இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா

இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா

இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா 

எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் ( waste decomposer ) மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா)

பதில்:  முடிந்தவரை தரக்கூடாது.

இடுபொருள்களுக்கு தனி குணம் உண்டு:

இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு.

செயல்பாடு வாரியாகவும் பஞ்சகாவியா, இஎம் கரைசல், மீனமிலம், ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் போன்ற ஒவ்வொரு இயற்கை இடுபொருள்ளுக்கும் ஒரு தனி குணம் உண்டு.


அதன் செயல்பாடுகள் வித்தியாசமானவை.

மண்ணை வளப்படுத்துவதில் அதன் பங்கு வித்தியாசமானது.

ஒரு இயற்கை இடுபொருளை தரைவழி ஒரு முறை கொடுத்தால் அது தனது வேலையை முழுமையாக ,அந்த நிலத்தில் செய்ய, குறைந்தபட்சம் ஈரம் இருக்கும் வரையிலான மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவைப்படும்.

இயற்கை இடுபொருட்கள் நுண்ணுயிரிகளால் ஆனது. எந்த ஒரு இயற்கை இடுபொருட்கள் இல் உள்ள நுண்ணுயிரிகள் ஒரு சொட்டு தரையில் படும் போது 10 100 1000 ஆக பெருகும் நிலையில், இரண்டு பொருள்களை கலந்து கொடுக்கும் போது எந்தப் பொருள் புதிதாக தயாரிக்கப்பட்டதோ அதன் செயல்பாடு அதிகமாக வேகமாக இருக்கும்.

அதில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கம் பழைய இயற்கை இடுபொருட்கள் இல் இருந்து உருவான நுண்ணுயிர்களை வளர விடாமல் செய்துவிடும்.

எனவே நமக்கு பொருள் இழப்பு ஏற்படும் மற்றும் அதன் செயல்பாடுகளில் முழுப்பலன் கிடைக்காது.

நாம் பயிரிட்டு இருக்கும் பயிரின் வாழ்நாள் நிறைய இருக்கும் நிலையில் , ஒவ்வொரு இயற்கை இடுபொருள்களையும்  மூன்று முதல் நான்கு நாட்கள் தள்ளி தரைவழி தருவது நல்லது.


பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்