இயற்கை முறையில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கான அட்டவணை

இயற்கை முறையில்  மக்காச்சோளம்சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை

இயற்கை முறையில்  மக்காச்சோளம்சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் அல்லது இரண்டு லோடு ஊட்டமேற்றிய தொழுவுரம்  அல்லது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ அசோஸ்பைரில்லம் ,
4 கிலோ/2லிட் சூடோமோனஸ்,
4 கிலோ/2லிட் மெட்டாரைசியம்
75 கிலோ சாம்பல்
100 கிலோ வேப்பம் புண்ணாக்கு
கொடுப்பது நல்லது.

வரப்பு பயிராக ஆமணக்கு, வெள்ளை சோளம், தட்டை பயிறு போன்றவற்றை பயிரிடலாம். சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி இரண்டு எண்கள் அல்லது மற்றும் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து கொள்ளும் பாரமோண் டிராப் எனப்படும் பொறிகளை 20 எண்ணிக்கையிலும் வைப்பது நல்லது

படைப்புழு தாக்கத்தை சமாளிக்க 4 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 முதல் 100 மில்லி பேவேரியா பேசியானா அல்லது பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற திரவங்களை 100 கிராம் மைதா மாவு அல்லது அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து பயிர்களின் மடலுக்குள் இறங்குமாறு பொறுமையாக இடைவெளி விட்டு விடாமல் தெளிக்க வேண்டும். 45 நாட்கள் வரை இதை அவசியம் செய்ய வேண்டும்.

*வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை*

3 மூன்றாம் நாள்
உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.

5 ம் நாள்
E.M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம்  கலந்து தரைவழி தரவும்.

நடவு செய்த 10 ம் நாள்
பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் .

நடவு செய்த 15 ம் நாள்
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம்.

20ம் நாள்
மீன் அமிலம் 100 ml per 10 liter tank தெளிக்கலாம் .

25ம் நாள்
பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray/கரைசல் தெளிக்கலாம்.

30ம் நாள்
பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் .
தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.

32ஆம் நாள்
ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் சூடோமோனஸ் / 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம்.

35ம் நாள்
பஞ்சகாவிய/ இஎம் கரைசல்  200 ml per 10 liter டேங்க் இருக்கு தெளிப்பாக கொடுக்கலாம் .

40 ம் நாள்
தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.

45 ம் நாள்:
பஞ்சகாவிய/ இஎம் கரைசல்  200 ml per 10 liter டாங்கிற்கு தெளிப்பாக கொடுக்கலாம்.

50 ம் நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம்.
தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் , இரண்டு லிட்டர் பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.

55 ம் நாள்:
கற்பூர கரைசல்  spray செய்யவும்  அல்லது
10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம்.

60ம் நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம்.
தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.

62ஆம் நாள்
ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் சூடோமோனஸ் / 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம்.

65ம் நாள்
தரைவழி ஒரு ஏக்கருக்கு 2  லிட்டர் / 4 கிலோ பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.2 கிலோ வேம், 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம்.

70ம் நாள்
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்/ மீன் அமிலம் 2 லிட்டர் தரைவழி தரவும்.

75ம் நாள்
கற்பூர கரைசல்  spray செய்யவும்

80ம் நாள்
தரைவழி ஒரு ஏக்கருக்கு 2  லிட்டர் / 4 கிலோ பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.2 கிலோ வேம், 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம்.

90ம் நாள்
மாலையில் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம், 1 லிட் சூடோமோனஸ் தரைவழி தரவும்.

95ம் நாள்
தரைவழி ஒரு ஏக்கருக்கு 2  லிட்டர் / 4 கிலோ பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம்.2 கிலோ வேம், 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம்.

ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஒரு ஏக்கருக்கு

அமிர்தக்கரைசல்  200 லிட்டர்,  ஜீவாமிர்தம் 200 லிட்டர்,
மீன் அமிலம்  2 லிட்டர்,
இஎம் கரைசல் 2 லிட்டர்
பஞ்சகாவியா 3 லிட்டர்

என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..

இயலுமானால்  மக்காச்சோள சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 50 to 55 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு..  களை கட்டுப்படும்.

விதைகள் நடவு செய்யும் முன்பு ஒரு ஏக்கருக்கு 100 -150 கிலோ வெப்பம் புண்ணாக்கு தூளை நன்கு பரவுமாறு தெளிக்க வேண்டும்.

இலைகள் வெளிவந்த நாள் முதல் படைப்புழு தாக்கம் தென்பட்டால் நான்கு நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசிலெஸ் துறிஞ்சிஎன்சிஸ் என்ற திரவம் கலந்து ஒட்டும் திரவத்துடன் மாலை வேளையில் அனைத்து பயிர்களுக்கு உள்ளே இறங்குமாறு தெளிக்க வேண்டும்.