Category: News

இயற்கை வேளாண்மைக்கு எது தடை?

இயற்கை வேளாண்மைக்கு எது தடை?

இப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.

ஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன?

Continue reading

டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி

உங்கள் செடியில் காய் சிறிதாக இருக்கிறதா?, பூ பூக்கவில்லையா? செடியின் இலைகள் சிறிதாக உள்ளதா? இந்த மாதிரி பிரச்சனைகள் சரியாக்க Compost Tea தயார் செய்து அதை செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். காய் பிடிக்கும் செடி நன்றாக வளரும்.

டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?

ஒரு அகலமான பக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு பங்கு மண்புழு உரத்தை நிரப்ப வேண்டும்.

பின் ஒரு கைப்பிடியளவு வேப்பம்பிண்ணாக்கு, ஒரு கைப்பிடியளவு கம்போஸ்ட் உரம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும்.

பின் பக்கெட் முழுவதும் தண்ணீர் ஊற்றி நிரப்பி, அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக கரைத்து கொள்ளவும்.

பிறகு இவற்றுடன் ஒரு கட்டி வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு இந்த கலவையை ஒரு இடத்தில் வைத்து மூன்று நாட்கள் நன்றாக கலந்து நிழலில் மூடி வைக்க வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் ஊற வைப்பதினால் அவற்றில் உள்ள நுண்ணுயிரிகள், நல்ல பக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது.

மூன்று நாள் கழித்த இந்த கலவையை செடிகள் மீது 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்
அல்லது செடியைச் சுற்றி ஊற்றி விடலாம் இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்கு வளர ஆரம்பிக்கும்,

அதேபோல் காய்கள் மற்றும் பூக்கள் அதிகம் பிடிக்க ஆரம்பிக்கும்.

விவசாய நிலத்தில் எலிகள் தொல்லை கட்டுபடுத்த

ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும்.

Continue reading

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா
Pamayan.

காலையே கலசப்பாக்கம் தோழர் இராசேந்திரன் அவர்களின் கவனிக்கப்படாத அழைப்பைப் பார்த்தேன்.

பயணத்திற்கு கிளம்பும் அவசரம். ஏதேனும் ஒரு கட்டுரை பற்றியோ அல்லது இது குறித்து எழுதுங்கள் என்று கூறவோ இருக்கும் என்று நினைத்து, பேருந்தில் பயணிக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பேருத்தில் படிக்க சம்பரானில் காந்தி புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டிருந்த போது இராசேந்திரனிடம் பேசிய பின் படிக்கலாம் என்று பயணத்தின் போது அழைத்த பேசிய பின் மனது கனத்துப் போனது.

இன்னுமொரு மூத்த அறிஞரை, முன்னேர் ஒன்றை இழந்து விட்டோமே என்று பெரும் சோகம் அப்பியது மனதில்.

தமிழறிஞராக, தமிழ் கணக்கியல் அறிஞராக, தொல்லியலாளராக, விதை சேமிப்பாளராக ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் இயங்கிக் கொண்டிருந்த வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா நேற்று இரவு இயற்கையெய்திய சேதி தான்.

செங்கம் வெங்கடாசலம் ஐயா என்று தான் என் மனதில் நிற்கிறார் வளையாம்பட்டு வெங்கடாசலம் அவர்கள்.

முதலில் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் கண்ணிற்குள் இருப்பது கருத்த இராகி இரகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அது விளையும் மலைப் பகுதி, விளைவிக்கும் பழங்குடி மக்கள் என விளக்கியது மட்டும் மனக்கண்ணில் இன்றும் நிற்கிறது.

ஏறத்தாழ 40 இராகி வகைகள் என்று நினைக்கிறேன். எல்லாம் தமிழ் நாட்டு இரகங்கள். இராகியில் இத்தனை இரகங்களா என்ற என் முதல் வியப்பை முறியடிக்கும் வகையில் அடுத்து அவர் காட்டியது நெல் இரகங்கள்.

இதெல்லாம் தமிழகத்து சொத்து என்று விளக்கினார் மிகுந்த குதூகலத்துடன்.

அப்போதெல்லாம் இந்தப் பெருமை மிகு பாரம்பரியத்தின் மீது பெருமை ஏது?

இந்த நிகழ்வு அநேகமாக 1990 களின் மத்தியில் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை.

இவரது விதைகள் மீதான அக்கறையும் கவனிப்பும் நம்மாழ்வாரை ஈர்த்ததில் வியப்பில்லை. நம்மாழ்வார் பல சந்தர்ப்பங்களில் வெங்கடாசலம் பற்றி சிலாகித்து பேசியதுண்டு .

பொறியாளரான இவரது இன்னொரு தணியா ஆர்வம் கணக்கியல். தமிழர் கணக்கியல் மேதை. தமிழரின் தொன்மம் குறித்த இவரது ஆய்வுகளும் கட்டுரைகளும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையானது. திணையில் குறித்த பார்வை சிறப்பானது.

மூன்று மாதங்கட்குப் முன் கலசப்பாக்கத்தில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு தலைமை இவரே. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடந்த சந்திப்பு. பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அவருக்கு. நா தழுதழுக்க,”எப்படி இருக்கீங்க செல்வம், நிறைய சுத்தறீங்க, உடம்பையும் பாத்துக்கனும்,” என்ற போது ஒரு மூத்த இளைஞனின் அன்பும் அக்கறையும் கவ்விக் கொண்டது.

தளர்ந்திருந்தார். குரலும் அப்படியே.

என்ன வயதாயிற்று என்றேன். 94 என்றார். ஆனால் அப்படி தெரியவில்லையே என்றேன். 80 களின் ஆரம்பத்தில் இருப்பார் என்று நினைத்தேன். இந்த வயதில் தலைமை உரையை எழுந்து நின்று பேச விரும்பினார். எங்களின் வற்புறுத்தல்கள் தாண்டி நின்றபடியே பேசினார்.

சிறு(அருந்) தானியங்கள் வளர்த்த உடல் அல்லவா!!!

தமிழர்களின் பெருமைகளை, தொன்மங்களை, சிந்து வெளியோடு இருந்தத் தொடர்புகளையெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர். இதற்காக “நன்னன்” என்ற பெயரில் இதழ் நடத்தினார். அதில் தமிழர்களின் கணக்கியல், தொன்மை குறித்தெல்லாம் எழுதினார்.

ஐயா அவர்களுக்கு செய்ய வேண்டிய்இறுதி மரியாதையை செய்ய இயலா நிலை கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.

மிகுதியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவர். இருப்பினும் தனக்குப் பின் இந்த வேலைகளை எடுத்துச் செல்லும் (விதைகள் தளத்தில்) அடுத்த தலைமுறையை, இரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார். தன் வேலைகள் கவனிக்கப்படாமல், மதிக்கப்படாமல் இருக்கிறதே என்ற ஏக்கமின்றி மறைந்திருக்கிறார்.

வெங்கடாசலம் ஐயாவின் இறுதிப் பயணத்திற்கு பங்கேற்க இயலாமை பயணம் முழுதும் இருக்கும். உங்களின் பிள்ளைகளுடன் தொடர்ந்து இயங்கப் பலரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையாவது இச்சமூகம், அடுத்த இரு தலைமுறைகள் தந்திருப்பது சற்றே மகிழ்வு தான்

உங்களது நீநீநீநீநீண்ட பயணத்தை முடித்துக் கொண்டீர்கள்.

நாங்கள் தொடர்ந்து நடப்போம். நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் நம்மாழ்வார், நீங்கள். போன்றவர்களின் பணியை சுமந்து கொண்டு ….

தமிழ் சமூகம் அடைய வேண்டிய தூரம், தமிழக விவசாயிகள் செய்திட வேண்டிய காரியங்கள் மிக நிறைய உள்ளன.

உங்களையொத்தவர்கள் அக்கறைப்பட்ட காரியங்களுக்கான பயணத்தை தொடர்வோம் என்ற நம்பிக்கையை உங்களுக்கு கொடுக்க முடிந்தது சற்றே மகிழ்ச்சி தான்.

நன்றிகள் ஐயா. தொழுது வணங்குகிறேன்.

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்

விவசாயிகள் தோல்வி என்ன? , விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங் ?

