இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி

potatos
Agriwiki.in- Learn Share Collaborate

மலைப்பகுதிகளில் இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி (100 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை:

 

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , அல்லது
20 கிலோ அல்லது 10 லிட்
அசோஸ்பைரில்லம், அல்லது ரைசோபியம் கொடுக்கலாம்

10 கிலோ அல்லது 5 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா
2 கிலோ சூடோமோனஸ்,
2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி,
2 கிலோ பேசிலோமைசீஸ்
75 கிலோ சாம்பல்
75 கிலோ வேப்பம் புண்ணாக்கு
விதைக்கிழங்கு விதைப்பதற்கு முன்பு கொடுப்பது நல்லது.

ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை ஒரு கிலோ சூடோமோனஸ் 2 கிலோ ரைசோபியம் பவுடரில் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு விதைப்பது நல்லது.

வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை
( முதல் மாதம்)

3 மூன்றாம் நாள்
உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீனமிலம் தரைவழி கொடுக்கலாம்.

5 ம் நாள்
E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 750 மில்லி லிட்டர் இ.எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.

நடவு செய்த 12 ம் நாள்
பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் .
தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.

20ம் நாள்
பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் .
மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும்.

25ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும் .

30ம் நாள்
பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் .
தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்.

(இரண்டாம் மாதம்)

33 மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் /வேம் தரைவழி கொடுக்கலாம்.

38 ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும்.
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தரைவழி தரவும்.

40ம் நாள்
E.M 300 ml per 10 liter tank spray செய்யவும்.
மாலையில் 75 கிலோ சாம்பல் அல்லது ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தண்ணீரில் கலந்து தரைவழி தரலாம்.

45ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம்.

50ம் நாள்
தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் இரண்டு லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.

55ம் நாள்
காலை தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.
மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வேம் பவுடரை தண்ணீரில் கலந்து வேர் வழி தரவும்.

60ம் நாள்
E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். 75 கிலோ சாம்பல் அல்லது ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம். பாஸ்போபாக்டீரியா 2 கிலோவை தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் அரை லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.

(மூன்றாம் மாதம்)

64 ஆம் நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் பேசிலோமைசீஸ் 200 லிட் தண்ணீரில் கலந்து தரைவழி
ஊற்றி விடலாம்.

67 ம் நாள்
E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 2 லிட் இ. எம் கரைசல் அல்லது மீன் அமிலம் கலந்து தரைவழி தரவும்.

77 ம் நாள்
மாலையில் ஒரு ஏக்கருக்கு
ஒரு லிட்டர் மீன் அமிலம் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி தரவும். அதனுடன் 50 கிலோ அடுப்பு சாம்பல் அல்லது ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா கலந்து கொடுக்கலாம்.

87 ம் நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் பேசிலோமைசீஸ் தண்ணீரில் கலந்து தரலாம்.
மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும்.

அடி உரத்துடன் பவுடராக இருந்தால் சூடோமோனாஸ் / விரீடி
2 கிலோ பவுடரும் திரவமாக இருந்தால் ஒரு லிட்டரும் கலந்து கொடுப்பது நல்லது.

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.