ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்
ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகள் பிரசவித்த உடன் பால்சுரப்பு அதிகரித்து காணப்படும்.குட்டிகளால் அப்பாலை முழுவதுமாக குடிப்பது இயலாது.

அச்சமயங்களில் தாய் ஆட்டின் மடியில் பால் தங்கி கட்டிகொள்ளும்.

இதன் விளைவாக தாய் ஆட்டின் மடி கல் போன்ற உணர்வை நாம் தொடும்போது உணரமுடியும்.

தாய் ஆட்டின் உடல் வெப்பம் அதிகரித்து தீவனம் எடுக்காமை, சோர்வு ஆகியவை காணப்படும்.
இந்நிலையை தவிர்க்க இரு காம்புகளிலும் சீம்பாலை குட்டி பருக செய்ய வேண்டும்.

தொடர்ந்து 2-3 நாட்கள் குட்டி தெளிவடையும் வரை குட்டி சிறிதளவே பால் குடிக்கும்.குட்டி குடித்த பிறகு பாலை கறக்கலாம் அல்லது பண்ணையில் உள்ள மற்ற குட்டிகளையும் பால் குடிக்க செய்யலாம்.

பாலை வெளியேற்றாவிடில் மடி கட்டி கல் போல் ஆகி, காம்புகள் கருத்து நாளடைவில் பாதிக்கபட்ட காம்பு உதிர்ந்து விடும்.

மடிநோயை எவ்வாறு குணப்படுத்தலாம்?

 

# பாதிக்கபட்ட ஆட்டுக்கு
Pencellin inj – 1ml /10 kg உடல் எடையில்.
Melonex Inj – 1ml /10 kg

இந்த இரண்டு மருந்துகளை 3 நாட்கள் தொடரவும்.

மேல் பூச்சிற்கு
Mastatis gel

அகலமான பாத்திரத்தில் பொறுத்து கொள்ளும் அளவில் சுடுநீருடன் ஒரு கைப்பிடி கல்உப்பு போட்டு மடியை தண்ணீரினுள் மூழ்கும் படி 5-10 நிமிடங்கள் வைத்து பின் பாதிக்கபட்ட மடியில் உள்ள பாலை முழுவதுமாக பீய்ச்சி வெளியேற்ற வேண்டும்.

மடியை ஈரமில்லாமல் துடைத்து பின் Mastatis gel ஐ தடவவும்.

ஒரு நாளைக்கு இது போன்ற செயல்முறைளை 3 அல்லது 4 முறை மேற்கொள்ளலாம்.

இயற்கை முறையில் வெளிப்பூச்சாக :

சோற்றுகற்றாழை ஜெல்
மஞ்சள் தூள்
கல்உப்பு

இவற்றை ஒன்றாக கலந்து பாதிக்கபட்ட மடியில் தடவி நன்கு காய்ந்து ஒரு மணிநேரம் கழித்து சுடுநீரால் நன்கு கழுவி சிறிது நேரம் கல்உப்பு கலந்த சுடுநீரில் மடியை வைத்து பின் பாலை பீய்ச்சி, நன்கு ஈரமில்லாமல் துடைத்து பின் கற்றாழை கலவையை பூசவும்.

இவ்வாறு தொடர் சிகிச்சையை மேற்கொள்ளும் போது மடிநோய் குணமாகும்.

நன்றி.

அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.