இயற்கை விவசாயத்தில் இடுபொருள்

இயற்கை விவசாயத்தில் இடுபொருள்

இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களுக்காக வெளிச் செலவு செய்யாதீர்கள்

இதற்காக நமது பணம் வெளி செல்வது மிக தவறு. மண்ணில் நிறைய தொழு உரம் கொடுங்கள்.

நிறைய கொடுங்கள்

மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும்

இதற்காக மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் உண்மை நிலை

களைகளை பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப் படாதீர்கள்

சூரிய ஒளி அறுவடையில் போட்டி போடும் வரையில் தான் அது எதிரி

அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்

களைகளும் மண்ணுக்கு தேவையே!

மண்ணில் மக்கு நிலை உயர வேண்டும். அது இல்லாமல் நாம் கொடுக்கும் நுண்ணுயிர்கள் உயிர் வாழ இயலாது. தொடர்ந்து கொடுத்தே ஆக வேண்டும்

மக்கு உயர்ந்தால் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும்

மண்ணில் இல்லாத நுண்ணுயிர்கள் ஏதுமில்லை. அதை பெருக்கும் வேலையாகவே இயற்கை இடுபொருள்களை கொடுக்கிறோம்

தொழு உரமும், பசுந் தாள் உரமும் தான் மண்ணின் முதல் தேவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கும் பொருள்களை மண்ணில் புதைப்பதால் மட்டும் எல்லா சத்துக்களும் கிடைப்பதில்லை, அவைகளை மண்ணுக்கு மேலே போட்டு மக்க விடவேண்டும்

இவை மக்க இயற்கையில் எல்லா உயிரினங்களும் உதவும் போதுதான் அனைத்து சத்துக்களும் மண்ணில் இருக்கும். “

புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம்.

ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது.

நாம் கனரக டிராக்டர்களை பயன் படுத்தியதில் மண் 15 செ மீ ஆழத்திற்கு கீழே இறுக்கம் அடைகிறது. நீர் ஊடுருவி கீழே போக முடியாத வகையில் அது அமைகிறது. இது பயிர் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். வேரின் வளர்ச்சி குறைகிறது. இது மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும்.

மண்ணின் அடியில் இருக்கும் நுண்ணூட்டச்சத்து பயிருக்கு கிடைக்காமல் போகும்.
இப்போது புல்வகை தாவரங்கள் இதை எப்படி சரி செய்கிறது என பாருங்கள்.
படிக்கும் போது என் பார்வையில் பட்டதை பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றாக வளரும் புற்களின் வேர்கள் மண்ணின் மேல் உள்ள அதன் வளர்ச்சியில் 1.5 அளவுக்கு மண்ணில் கீழே செல்கிறது.
கீழே உள்ள mineral களை மேலே கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் கீழ் மண்ணில் organic matter களை விட்டு வைக்கிறது. இது கடினப்பட்டுபோன மண்ணை இளகவைக்கிறது.

இது தான் புல்வகை தாவரங்கள் செய்யும் மகத்தான செயல்.

இப்போது சொல்லுங்கள் புற்கள் எதிரியா, நண்பனா என்று.

இயற்கை விவசாயம் என்பது களைகளோடு இணைந்து இருப்பதுதான்

பயிர் வளர்ச்சியில் 96% ஆர்கானிக் சத்துக்கள், மீதி 4% inorganic சத்துக்கள்

இதில் ஆர்கானிக் சத்துக்கள் ஒளி ச்சேர்க்கை வழியாக சூரியன், காற்று தண்ணீர் மூலமாக உற்பத்தி செய்யப் படுகிறது. Inorganic சத்துக்கள் மண்ணில் இருந்து வேர்கள் வழியாக பயிருக்கு கிடைக்கிறது

ஆர்கானிக் சத்துக்களை பேரூட்டச்சத்துகள் என்றும் inorganic சத்துக்களை நுண்ணூட்டச்சத்துகள் என்றும் சொல்கிறார்கள்

ஆர்கானிக் சத்துக்கள் indefinite sources (சூரியன், காற்று, தண்ணீர்) வழியாக வருகிறது

Inorganic சத்துக்கள் limited source (மண்) வழியாக வருகிறது

2007 ல் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கி பல நிலைகளிலும் அது குறித்து கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டேன்

ரசாயனம் தவிர்த்து இயற்கை இடுபொருள்களை தயாரித்து நம்மாழ்வார், பாலேக்கர் வழியாக பயணித்து நகர்ந்தது

இடுபொருள் செலவு குறையும் படியாக என் கவனத்தை தொடர்ததில் முதல் நிலையாக அனைத்து இடுபொருள்களையும் தாண்டி ஜீவாமிர்தம் மட்டுமே போதுமானது என உணர ஆரம்பித்தேன்

மண் நலமும், வளமும் மட்டுமே இயற்கை விவசாயம் என்பது தெரிந்தது கொண்டேன்

செலவு குறைப்பு என்ற நிலையில் WDC (waste decomposer) மேலும் முன்னெடுத்துச் சென்றது.

தற்போது தற்சார்பு நிலையின் முக்கியத்துவம் உணர்ந்து அடுத்த நிலை நோக்கி சோதனை முறையில் இன்னும் செலவு குறைப்பு முறையில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளேன்

வெளியில் இருந்து வாங்கும் இயற்கை இடுபொருள்களின் பலன் முழுமையாக கிடைப்பதில்லை. ஏன்?

வயலின் சூழ்நிலை, வெப்பதட்பங்களுக்கு தகுந்தபடி நுண்ணுயிர்கள் மாறுபடும் என கணிக்கப்படுகிறது. Aerobic, anaerobic என நுண்ணுயிர்கள் வகைப் படுகிறது

பாதுகாப்பான சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர்கள் நமது சூழ்நிலையில் வாழ இயலுமா?

யோசித்துப் பாருங்கள்

நமது வயலின் சூழ்நிலை, தட்பவெட்ப நிலையில் தயாராகும் இடு பொருள்கள் மட்டுமே முழுமையான பலனை கொடுக்கும்.

அதனால் இயற்கை இடுபொருள்களை நாமே தயாரிப்பதே சிறந்தது

நம்மாழ்வார், பாலேக்கர் வழிகளை தாண்டி இயற்கை விவசாயம் செய்ய முடியாதா?

நாட்டு மாடு இல்லாமல் இயற்கை விவசாயம் இல்லையா?

இதற்கான வழிகளை தேடி எனது பயணம்

முதல் படியில் கால் வைத்தாயிற்று.

இடுபொருள்கள் செலவில் 60% அளவுக்கு குறைக்க இயலுகிறது.

மீதி 40% ல் 30% ஆட்கூலி. மேலும் முயற்சி தொடர்கிறது. இன்னும் 20% அளவுக்கு கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கை உள்ளது

வெற்றியை தொட்டதும் விரிவாக சொல்கிறேன்

இப்போதைக்கு 200லிட்டர் நுண்ணுயிர்கள் கரைசலை ₹17 க்கு தயாரிக்க முடிகிறது

 

From facebook posting: சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி