இயற்கை விவசாயத்தில் எறும்பு/ மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த தீர்வு:
அரைக்கிலோ வசம்பு அம்மியில் விழுதாக அரைத்து அரை லிட்டர் தண்ணீருடன் தனியாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அரை கிலோ சித்தரத்தை அம்மியில் விழுதாக அரைத்து இன்னொரு அரை லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பயிர்களில் தெறிக்கும் முன்பு 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு திரவங்களில் இருந்து 200 மில்லி + 200 மில்லி ஆக மொத்தம் 400 மில்லி கலந்து, கலந்தவுடன் உடனடியாக எறும்புகள் மீதும் அல்லது மாவு பூச்சி என்ற சப்பாத்தி பூச்சியின் மீதும் தெளிக்க வேண்டும்.
அதிக கசப்புத் தன்மையுள்ள வசம்பு மற்றும் அரிப்பு தன்மை ஏற்படுத்தும் சித்தரத்தையும் இணைந்து எறும்புமீது அல்லது மாவுப் பூச்சியின் மீது படும்போது அவை எறும்பு/மாவுப்பூச்சி மீது அதிக எரிச்சலை உண்டுபண்ணி முழுமையாக அழிந்து போகக் கூடிய வகையில்
செயல்படக்கூடியது.
3 முதல் 4 நாள் இடைவெளியில் இருமுறை செய்வது நல்ல பலன்கள் தரும்.
திரு. ராஜ வேணுகோபால் அய்யா
பாண்டிச்சேரி அவர்களின் அனுபவ பதிவு.