செந்தில் சின்னசாமி

1 . விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறர்ர்கள்

2 . எந்த சூழல் ,என்ன விவசாயம் செய்யலாம் என்ற பொது அறிவு சுத்தமாக இல்லை .., இந்த விவசாயிகளுக்கு பொதுவாகவே சொந்த புத்தியும் இருக்காது , சொல்லு புத்தியும் இருக்காது, தானே அறிவாளி என்ற மட்டமான புத்தி .

3 . அந்த ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் மாணவர்களை போல பக்கத்தில் இருப்பவர் என்ன விதைக்கிறர்ர்களே, பயிர் செய்கிறர்ர்களோ அதையே பயிர் செய்வார்கள் .

4 விவசாயத்தில் ஒரு பிளான் என்பதே சுத்தமாக இல்லை . மனம் போன போக்கில் விவசாயம் , செய்த் வேலையவே திருப்பி திருப்பி செய்யும் மன நிலை , ஒரு சிஸ்டம் அவர்களிடம் இல்லை

5 . என்ன முதலீடு போடுகிறோம் , என்ன வரும் என்ற வியாபார யுத்தியும் இல்லை , அதை யாருக்கு விற்க போகிறோம் , எப்பொழுது விற்க போகிறோம் என்ற அறிவு சுத்தமாக இல்லை .

6 .தனக்கு தெரிந்ததையே திருப்பி திருப்பி விவசாயம் செய்யும் மனநிலை . கொஞ்சமும் மாற்றி யோசித்து விளைச்சலை பெருக்கும் மன நிலை இல்லை , யாரவது ஏதாவது சொன்ன அதையவே பிடித்து கொள்வது , தட்ட முட்ட விவசாயிகள்

7 . மழை அதிகமாக பெய்தால் என்ன பண்ணுவேன் , மழையே பெய்யாவிட்டால் என்ன பண்ணுவேன் , என்ற தொலை நோக்கும் பார்வை இல்லை . கண்டதையும் விவசாயம் செய்ய வேண்டியது, கடைசியில் குறை சொல்வது …, உதாரணத்திற்கு தீபாவளி நேரத்தில் மழை வரும் , மார்கழியில் பனி வரும் இதையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை .

8 . தான் என்ன செலவு செய்தேன் என்ற கணக்கு சுத்தமாக இல்லை , எழுதி வைப்பதும் இல்லை , விவசாய முதலீட்டுக்கு இருக்கும் பணத்தை வேறு ஏதாவ்துக்கு செலவு செய்வது ,அப்புறம் கடன் வாங்கி பயிரிடுவது , ஏதாவது இயற்கை சீற்றம் வந்தால் மொத்தமும் போச்சு என்று நிவாரணத்துக்கு ஏங்குவது ..

9 , அரசாங்கம் அளிக்கும் மானியங்ககளை கேட்டு பெறுவது இல்லை , அதை யாரிடம் வாங்குவது என்ற அறிவும் இல்லை , அல்லது தெரிந்து கொள்வதும் இல்லை , பொத்தாம் பொதுவாக கிடைக்காது என்று ஒதுங்கி விடுவது . அல்லது படிக்க வில்லை என்று சொல்வது !! சாதரண விஷயம் இதுக்கு எதுக்கு படிப்பெல்லாம் – சரி ஏன் படிக்க வில்லை ?

10 . பக்கத்துக்கு தோட்டத்து காரர்களிடம் எப்பவும் சண்டை , வாய்க்காலுக்கும் , வரப்புக்கும் சண்டையோ சண்டை . ஒற்றுமை குணம் இல்லாத விவசாயிகள் , பொறாமை குணம் அதிகம் உள்ளவர்கள் தொழில் விவசாயம

11 , உரம் ஏன் போட வேண்டும் , எதுக்கு போடவேண்டும் , அதற்க்கு ஏதாவது மாற்று உண்டா என்ற அடிப்படை அறிவு கூட இல்லை . உரத்தை , பூச்சி கொல்லியும் வாங்கி கொட்ட வேண்டியது .. தற்காலிக வருமானத்தை பார்த்து அனுபவித்து விட்டு காணாமல் போய் விடுவது ..

12 , பல விதமான பயிர்களை வைத்து விவசாயம் பண்ணுவதில்லை , ஒன்று போனாலும் ஒன்று கிடைக்கும் , மொத்தமாக ஒரே பயிரை போட வேண்டியது வந்தா பெரிய லாபம் , இல்லாட்டி நாட்டமே .. ஆடு , மாடு , கோழி என்று பலவிதமான வருமானங்களை பெற வேண்டும் .

13 .மார்கட்டிங் , விற்பனை யுத்திகளை படித்து கொண்டே இருக்க வேண்டும் , வாய்ப்பு கிடைக்கும் போது தரமான பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கலாம் , அது என்னோட வேலை இல்லை என்று ஒதுங்கி கொள்வது

14 , ஒவ்வொருவரும் ,விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களிடம் ட்ரைனிங் எடுக்கவேண்டும் , அதே போல தோல்வி பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ளவேண்டும் , முடிந்த அளவு ஆட்களை குறைந்து கொண்டு , இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். கடுமையா உழைப்பத்ற்கு பதில் , தந்திரமாகவும் ,ஸ்மார்ட்டாகவும் உழைக்க வேண்டும். – இதெல்லாம் யாரும் செய்வதில்லை ..

15 . பெரும்பாலான விவசாயிகள் பொறுப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் , கோவில் க்கு போகிறேன் , மலைக்கு போறேன் , பண்டிகை , பெரியப்ப வீட்டில் இலவு , சித்தப்பா வீட்டில் கல்யாணம் , மாமனார் வீட்டில் கிடா விருந்து இப்படி பெரும்பாலான நாட்கள் வீணடிக்ககிறார்கள் , விவசாயம் பற்றிய அறிவுக்கு ஒரு நிமிடம் கூட செலவு செய்வது இல்லை .

16 . நல்ல படிப்பவர்க்ள டாக்டர் என்ஜினீயர் , அதைவிட கொஞ்சம் கம்மி வக்கீல் ,அறிவியல் , அதைவிட சுமார் தொழில் தொடுங்குறேன் , பேங்க் , கவர்மெண்ட் எக்ஸாம் படிக்கிறேன் னு போயிடுறீங்க ….
எங்கேயும் போக தெரியாதவன் அல்லது சோம்பேறிகள் மட்டும் விவசாயத்துக்கு வந்தா எப்படி விவசாயம் ஜெயிக்கும் .. அவனும் , வீடு , நாடு மொத்தமும் நாசமாக போனதற்கு காரணம்..

டாக்டர் , என்ஜினீயர் , வக்கீல் அரசியில் வாதி , சினிமாக்காரன் தங்கள் பிள்ளைகளை அதே தொழிலில் வைக்கிறான் , பிச்சைக்காரன் கூட தன பிள்ளையை பிச்சை கரண் ஆக்குகிறான் , ..

விவசாயி தன பிள்ளையை விவசாயி ஆக்க ரெடி இல்லை … .

என்னை பொறுத்தவரை …
விவசாயத்தில் நாட்டம் இல்லாமல் , உரம் பூச்சி கொல்லி மருந்து அடிக்காமல் தரமான விவசாயம் செய்ய முடியும் , கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் , சுமாரான லாபம் பார்க்கலாம் .
உழைப்பை விட அறிவு மட்டுமே மூலதனம்

பேராசையின் வெளிப்பாடுகள்

“இயற்கை வளங்கள் இருவகைபடுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணைய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்து கொண்டே போகும். இவை மீண்டும் தன்னுடைய அளவை அல்லது எண்ணிக்கையினை அதிகரித்து கொள்ள நெடுங்காலம் எடுத்து கொள்ளும். அரிசி, மரம், பழம், காய்கள் போன்றவை இன்னொரு வகையான இயற்கை வளங்கள். இது போன்ற பூமியில் விளையும் வளங்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து கொள்ளமுடியும். இவை புதுபிக்க கூடிய வளங்கள் (Renewable Energy) இன்று கூறப்படுபவை. இதில் முதலில் கூறப்பட்ட இயற்கை வளங்கள் பேராசையின் வெளிப்பாடுகள். அவை அனைத்தும் எடுக்கும் பொழுது அழிவிற்கும் வன்முறைக்குமே இட்டு செல்லும்

Continue reading

விதை வழி செல்க

ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது…’

Continue reading