ஆட்டுப்பாலின் பயன்கள்

ஆட்டுப்பாலின் பயன்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

அனைவருக்கும் பசுமை வணக்கம்

நமது முன்னோர்கள் ஆட்டுப்பாலை பயன் படுத்தி இருக்கிறார்கள்

இன்றைய அவசர உலகில் ஆட்டுப்பால் பால் என்பதையே அனேகர் மறந்து விட்டார்கள்

ஆட்டுப்பாலின் பயன்கள்

1) தினந்தோறும் ஆட்டுப்பால் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும், உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய கண் எரிச்சலும் குறையும்

2)ஆட்டுப்பாலில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3) ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பினை ஒத்ததாக உள்ளது. இதே போல ஒலிகோசோக்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப் பாலுக்கு மிகச்சிறந்த மாற்று ஆட்டுப்பால் மட்டுமே .

பச்சிளம் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற நோய்களை ஆட்டுப்பால் தருவதன் மூலம் தடுக்கலாம்.

4) தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தும் உயிர் வேதிப் பொருட்கள் ஆட்டுப்பாலிலும் காணப்படுகிறது.

5) ஆட்டுப்பாலில் மனித உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாக ஜீரணம் ஆகும் .பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிட்டால் அதிக பால்ச சுரக்கும். இருமல், மூச்சு திணறல், போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. இப்படி மருத்துவ குணங்கள் கொண்ட ஆட்டுப்பாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

6) ஆட்டுப்பால் குடிப்பதால் மன அழுத்தம் குறையும். ஆட்டுப்பாலில் பாஸ்பரஸ், வைட்டமின் பி12,செலினியம், புரோட்டீன், மற்றும் ரிபோஃபிளாவின் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதன் காரணமாக ஆட்டுப்பால் குடிப்பதால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது.

இத்தகைய மகத்துவ மருத்துவ குணங்கள் கொண்ட ஆட்டுப்பால் பயன்பாட்டை விட்டு விட்டோம்.

விக்டர்:::::: 94435 63853

தவமணி:::9080664974