இயற்கை மரபு வீடுகள்

இயற்கை மரபு வீடுகள்

இயற்கை மரபு வீடுகள்

மனித தேவைகளுக்கு மாறாக மறு சுழற்சி முறையில் வீடுகளை கட்ட,
என்று தவறினோமோ அன்றே அழிவுகள் ஆரம்பம் ஆனது.

மர வீடு, களி மண் வீடு, – மறு சுழற்சி வீடுகள்.

சிமெண்ட் வீடு- ????????

சரி இயற்கை பேரிடரில் இருந்து காக்கத்தான் கட்டினோம், காலத்தின் தேவை !!!

அப்படி எனில், தற்போது காத்துவிட்டோமா??? , நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கின்றோம்.

என் வீட்டில் இப்போதும் திட்டுவர், புது வீடு பிடிக்கலை என்று தினமும் புலம்புவதால்,
கூரை வீட்டிற்கே போய் விடலாம் என்பேன்.

அதில் இருந்த தூக்கம் இப்போ இல்லை , தூங்கும் போது சுவற்று மணல் சரியும் ஆனால் அதுவே மறுநாள் பூசுவேன் சானமும் ,களிமண்ணும்ம கொண்டுவந்து அதில் உள்ள தற்சார்பும் நிம்மதியும் வேறு எங்கும் இல்லை.
வெப்பத்தைத் தடுக்கும்� வெள்ளைப் பூச்சு

ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும்.

இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் தற்போதைய ஃபேஷன்.

ஆனால், வீடுகளில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

அடர் வண்ணங்கள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடைது.

வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதன் மூலம் வீடுகளில் உள்ள அறைகளில் வெப்பம் உயரும். கோடைகாலத்தில் ஃபேனை போட்டவுடன் உஷ்ணக் காற்று வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு இதுதான் காரணம்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம். எனவே குளிரைச் சமாளிக்க அடர் வண்ணம் பூசுவது அங்கு வாடிக்கை. ஆனால், எப்போதும் வெயில் கொளுத்தும் இந்தியாவில் அடர் வண்ணப் பூச்சு தேவையற்றதே.

இதற்கு மாற்றாக வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது. வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக இந்தச் சமூகத்துக்கும் நாம் பங்களிக்கிறோம்.

இதெப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்? சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.

வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.

ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்

இயற்கை மரபு வீடுகள்

மரபு வழி சார்ந்த வழித்தடங்களில் பயணப்படும் ஒவ்வொருவரும் மற்றும் அனைத்து மக்களுமே வீடு கட்டும் போது மரபு வீடுகள் கட்டிட துவங்கலாமே.

சூரிய ஒளிக் கதிர்கள் வீட்டின் உள்ளே மின்னிட, வெளிக் காற்று உள்ளே வந்திட, பராமரிப்பு செலவு லட்சக்கணக்கில் இல்லாமல் இருந்திட, இயற்கை வளங்களை நம்மால் முடிந்தளவு பாதுகாத்திட இவ்வகையான மரபு வீடுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவை.

கொங்கதேசத்தின் பாரம்பரிய தொட்டி வாசல் வீடு…

கொங்கு நாட்டில் புகழ்பெற்ற ‘தொட்டி கட்டு வீடுகள்’ எப்போது அதன் பொலிவை இழந்ததோ, அப்போதே கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதையத் தொடங்கியது என்கிறார் நாட்டுப்புறவியல் கள ஆய்வாளர் சு.வேலுச்சாமி.

கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாட்டில், முன்பு சமசதுர அளவில் அல்லது செவ்வக வடிவில் கட்டப்பட்ட வீடுகள் ‘தொட்டி கட்டு வீடுகள்’ அல்லது ‘பண்ணை வீடுகள்’ என்றழைக்கப்பட்டன. இவை கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை பறைசாற்றும் விதமாக இருந்தன.

