இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள்

Agriwiki.in- Learn Share Collaborate
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு
தமிழகமெங்கும் இயற்கை விவசாயப் பொருள்களை அனைத்து நகர கிராம பகுதிகளுக்கு பரவலாக்கும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகளை பயன்படுத்தலாம்.
1. தங்களிடம் உள்ள தினசரி விளைபொருளை உங்கள் பகுதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அல்லது சாலைகளில் பாதுகாப்பான இடங்களில் வைத்து விற்பனை செய்யலாம்.
2. 4 முதல்5 விவசாயிகள் இணைந்து கூட இவ்வாறாக மாலை வேளையில் 4 மணி முதல் 7 மணி வரை விற்பனை செய்யலாம்.
3. நகரின் ஒரு பகுதியில் மட்டும் விற்பனை செய்வதை விட, பல பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக விற்பனையைத் தொடங்கலாம்.
4. அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அன்றைய தினத்தில் உங்களிடம் உள்ள இயற்கை பொருளை விற்பனை செய்யலாம்.
5. ஒரு இடத்தில் அதிக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்போது, அதனை அருகிலுள்ள நகர பகுதிகளில் உள்ள அப்பார்ட்மெண்ட் எனப்படும் மக்கள் ஒரே இடத்தில் கூட்டாக வாழும் இடங்களில் விற்பனை செய்யலாம்.
6. மருத்துவமனைகள், கல்லூரிகள், உணவகங்கள் போன்றவற்றை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
7. எந்த விற்பனை இடமாக இருந்தாலும் “இயற்கை உணவு, காய்கறிகள், பழங்கள்” என்ற அட்டை அல்லது பதாகைகள் தொங்கவிடுவது நல்லது.
8. முடிந்தவரை அருகிலுள்ள உழவர் சந்தை ஒட்டி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம்.
9. அனைத்து கிராமங்களிலும் இந்த விற்பனையைத் தொடங்கலாம். இயற்கை பொருள்களின் முக்கியத்துவத்தை சிறிதுசிறிதாக மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
10. ஒவ்வொரு சாலைகளிலும் உள்ள டோல் கேட் அருகில், கோவில்கள், மார்க்கெட் பகுதிகள், போன்ற இடங்களில் சிறு கடைகள் அமைப்பது நல்லது.
11. நீங்கள் விளைவித்த பாரம்பரிய அரிசியை கூட சிறு சிறு (1 கிலோ) பாக்கெட்டுகளாக விற்பனை செய்யலாம்.
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்.