இந்திய நாட்டு மாடுகள்
நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி?
நான் கடந்த ஆண்டு ஆப்பிரிக்கப் பயணம் செய்த போது பலகோடி இந்திய மாடுளைப் பார்த்தேன் ஆப்பிரிக்கா இந்தியாவில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. நான் 20 கோடி வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஒட்டி இருந்தபோது இந்திய துணைகண்டம் மற்றும் ஆப்பிரிகக் கண்டம் இரண்டும் இணைந்திருந்தது. இரணடு கண்டங்களுக்கும் இடையே பல எரிமலைகள் வெடித்ததினால இரண்டு கண்டங்களும் நகர்ந்து, இந்தியா ஆசியாவில் இணைந்தது, எனவே இந்திய நாட்டு மாடுகள் என்பதை விடை இந்திய ஆப்பிரிக்க நாட்டு மாடு என்று கூறுவதுதான் சரியானது.
ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாஸ் என்ற மாடு ரகம் மட்டுமே இருந்தது. அப்போது பாஸ் ரகத்தில் டி.என்.ஏ வில் சடுதி மாற்றம் ஏற்பட்டதன் மூலம் மூன்று வகை மாடுகள் உருவாகின அவை இந்திய நாட்டு மாடு, ஜெர்சி ஹோலிஸ்டன் மற்றும் யாக் போன்றவை.
காலம் செல்ல செல்ல இந்த விலங்குகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, இந்த ஜெர்சி மாடு மாட்டுக்குரிய குணங்கள் அனைத்தையும் இழந்து பல மாற்றங்களை பெற்று தற்போது மாட்டின் குணமே இல்லாமல் இருக்கிறது. விரிவாகப் பார்ப்போம்.
இந்திய மாடு / பாஸ் இன்டிகஸ்
வெளிநாட்டு மாடு / பாஸ் டாரஸ்
இந்திய மாடு ஜெபு (Zebu) குடும்பத்தைச் சேர்ந்தது, இதற்கு 21 குணங்கள் உள்ளது. இந்த 21 குணங்களின் ஒரு குணம்கூட ஜெர்சி மாடுகளில் இல்லை. எனவே அது ஒரு பசுவே அல்ல, அது ஒரு ஆபத்தான விலங்கு என்றே சொல்ல வேண்டும்.
1. இந்திய நாட்டு மாட்டில் திமில் இருக்கும், ஜெர்சியில் திமில் இருக்காது.
2. நாட்டு மாட்டின் முன்பகுதி அகலமாகவும் பின்பகுதி குறுகியும் இருக்கும். ஜெர்சி இதற்கு நேர் மாறாக இருக்கும்.
3. நாட்டு மாட்டில் தாடை இருக்கும், ஜெர்சியில் இருக்காது
4. ஒவ்வொரு நாட்டு மாட்டுக்கும் கொம்பு வெவ்வேறு வடிவில் இருக்கும்.
5. நாட்டுமாட்டு சாணத்தில் ஒரு கிராம் எடையில் 300 கோடி நுண்ணுயிர்கள் உள்ளது ஆனால் ஜெர்சி சாணத்தில் 7 லட்சம் நுண்ணுயிர்கள் மட்டுமே இருக்கிறது.
6. நாட்டுமாட்டு தோலுக்கு நுண்ணுர்வு அதிகம், ஜெர்சிக்கு நுண்ணுர்வு சிறிதும் கிடையாது.
7. நாட்டு மாடு சுத்தமான இடத்தில் மட்டுமே உட்காரும், ஜெர்சிமாடு எங்கு வேண்டுமானாலும உட்காரும். தூய்மை குறித்த அறிவு அந்த ஜெர்சிக்கு இல்லை.
8. நாட்டுமாட்டு பாலில் பீட்டா கேசின் என்ற புரதம் உள்ளது (B2 protein)
ஜெர்சி மாட்டில் பீட்டா கேசின் A1 ஹிஸ்டின் புரதம் உள்ளது. கேசின் A1 ஹிஸ்டின் மனிதனுக்கு பெரும் கேடு விளைவிக்கும்
9. மழை அதிகம் பொழியும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழும் பசுக்களான வெச்சூர், மலைநாடு கிட்டா போன்ற மாடுகளின் தோலில் எண்ணைச் சுரப்பிகள் உள்ளன, இந்த பசையினால் மழைத் தண்ணீர் மாட்டின் மேல் விழுந்தாலும உடவே கீழே விழுந்து விடும். இது அற்புதமானது, இந்த தன்மை ஜெர்சியிடம் இல்லை.
ஜெர்சி மாடு இந்திய நாட்டின் வெப்பமான சூழலில் வளர்க்கப்படுவதால் அதற்கு ஆன்டிபயாடிக் கொடுக்கபப்டுகிறது. இந்த ஆன்டிபயாடிக் பாலில் கலக்கிறது எனவே இதன் பாலும், சிறுநீரும், சாணமும் உபயோகமானது அல்ல.