உறவு, பாசம், பண்பு ஆகியவை நடைமுறை பழக்க வழக்கங்கள் மூலமும், கதைகள், பாடல்கள், பழமொழிகள் மூலமும் பெரியவர்களால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன. மிகவும் பழமைவாய்ந்த கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் என கொங்கு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கூட்டுக்குடும்ப வாழ்வை பறைசாற்றிய ‘தொட்டி கட்டு வீடுகள்’ அதன் பொலிவை இழந்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே காசிபாளையம் கிராமத்தில் வெங்கடாச்சலம் (90), பேபி (65) தம்பதியினர் அவர்களது 3 மகன்களுடன் பரம்பரையாக ‘தொட்டி கட்டு வீட்டில்’ வசிக்கின்றனர். மூத்த மகன் விவசாயத்தை கவனிக்க, மற்ற இருவர் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘நகரத்து வாசனை இல்லாமல், இயற்கையுடன் இணைந்து வாழ்வது மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய், மளிகை உள்ளிட்ட பொதுச் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பிற செலவுகளுக்கு அவரவர் பெறும் மாதச் சம்பளம் பயன்படுகிறது. இதனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கிறது’ என்றனர்.

வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த நாட்டுப்புறவியல் கள ஆய்வாளர் சு.வேலுச்சாமி கூறும்போது, ‘தொட்டி கட்டு வீடுகள்” குறித்து கிராமம் கிராமாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய வீடுகளில் வசிப்போரின் பண்பாடு, கலாச்சாரம் பெருமைக்குரியது. கூட்டுக்குடும்ப முறையை பறைசாற்றியதால் இதற்கு தனிப்பெருமை உண்டு. பெரும்பாலான வீடுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பிரதான வாயில் கதவுகள் உள்ளன.

உட்புறம் நேர் எதிர் திசையில் அறைகள் அமைந்துள்ளன. நடுவில் மழை நீர் சேகரிக்கும் வகையில் தொட்டி, நீர் வெளியேற பாதை (ஜலதாரை) அமைக்கப்பட்டுள்ளன. வீடுகள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே வாயில் கதவு வழியாகத்தான் வந்து செல்ல முடியும். எந்தவொரு பிரச்சினையும் உடனடியாக பேசி தீர்க்கப்பட்டு விடும். கலாச்சாரம், பண்பாடு, பாசம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள முடிந்தது.

பகைமை மறந்து சுமுக வாழ்வு நிலவியது. கணவன், மனைவி வேலைக்கு சென்றாலும், பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் தாத்தா, பாட்டி உறவுகள் இக்குடும்ப வாழ்க்கையில் இருந்தன.

ஆனால், தற்போதைய சூழலில் பல்வேறு காரணங்களால், ‘தொட்டி கட்டு வீடுகளில்’ வசிப்போர் குறைந்து பல கிராமங்களில் அவை கேட்பாரற்று கிடக்கின்றன. இவ்வீடுகள், எப்போது அதன் பொலிவை இழக்க தொடங்கியதோ, அப்போதே கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும் மறையத் தொடங்கியது எனலாம். இதனால், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் பெருகி வருகின்றன. மனித வாழ்க்கை சீரழிந்து, மனித நேயம் மறைந்து வருவதில் ஐயமில்லை’ என்றார்.

குறிப்பு: நமது மரபு வீடுகள் பாரதவர்ஷ வானசாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திர தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தது.. அதேபோலவே இன்றைய நவீன சிமெண்ட் மணல் கான்கீரிட் கட்டிடங்களுக்கு எந்தவித வாஸ்து அமைப்பும் கிடையாது.. இவைகளுக்கு வாஸ்து பார்ப்பதே வீண்..

இயற்கை மரபு வீடுகள் அமைப்பு
நாட்டு ஓட்டு வீடு, மண் சுவர் , 4 பக்கம் தாழ்வாரம், உள் முற்றம், உள்பறம் , வெளிபுறம் திண்ணை, கூடம், சாமி அறை, 2 படுக்கை அறை, வாசலில் கீத்து கொட்டகை பத்தாயம், விதை கோட்டை, ஏர் கலப்பை, மண்வெட்டி, எறை கூடை, தவிட்டு மூட்டை வைக்க இடம், 3 பக்க பின் புறம் கீத்நு கொட்டகை மாடு கட்ட, ஆடு கட்ட, கோழி வளர்க்க, அம்மி, ஆட்டு கல் உரல் உலக்கை வைக்க இடம், பொள்ளயில் வைக்கோல் போர், சாணக்குழி, நெல் அவிக்க இடம் காய வைக்க கலம் மாட்டுக்கு புண்ணாக்கு கழனி பானை வைக்க இடம், மாட்டுக்கு வெளியே கட்டு தறி, கூண்டு வண்டி மொட்டை ( பார) வண்டி க்கு இடம்……

படங்கள்: புத்தி கொள்முதலுக்காக திருடப்பட்டவை

மரபு வீடுகள் அனைத்து இடங்களிலும் பரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்தை நம்மைச்சுற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தருணம் தற்போது வந்துவிட்டது.
ஆனால் இத்தகைய வீடுகளை நகர புறநகர் பகுதி சாத்தியக்கூறுகள் நகர விரிவாக்கப் பகுதிகள், கிராம பகுதிகள் , பண்ணைகளில் இதனை தாராளமாக அமைக்கலாம்.

Hari Prasath  – https://www.facebook.com/hari.prasath.3762/posts/2171015052937951

4 Responses to “இயற்கை மரபு வீடுகள்”

  1. எனக்கு சொந்தமான 1050 சதுர அடியில் மண்வீடு உறுதியாகவும் காலம் கடந்து நீடித்து நிலைத்து உழைக்கக்கூடிய தன்மையுடன் இருக்க வேண்டும் இவ் வீடுகள் பழமை மாறாமல் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் அதற்கு எவ்வளவு செலவாகும் 1050 சதுர அடி அதற்குள் 900 சதுர அடியில் வீடு அமைக்க வேண்டும் எவ்வளவு செலவாகும் என்று பதில் கூறவும்

    1. Please contact Hari or Ilancheran
      பாரம்பரிய முறையில் வீடு கட்ட ( மண் வீடு, லாரி பேக்கர் முறையில் )

      Contact:
      ஹரிப்ரசாத் – 86673 95332
      இளஞ்சேரன் – 96551 49888

      மரபுசார் கட்டுமான மையம் COSSCO

  2. இராசிபுரம்/ஓசூரில் உள்ள Elancheran என்ற நபரை நம்பி வீட்டிற்கு கட்டிடம் கட்டியதில் அவர் எங்கள் வயிற்றில் அடித்து பணம் ஏமாற்றி, வெயில் மழையில் கூலி வேலை செய்த என் பெற்றோர்கள் மனம் நொந்து துடிக்கும் அளவில் மிகுந்த அளவில் நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி “திறமையாக” ஏமாற்றியதால் என் தந்தையின் உடல், மன நலம் பாதிக்கப்பட்டு அவர் மறைந்துவிட்டார். அந்த நபரால் மிகுந்த அளவில் கண்ணீர், கவலை.

    Rs.15 இலட்சம் மதிப்பில் கணக்கிட்டு இவரின் திறமையான ஏமாற்று/பொறுப்பற்ற வேலைகளால் Rs.23 இலட்சம் மதிப்பில் செலவு ஏற்பட்டு மிகவும் கண்ணீர்,கவலை.

    வெளியூர் நபரை நம்பி வீடு கட்டவேண்டாம் என்று என் பெற்றோர்கள் பலமுறை சொல்லியும் பொய் விளம்பரத்தை அப்படியே நம்பி அதிலும் குறிப்பாக, *குறைந்த செலவில், தற்சார்பான* மண்வீடு என்ற சொற்களை அப்படியே நம்பியது என் மிகப்பெரிய தவறு.

    முன்பணம் ₹1 இலட்சம் பெற்றுக்கொண்டு எங்கள் வீட்டில் சோறு சாப்பிட்டு , ஒரு மாதத்திற்கு மேலாக வேலை ஆட்களைக் கூட்டி வராமல் Rs.1,000 கூலி என்று ஒப்பந்தம் செய்து மிகுந்த அளவில் நெருக்கடியை ஏற்படுத்தி Rs.1,500 வாங்கினார்.

    முன்பணம் Rs.1 இலட்சம் பெற்றுக்கொண்டு ஆட்களைக் கூட்டி வராமல் மிகுந்த அளவில் நெருக்கடியை, மன உளைச்சலை ஏற்படுத்தியதால் வேலைக்கு ஆட்கள் நாங்கள் தேடினோம்.

    5 நபர்கள் வேலை தெரியாது/ நேரமில்லை என்று சொன்னார்கள். ஆனால், இதைத் தவறாகப் பயன்படுத்தி Prakash என்ற நபரும் கூலி ஜோடிக்கு Rs.200 கேட்டு எங்கள் வயிற்றில் அடித்து பாவம் செய்துள்ளார்.

