ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்

ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்
Agriwiki.in- Learn Share Collaborate
ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்

 

குழந்தை பிறந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் மனிதனின் அன்றாட நடைமுறையில் உணவிலும் ஒன்றாக கலந்திருந்த விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் இன்று காணாமல் போய்விட்டது.

இப்போதெல்லாம்மருத்துவர்கள் இது என்ன இயந்திரமா ஓட்டை கண்ட பக்கமெல்லாம் எண்ணெய் விடுவதற்கு என்று ஏசுகிற காலம்.

இனி வரும் காலம் மாறும். ஆமணக்கு எண்ணெய் பயன்பாடு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அதிகம் பருப்பு வேகவைக்க பயன்படுத்தி பார்த்து இருப்பீர்கள் காரணம் என்ன சில பருப்புகள் சில நீரில் வேகாது. அதில் ஆமணக்கு எண்ணெய் விட்டால் வெந்துவிடும், காரணம்

ஆமணக்கு எண்ணெய் கொதிநிலையை அதிகப்படுத்தும் அப்போது வெப்பம் கூடுதலாக எடுத்துக்கொண்டு பருப்பு வேகும் போது சுலபமாக வெந்துவிடும்.

இப்படிப்பட்ட ஆமணக்கு பயிரை பற்றி பார்ப்போம்.

ஆமணக்கு நாட்டு ஆமணக்கு மரமாக வளர்ந்து உயரமாக சென்று விடுவதால் அறுவடை முதல் அனைத்து வகையிலும் விவசாயிக்கு சிரமமாக இருந்தது. நாட்டு ஆமணக்கு சுமார் 2 வருடங்கள் பலன் கொடுக்கும் தன்மை வாய்ந்தது.

இதிலும் ஒட்டு வீரிய ரகம் விடவில்லை. அதில் முதன்மை வாய்ந்த ரகம் குஜராத்தை சேர்ந்த GCH4 ரகம். அவர்களே இன்னும் பல ரகங்களை வெளியிட்டும் இந்த ரகத்திற்கு இணையாக ஏற்படுத்த இயலவில்லை.

நமது தமிழ்நாட்டில் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் சேலம் மாவட்டம் எதாப்பூர் இல் உள்ளது இங்கு வெளியிடப்படும் YRCH ரகங்கள் கொடிகட்டி பறக்கின்றன ஆனால் GCH4 ரகம் விவசாயிகளின் விருப்ப ரகமாக இருப்பதை எந்த ரகத்தாலும் அந்த இடத்தை நிரப்பவும் இயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆமணக்குக்கு  ஏற்ற காலம் சித்திரை முதல் ஆடி வரை.

மானாவாரி பயிராக செய்பவர்கள் சித்திரை மற்றும் வைகாசியில் பயிர் செய்யலாம்.

பாசனம் செய்யும் நிலங்களில் ஆனி  முதல் ஆடி வரை பயிர் செய்யலாம்.

ஏக்கருக்கு 10 டன் தொழுஉரத்துடன் 2 கிலோ அசோஸ்பயிரில்லாம், 4 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா, 2 கிலோ வாம், 4 கிலோ ரிசோபியம், 2 கிலோ ஜிங்க் பாக்டீரியா, 2 கிலோ சிலிகா பாக்டீரியா , 5 கிலோ பவேரியா , 2 கிலோ மெட்டரிசியும் கலந்து இரைத்து உடனே உழவு செய்துவிடவேண்டும்.

பிறகு மானாவாரி பயிராக இருந்தால் 4×6 அடி என்ற இடைவெளியிலும் பாசனம் செய்யும் நிலமாக இருந்தால் 6×7 என்ற இடைவெளியிலும் 2 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.

முளைத்து வந்த பிறகு ஆரோக்கியமான பயிரை விட்டு அடுத்த பயிரை களைத்து விடவேண்டும். இவ்வாறு நாம் பயிர் செய்யலாம்.

இதற்கு பூச்சிகளின் இருந்து விடுபடஒட்டுண்ணிகள் பயன்படுத்துவது வெகு சுலபம். பவேரியா மற்றும் மேட்டரைசியம் மூன்று நாட்கள் இடைவெளியில் 3 முறை தனித்தனியே தெளிக்கலாம்.

ஏக்கருக்கு ஒ ரு விளக்கு பொறி பயன்படுத்தவேண்டும். இப்படி பூச்சிகளில் இருந்து விடுபட்டால் நல்ல மகசூல் எடுக்கலாம்.

ஏக்கருக்கு 1000 கிலோ விளைச்சல் கிடைக்கும். 3 மாதத்தில் இருந்து அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம் அல்லது ஒரே அறுவடையாகவும் செய்யலாம். தற்போதைய விலை ரூ.38 .00 முதல் 40.00 வரை நன்றி வணக்கம்.

அசோக்குமார் கார்கூடல்பட்டி.