ஆனால் நாட்டு மாட்டுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்கவேண்டியதில்லை. நன்மை செய்யும் லாக்டோ பேசில்லஸ் நாட்டு மாட்டுப் பாலில் உள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்க ஜெர்சிக்கு ஆக்சிடோசின் என்ற ஊசி போடப்படுகிறது. இது கட்டுப்படுத்த முடியாத செல்பிரிவை ஏற்படுத்தக் கூடியது. இதில் சிறிதளவு பாலில் வெளிவருகிறது. நாம் அந்த பாலை சாப்பிடும் போது புற்றுநோய் ஏற்படக் காரணமாகலாம். இன்னும் நிருபிக்கவில்லை என்றாலும் வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஜெர்சி மாட்டை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. அது சுவாசிக்கும் போது கூட மீத்தேன் வாயுவை வெளிவிடுகிறது.
பால் அதிகம் கிடைகிறதே என்று நீங்கள் சொல்லலாம்
சரி பார்ப்போம், நம் நாட்டு மாடான குஜராத் கிர் மாடு 24 லிட்டர் பால் தரும், காங்கிரோஜ் மாடு 18 லிட்டர் பால் கொடுக்கும். ராஜஸ்தான் தார்பார்க்கர் மாடு காய்ந்த புல்லை மட்டும் உண்டு 18 லிட்டர் பால் தரும், ரதி மாடு 25 லிட்டர் பால் தரும்.
பிரேசில் நாடு ஆந்திராவில் இருந்து ஓங்கோல் மாடு, ராஜஸ்தானில் இருந்து தார்பார், குஜராத்தில் இருந்து கிர் போன்ற மாடுகளையும் வாங்கி அவற்றை கலப்பு செய்து 64 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டை கண்டறிந்துள்னர்.
இந்தியாவிலும் பட்னா அருகில் 2 லிட்டர் மட்டுமே பால் கொடுத்த காங்காகினாரி ரகத்தை ஆராய்ச்சி மூலம் 18 லிட்டர் கொடுக்கும்படி மாற்றியுள்ளனர். நாமும் கங்கேயம் மற்று உம்பளாச்சேரி மாடுகளை நாம் இப்படி மாற்றலாம்.
*பொருளாதார நன்மைகள்*
ஒரு ஜெர்சி மாட்டிற்கு தரமான உணவு கொடுத்து, ஏசி ஏற்படுத்தி, மருத்துவரை வரவழைத்தால் தினமும் 25 முதல் 30 லிட்டர் பால் தரும் இதன் மூலம் நமக்கு 450 ரூபாய் வருமானம் வரும்.
ஒரு கிர் மாடு வளர்க்கும் போது அது 10 லிட்டர் பால் கொடுத்தாலும் 800 ரூபாய்க்கு விற்க முடியும். இந்திய காளைகளின் விலையும் அதிகம், ஆனால் ஜெர்சி காளையின் நிலை என்பது உங்களுக்கே தெரியும்.
அடிப்படையில் இந்திய நாட்டுமாடு பாஸ்இன்டிகஸ் ஆகும். ஜெர்சி ஹோலிஸ்டின் இனப்பெயர் பாஸ்டாரஸ் இதனால் இனங்கள் முற்றிலும் மாறுபட்டவை என்பது தெரிகிறது. இந்திய நாட்டு மாடு ஜெபு குடும்பத்தை சேர்ந்தவை. அவற்றுக்கு 21 குணங்கள் உள்ளன. இந்த 21 குணங்களில் ஒரு குணம் கூட ஜெர்சி ஹோலிஸ்டனில் இல்லை. எனவே ஜெர்சி ஹோலிஸ்டைன் மாடு அல்ல அது வேறு விலங்கு.
நாம் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தபோது நாம் கண்டறிந்தது ஜெர்சி ஹோலிஸ்டின் சாணமும் கோமியமும் மண்ணிற்கு பயன் உள்ளது இல்லை. இதன் பாலில் கேடு விளைவிக்கும் புரதம் உள்ளது. அதன் பெயர் பீட்டாகேசின் A1 ஹிஸ்டிடின் புரதம். இது கணையத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஜெர்சி ஹோலிஸ்டின் சுவாசிக்கும் போது மீத்தேன் வாயு வெளியாகிறது.
இந்திய நாட்டுமாட்டின் பசும்பாலிற்கு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கிறது. இந்திய நாட்டுமாடுகளை அழிப்பதற்கு ஜெர்சி ஹொலிஸ்டன் மாடுகள் அறிமுகப்படுத்தப் பட்டன. பசுமைப்புரட்சி, கலப்பு விதைகள், அலோபதி மருத்துவம் போன்றவற்றின் அங்கமாக இதுவும் ஒன்று. உலக சந்தையில் ஜெர்சி ஹோலிஸ்டின் பாலுக்கு அதிக வரவேற்பில்லை, இந்திய பாலுக்கு நிறைய வரவேற்பு உள்ளது.
இந்திய நாட்டுமாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்,
பால் கொடுக்கும் நாட்டுமாடுகள்:
– கிர், காங்கிரேஜ், தார்பார்க்கர், ராத்தி, சாஹிவாஸ் மற்றும் சிவப்பு சிந்தி. ஆனால் இந்த காளைகள் விவசாயத்தில் அதிக வலிமை கொண்டவை அல்ல, மந்தமானவை.
இரண்டாவது வகை: மிதமான அளவில் பால் கொடுக்கின்றன
மிதமான அளவில் பால் கொடுக்கின்றன, எருதுகளும் ஒரளவு பயன்ப தரக்கூடியது. உதாரணம் ஓங்கோல், காங்கேயம், ஹரியானா, மால்வி, கங்காதிரி, லால் காந்தாரி, தேவனி, கொளலாவ், டாங்கி, இவை நடுத்தர அளவு பால் கொடுக்கின்றன காளைகள் விவசாயத்திற்கு பயன்படுத்த தகுதியாக இருக்கின்றன. ஆனால் வண்டி இழுகக் ஏற்றதல்ல.
மூன்றாவது வகை:
மூன்றாவது குறைந்த பட்ச பால் தரும், சிறந்த தரமான எருதுகளை தரக்கூடியவை, மற்றும் வண்டிக்கும் உகந்தவை. கிளா, உம்பளாச்சேரி, கிருஷ்ணாதிரி, மற்றும் பிற சிறிய நாட்டுமாட்டு ரகங்கள். இதன் காளைகள் போட்டியில் கலந்து கொள்ள தரமானவை தொடர்ந்து ஓட முடியும்,
விவசாயத்திற்கு காங்கேயம் மாடும் ஓங்கோல் மாடும் மிகச் சிறந்தது.
அதிக பால் கொடுக்கும் நாட்டு மாடுகளான கிர், தார்பார்க்கர், சாஹிவால் போன்றவற்றின் சாணமும் மூத்திரமும் ஜீவாம்ருதம் தயாரிக்க ஓரளவே உகந்தது.
ஜீவாம்ருதம் தயாரிக்க உம்பளச்சேரி, பர்கூர், காங்கேயம் சிறந்த ரகங்களாகும்.
இந்திய நாட்டுமாட்டு பால் அம்ருதமாக இருந்தாலும் பசும்பால் மனிதர்களில் உணவு அல்ல. எந்த ஒரு விலங்கும் வேறு ஒரு விலங்கின் பாலைக் குடிப்பதில்லை. குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே போதும்.
பால் குடிப்பது இயற்கைக்கு புறம்பானது, கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது. பால் மனித உடலுக்கு ஒரு வெளி பொருளாகும், அதை மனித உடல் எற்காது, இதனால் அதிக பால் தரும் நாட்டு மாடுகளை வாங்க ஆசைப்படாதீர்கள்.
குறைந்தபட்ச பால் கொடுக்கும் நாட்டுமாட்டு ரகங்கள் அல்லது பாலே கொடுக்காத நாட்டு மாட்டு ரகங்கள், வயதான கறவை நின்றுபோன பசுக்களின் சாணமும் கோமியமும் ஜீவாமிர்தம் தயாரிக்க உகந்தவை. பாலேக்கர் விவசாயத்தில 30 ஏக்கர் நிலத்திற்கு ஒரே ஒரு நாட்டுமாடுதான் தேவை.
இந்திய அரசு பாரம்பரிய விவசாயம் எனும் கொள்கையை அறிமுகப்படுத்திள்ளது இது சாண எருவை அடிப்படையாகக் கொண்டது. இரசாயன விவசாயத்தில் கிடைக்கும் அதே விளைச்சல் வேண்டும் என்றால் ஏக்கருக்கு 20 வண்டி சாணஉரம் தேவைப்படும். 20 வண்டி அளவு உரம் வேண்டும் என்றால் 10 நாட்டுமாடு தேவைப்படும்.
இந்த வகையில் இந்தியாவிற்கு 350 கோடி நாட்டுமாடுகள் தேவைப்படும். இந்தியாவில் தற்போது வெறும் 8 கோடி நாட்டுமாடுகள் மட்டுமே உள்ளன, எனவே இந்த பாரம்பரிய விவசாயம் சாத்தியமில்லை. பாலேக்கர் விவசாய முறையில் 3.5 கோடி நாட்டுமாடுகள் போதுமானது, நாம் நாட்டுமாடுகளை பகிர்ந்தளிப்போம்.
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்