலனி
திண்டுக்கல் – 624 001
சிவகங்கை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
(TNSTC கிளை – அருகில்)
தோடி ரோடு
சிவகங்கை – 630 561
பரமகுடி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
திருநெல்வேலி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
எண்.37, சங்கர் காலனி
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி -2
தூத்துக்குடி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி– 628 501
தூத்துக்குடி மாவட்டம்
நாகர்கோவில்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, சுந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001
ஊட்டி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
ஊட்டி – 643 001
நாமக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
142 –H, கிஷோர் வளாகம்
(HDFC வங்கி எதிரில்)
சேலம் மெயின் ரோடு
நாமக்கல் – 637 001
திருவாரூர்

ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை வளாகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம் மேல்மாடியில்
திருவாரூர் – 610 001
திருவள்ளூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் to ஆவடி ரோடு
திருவள்ளூர் – 602 003
பெரம்பலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
93F/21A வெங்கடாசலபதி நகர்
புது பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கிருஷ்ணகிரி

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் துணை அலுவலர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்
கிருஷ்ணகிரி – 635 001
விருதுநகர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் காம்ப்ளக்ஸ்
விருதுநகர் – 626 001
கரூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
தில்லை நகர், ராஜ்னூர்
தான்தோனி
கரூர் – 639 003
அரியலூர்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வளஜனகரம்
அரியலூர் – 621 704
நாகப்பட்டிணம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் வளாகம்
நாகப்பட்டிணம் – 611 001
விழுப்புரம்

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம் முக்கிய திட்ட வளாகம்
விழுப்புரம் – 605 602
திருவண்ணாமலை

முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
கோட்டம்பாளையம் ரோடு
வெங்கிகால்
திருவண்ணாமலை – 606 604
நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

இடம் முகவரி
திருவள்ளூர் முதுநிலை வேளாண் அலுவலர்
நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்
காக்களூர்
திருவள்ளூர் To ஆவடி ரோடு
திருவள்ளூர்
திருவண்ணாமலை முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
காமண்பாளையம், வெங்கிகல்
திருவண்ணாமலை – 606 604
விழுப்புரம் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் இணை அலுவலர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலுக வளாகம்
விழுப்புரம்

கிருஷ்ணகிரி முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம்
ரகுபதி மருத்துவமனை அருகில்,
கிருஷ்ணகிரி – 635 001
திருப்பூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் விரிவாக்க மையம்
பல்லடம்
திருப்பூர்
ஈரோடு முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
41/74 பூங்குன்றனார் வீதி
கருங்கல்பாளையம்
ஈரோடு – 638 003
மதுரை முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
52/வடக்கு சித்திரை வீதி
மதுரை – 625 001
பெரம்பலூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
937/21A, வெங்கடாசலபதி நகர்
புதிய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் – 621 210
கரூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
1/163/1, சேலம் மெயின் ரோடு
வெண்ணமலை
கரூர் மாவட்டம்
நாமக்கல் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
நாராயணம்பாளையம்
மோரூர் அஞ்சல், திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் – 637 304
திருவாரூர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
19B, பெரிய மில் வீதி
திருவாரூர் – 610 001
பரமகுடி முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பரமகுடி 623 707
இராமநாதபுரம் மாவட்டம்
தூத்துக்குடி முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
வேளாண் ஆராய்ச்சி நிலையம்
சாத்தூர் ரோடு
கோவில்பட்டி – 627 701
தூத்துக்குடி மாவட்டம்
நாகர்கோவில் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
20c, செளந்தரராஜன் காம்பவுண்ட்
இசக்கியம்மன் கோவில் வீதி
நாகர்கோவில் – 629 001
நாகப்பட்டிணம் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
பஞ்சாயத்து யூனியன் காம்பவுண்ட்
வெள்ளிபாளையம்
நாகப்பட்டிணம் – 611 001
விருதுநகர் முதுநிலை வேளாண் அலுவலர்
மண் பரிசோதனை ஆய்வகம்
No. 185 – ஸ்டேட் பாங்க் 2வது மாடி
மதுரை ரோடு
அருபுக்கோட்டை – 629 101
விருதுநகர் மாவட்டம்.

விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி

விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி

வேளாண் குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும். தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை வகிக்கின்றது. இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் தான் அதிகம் காணப்படுகிறது.பயறு வகை பயிரிடாத நிலத்திலும் ரைசோபிய நுண்ணுயிர்கள் குறைவான அளவில் இருக்கும். தொடர்ந்து பயறு வகைகள் பயிரிட்டு வரும் நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். ஆனால் மண்ணில் இடப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள் நிலத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி நிலத்தில் ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை கணிசமாக குறைக்கிறது. ஆகவே பயறு வகைகளை விதைக்கும் போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்த ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை நிலத்தில் அதிகமாக்கி அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்த நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம்.
*தேவையான பொருட்கள்*

*ரைசோபிய நுண்ணுயிர் உரம்*
பயறு வகை விதைகள்
விதை நேர்த்தி செய்யத் தேவையான பாத்திரம் மற்றும் குளிர்ந்த 10 சத மைதா கஞ்சி (அல்லது) அரிசி கஞ்சி
அந்தந்த பயிறு வகைகளுக்குரிய நுண்ணுயிர் ராசிகள்
*செய்முறை*
ஒரு ஏக்கருக்கு தேவையான தேவையான 10 கிலோ சான்று விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விதை நேர்த்திக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு பாக்கெட் அல்லது 200 கிராம் ரைசோபிய உயிர் உரம் தேவைப்படும்.
10 சதவீத மைதா கஞ்சியை தயார் செய்து, 10 கிலோ விதைக்கு 1 லிட்டர் கஞ்சி கொட்டு அனைத்து விதைகளும் ஒட்டும் தன்மை உடையதாக இருக்குமாறு நன்கு கலக்க வேண்டும் பின்பு தேவையான உயிர் உரங்களை (ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசடோபேக்டர்) விதைகளின் மேல் தூவி தொடர்ந்து கலக்க வேண்டும்.
மைதா கலந்த விதைகளை உயிர் உரத்துடன் கலக்கும்போது மைதாவின் ஒட்டும் தன்மையினால், ஒரேமாதிரியான விதை மூலாம் கிடைக்கிறது.
விதைகளை நிழலில் உலர்த்தி உடனடியாக விதைப்புக்கு பயன்படுத்தலாம்.
*பரிந்துரை:*
ஒரு கிலோ விதைகளுடன் 10 சதவீத மைதா கஞ்சி அல்லது 200லிருந்து 300 மில்லி கஞ்சியுடன் 1 கிலோ விதைக்கு 200 லிருந்து 300 கிராம் உயிர் உரத்தை கலப்பதனால் வயலில் பச்சைப்பயிறு, உளுந்து, பருத்தி, தக்காளி மற்றும் கத்தரி ஆகியவற்றின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.

*நன்மைகள்*

உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் மண்ணின் வளத்தை அதிகப்படுத்தலாம்.
விதைகளை விதைக் கருவிகள் கொண்டு விதைக்க ஏதுவாகிறது.
ஒத்த விதை அளவு மற்றும் அமைப்புடைய விதைகளைப் பெறமுடியும் மற்றும் விதையைக் கையாளும் முறை எளிதாகின்றது.
விதை கருவி கொண்டு விதைகளைப் பிரிக்கும்போது விதைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் எளிதாக பிரிக்க உதவுகின்றது.
சிறிய மற்றும் வேறுபட்ட உருவ அமைப்புடைய விதைகளை உயிர் உரம் கொண்டுவிதை மூலாம் பூசும் போது அதனைக் கையாளும் முறை எளிதாகின்றது.
மிகச்சிறிய விதைகளைக் கூட இதன் மூலம் துல்லியமான முறையில் விதைத்து உரிய பயிரின் அளவை பெறமுடியும்.
விதை மூலாம் பூசுவதால் விதையின் எடை அதிகமாவதோடு தூவுதல் விதைப்பு ஏதுவாக அமைகின்றது.
சிறிய விதைகளைக் கையாளும் முறை எளிதாவதுடன் விதை அளவும் குறைக்கப்படுகின்றது.

ஆத்தி மரம் இடிதாங்கி மரம்

ஆத்தி மரம்


#JaGadeesh Jay

தாவரப்பெயர் – Bauhinia racemosa
தாவரக்குடும்பம் – Caesalpiniaceae
வேறு பெயர்கள் – ஆர்,Bidi Leaf Tree
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, கனி, பட்டை,வேர், மரம்.

வளரியல்பு – ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும்.

இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும்.

பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும் கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும்.

கனி ஒரு சிம்பு. 6 – 12 அங்குல நீளமும் 3/4 – 1 அங்குல அகலமும் இருக்கும்.

இலக்கியங்களில் பாடப்பெற்ற மரங்களில் ஆத்தி மரத்துக்கும் தனி இடம் உண்டு. இந்த மரம் இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு பசுமையான மரம். சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இலைகள் அரை வட்ட வடிவத்துடன் ஒன்றை ஒன்று இணைத்தது போன்று காணப்படும். . மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். காய்கள் இளம் பச்சை நிறம் கொண்டு கனியாகும்போது பழுப்பு நிறமாகிவிடும்.

ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணி சோழன் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் ஆத்தி மரம் நிறைந்த பகுதிதான் இன்றைக்கு ஆர்க்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆர்ப்பாக்கம் என்ற பெயரில் ஒரு ஊரும்உள்ளது. பழமை வாய்ந்த சோழர்களின் தலைநகராகவும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஆதி காலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்தமையால்தான் ஆரூர் எனப்பட்டது.

காட்டு அத்தி என்று அழைக்கப்படும் ஆத்தி மரத்துக்கும் மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கல்லீரல் வீக்கம் நோயை நம்மால் உடனடியாக உணரமுடியாது. இதுபோன்ற நோய்களில் இருந்தும், தகாத உடலுறவால் ஏற்படும் நோய், வெட்டை நோய், பித்தம், வாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரமாக விளங்குவது ஆத்தி மரம்.

தமிழகத்தில் ஆத்தி மரம் மலை அத்தி, அரசமந்தம், பேயத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் இலை, காய், கனி, பட்டை, வேர் என அனைத்து பாகமும் மருத்துவ குணம் வாய்ந்தது. மரத்தின் பட்டையில் இருந்து நார் எடுக்கலாம். வீடுகளில் அலங்கார மரமாகவும் வளர்க்கிறார்கள். ஆத்தி மரத்தின் வேர், பட்டையை இடித்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால்

கல்லீரலில் ஏற்பட்டு இருக்கும் வீக்கம் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். நல்ல பசியை உண்டாக்கும். குடற்புழு மடிந்து போகும். ஆத்திக் கனியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்துவிட்டு பிறகு அந்த தண்ணீரால் வாய்க்கொப்பளித்தால் நாக்கில் ஏற்படும் புண், தொண்டை நோய் குணமாகும். பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகிவிடும். சிறுநீரக நோய்களுக்கும், புற்று நோய்களுக்கும் ஆத்தி மரம் மருந்தாகப் பயன்படுகிறது.

இம்மரத்தின் பட்டையை சீதபேதி, காய்ச்சல், தோல் நோய்களுக்கும், உடல் வீக்கத்துக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும், பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்தவும், இந்திரிய கோளாறுகளுக்கும், தகாத உடலுறவால் ஏற்படும் வெட்டை நோய்களுக்கும், குஷ்ட ரோக தடிப்புகளுக்கும் மருந்தாகக் கொடுக்கிறார்கள். பேதி, மாந்தம், இருமலுக்கு நல்ல மருந்து. நச்சை நீக்குகிறது.

காய் சிறுநீர் பெருக்கியாக நோயாளிகளுக்கு பயன்படுகிறது. மலர் சீதபேதியை கட்டுப்படுத்தி குடற் புழுக்களை கொல்கிறது. விதை விஷக்கடிக்கும், புண்களுக்கும் மருந்தாகிறது. பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்நீரால் குளித்து வந்தால் உடலில் உள்ள படை நீங்கிவிடும்.

இடிதாங்கி மரம் என்றும் குறிப்பிடுகின்றனர்

அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு

அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு:
#from fb Sebastian Britto

குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி
10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9.5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அனைத்து பயிர்களுக்கும் 15 நாட்களுக்கொரு முறைத் தெளிக்கலாம்.

#from fb Sebastian Britto

 

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி
by

Subash Krishnasamy 

விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை.

அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை.

ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும் ஒரு குழுமொழியை வைத்துள்ளார்கள்.

அதன்மூலம் நமக்குப் புரியாமல் நமது கால்நடைகளுக்கு அந்தரங்கமாக ஒரு விலை முடித்துக்கொண்டு நம்மிடம் சும்மா நடித்து ஏமாற்றுவார்கள்.

அவர்களின் மொழியை நாமும் தெரிந்துகொள்வது நல்லது.

எனக்குத் தெரியாது.

தெரிந்த நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த சங்கேதச் சொற்களையும் அதற்கான துகைமதிப்பையும் இங்கு பகிர்ந்தால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்!

உதாரணமாக ஆழி, தட்டை, வாச்சு, முறி, பொருத்து, போன்றவை.

 

சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்யும்போது வியாபாரிகள் பேசப்படும்,”விலை
பற்றிய ரகசிய
பேச்சுகள்..

வாச்சி−100
ஆனிமுறி−150
காளை−200,2000,20000,
காளைமுறி−250,2500,25000,
தொழுது−300,3000,30000,
தொழுதுமுறி−350,3500,35000,
பனயன்−400,4000,40000,
சதுப்பான்−400,4000,40000,
பனயமுறி−450,4500,45000,
சதுப்பாமுறி−450,4500,45000,
தட்டை−500,5000,50000,
தட்டைமுறி−550,5500,55000,
பொறுத்து−600,6000,60000,
பொறுத்துமுறி−650,6500,65000,
ஆழி−700,7000,70000,
ஆழிமுறி−750,7500,75000,
வழுவு−800,8000,80000,
வழுவுமுறி−850,8500,85000,
தாயம்−900,9000,90000,
தாயமுறி−950,9500,95000,
துருவம்−1000,10000,100000
துறுவமுறி−1500,15000,150000
பாறை−1000,10000,100000,
பாறைமுறி−1500,15000,150000..

By Tiruppur Maheshkumar