அடி உரங்களின் வகைகள்
பலதானிய விதைப்பு
ஒரு ஏக்கருக்கு 20 கிலோ அளவுள்ள 20 வகை பல வகை தானியங்களை கலந்து நிலத்தில் தெளித்து அது வளர்ந்த பின்பு 45 வது நாளிலிருந்து 50 வது நாட்களுக்குள் மடக்கி உழுது, பின்பு பத்துநாள் பூமியில் மட்குமாறு செய்துவிட்டு பின்பு ஒரு விவசாயத்தை தொடரலாம். விரைவில் மக்குவதற்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் தண்ணீருடன் 5 லிட்டர் வேஸ்ட் டீகம்போஸர் கலந்து மாலைவேளையில் நிலத்தில் தெளிக்கலாம்.
பசுந்தாள் உரங்கள்
ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ அளவுள்ள சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழிஞ்சி போன்ற பசுந்தாள் உரம் தரும் விதைகளை ஏதாவது ஒன்றை தூவி 45 முதல் 50 நாட்களுக்குள் மடக்கி உழுது அதன் பின்பு பத்து நாட்கள் பூமியில் மட்கு மாறு செய்யலாம்.
தொழு உரம் அளித்தல்
ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் லோடு மட்கிய நாட்டு மாட்டு சாணத்தை அல்லது தொழுவுரத்தை நிலத்தில் பரப்பி, உழுது, பண்படுத்திய பிறகு விவசாயத்தை ஆரம்பிக்கலாம்.
உயிர் உரங்கள் தருதல்
தொழுவுரம் உடனடியாக கிடைக்காத நிலையில் ஒரு ஏக்கருக்கு பவுடராக 4 கிலோ அசோஸ்பைரில்லம் 2 கிலோ பாஸ்போபேக்டீரியா ஒரு கிலோ சூடோமோனஸ் கலந்து அக்கலவையை மணலுடன் அல்லது தண்ணீருடன் கலந்து நிலம் முழுவதும் பரப்பி பிறகு உழுது விவசாயத்தை ஆரம்பிக்கலாம்.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்