    ஊரில் பலர் கேலி செய்து மிகுந்த அளவில் மன உளைச்சல். என் உடல், என் அம்மாவின் உடல், மன நலம் பாதிக்கப்பட்டு மிகவும் கவலையுடன் , கண்ணீருடன் இதை நான் எழுதுகிறேன்.

    எங்கள் கண்ணீரில், வியர்வையில், இரத்தத்தில் வாழும் நபர்தான் Elancheran.

    அவர் செய்தது மிகப்பெரிய பாவச் செயல்கள். அது அவரின் ஏழு பிறப்பிற்கும் வரும்.

    எங்கள் பேச்சைக் கேட்காமல் இப்படி தவறு செய்துள்ளான் இவன் என்று என் பெற்றோர்கள் பலமுறை கண்ணீருடன் சொன்னார்கள்.

    Contact number: 9994745202.

  3. இராசிபுரம்/ஓசூரில் உள்ள Elancheran என்ற நபரை நம்பி வீட்டிற்கு கட்டிடம் கட்டியதில் அவர் எங்கள் வயிற்றில் அடித்து பணம் ஏமாற்றி, வெயில் மழையில் கூலி வேலை செய்த என் பெற்றோர்கள் மனம் நொந்து துடிக்கும் அளவில் மிகுந்த அளவில் நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி “திறமையாக” ஏமாற்றியதால் என் தந்தையின் உடல், மன நலம் பாதிக்கப்பட்டு அவர் மறைந்துவிட்டார். அந்த நபரால் மிகுந்த அளவில் கண்ணீர், கவலை.

    Rs.15 இலட்சம் மதிப்பில் கணக்கிட்டு இவரின் திறமையான ஏமாற்று/பொறுப்பற்ற வேலைகளால் Rs.23 இலட்சம் மதிப்பில் செலவு ஏற்பட்டு மிகவும் கண்ணீர்,கவலை.

    வெளியூர் நபரை நம்பி வீடு கட்டவேண்டாம் என்று என் பெற்றோர்கள் பலமுறை சொல்லியும் பொய் விளம்பரத்தை அப்படியே நம்பி அதிலும் குறிப்பாக, *குறைந்த செலவில், தற்சார்பான* மண்வீடு என்ற சொற்களை அப்படியே நம்பியது என் மிகப்பெரிய தவறு.

    முன்பணம் ₹1 இலட்சம் பெற்றுக்கொண்டு எங்கள் வீட்டில் சோறு சாப்பிட்டு , ஒரு மாதத்திற்கு மேலாக வேலை ஆட்களைக் கூட்டி வராமல் மிகுந்த அளவில் நெருக்கடியை ஏற்படுத்திய நபர் Elancheran.

    முன்பணம் Rs.1 இலட்சம் பெற்றுக்கொண்டு ஆட்களைக் கூட்டி வராமல் மிகுந்த அளவில் நெருக்கடியை, மன உளைச்சலை ஏற்படுத்தியதால் வேலைக்கு ஆட்கள் நாங்கள் தேடினோம்.

    5 நபர்கள் வேலை தெரியாது/ நேரமில்லை என்று சொன்னார்கள். ஆனால், இதைத் தவறாகப் பயன்படுத்தி Prakash என்ற நபரும் கூலி ஜோடிக்கு Rs.200 அதிகம் கேட்டு எங்கள் வயிற்றில் அடித்து பாவம் செய்துள்ளார்.

    ஊரில் பலர் கேலி செய்து மிகுந்த அளவில் மன உளைச்சல். என் உடல், என் அம்மாவின் உடல், மன நலம் பாதிக்கப்பட்டு மிகவும் கவலையுடன் , கண்ணீருடன் இதை நான் எழுதுகிறேன்.

    எங்கள் கண்ணீரில், வியர்வையில், இரத்தத்தில் வாழும் நபர்தான் Elancheran.

    அவர் செய்தது மிகப்பெரிய பாவச் செயல்கள். அதற்கான கர்மவினை அவரின் ஏழு பிறப்பிற்கும் வரும்.

    எங்கள் பேச்சைக் கேட்காமல் இப்படி தவறு செய்துள்ளான் இவன் என்று என் பெற்றோர்கள் பலமுறை கண்ணீருடன் சொன்னார்கள்.

    என் தொடர்பு எண்: 9994745202.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *