இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி

இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி
Agriwiki.in- Learn Share Collaborate

இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது.

மரப்பயிர் சாகுபடி குறித்து
துறை சார்ந்த வல்லுனர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில் கலந்தாலோசிக்க பட்ட விடயங்களை வெற்றி அமைப்பு மற்றும் வனத்துக்குள் திருப்பூர் நிறுவர் கிளாசிக் போலோ திரு.சிவராமன் அண்ணா அவர்கள் தொகுத்து வழங்கினார் அதை அனைவருக்கும் பயன்பட இங்கு பதிவு செய்கிறேன்…

நன்றி

ஏர்வளம் திவாகர் பழனிச்சாமி

மரப்பயிர் சாகுபடி

1. தேக்கு
2.செம்மரம்
3.மகாகணி
4.காயா
5.மலைவேம்பு
6.குமிழ் தேக்கு.

மேற்படி மரங்கள் சரியான தண்ணீர் விட்டு … வருடம் ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் கொடுக்கும் போது 10-15 வருடத்தில் ஒரு ஏக்கருக்கு நல்ல லாபம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது.

கவனிக்க வேண்டும்:

மண் வளம் / நீர் வளம் / ஊட்டச்சத்துக்களை மரம் எடுக்கிறதா…. இல்லை மறுக்கிறதா என்ற புரிதல் தான் இங்கு வெற்றிக்கு காரணம்.

முந்திரி / சிவப்பு & மஞ்சள் பலா – திருப்பூர் மாவட்டத்தில் நன்கு வளரும் பயிர்… அவசியம் முயற்சி செய்யலாம் ‌…..!!!

ஊடுபயிர் சாகுபடி :

மேற்படி மரங்கள் சாகுபடி செய்யப்படும் போது முதல் 3-5 வருடங்கள் ஊடுபயிர் செய்து லாபம் ஈட்டும் வாய்ப்பு மிகவும் எளிதானது…..
1. வாழை.
2. எலுமிச்சை.
3. கொய்யா.
4. கறிவேப்பிலை.
5. கொடுக்காய் புளி.
6. முருங்கை.

மற்றும் அனைத்து மார்கெட் காய்கறி ரகங்கள்.
( நமது அறப்பொருள் வேளாணகத்தில் இந்த மாடல் உடனே பார்க்கலாம்).

சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் :

1. திசு வளர்ப்பு சவுக்கு.
2. தைல மரம்.
3. சூபா புல் மரம் ( இது நம்ம பகுதியில் களை முளைத்த மாதிரி வளரும்).
4. கடம்பு.
5. பீய மரம்.

இவை ஐந்தும் காகித ஆலையின் ஒப்பந்தம் செய்து நடவு
செய்ய ஆலைகள் காத்திருக்கின்றன.

மரவளர்ப்பில பொதுவான விதிமுறைகள்:

1. மரத்தின் உயரத்திற்கு ஏற்ப வேர் ஆழம் இருக்கும். எனவே கடும் பாறை / குறைந்த உயரமே மண் வளம் மற்றும் இலகுவான பாறைகள் இருக்கும் பட்சத்தில் பழ வகை மரங்கள் அதிக பலனளிக்கும்…..
உதாரணத்திற்கு – மாமரம் / பெருநெல்லி / சப்போட்டா / முந்திரி ..

பொள்ளாச்சி சக்தி குழுமத்தின் தோட்டத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எலுமிச்சை வருடம் ஏக்கருக்கு  நல்ல வருமானம் தருகிறது.
(இன்கம் டேக்ஸ் இல்லீங்கோ).

கடும் உப்பு நீரால் விவசாயம் செய்ய முடியவில்லையா…??

அதற்கும் தீர்வு தருகிறார் முனைவர் செந்தூர் குமரன்…‌.

1200 ppm முதல் 15000 ppm வரை உள்ள நீருக்கும் தீர்வு…..
காந்தம் பொருத்திய குழாய்கள் மூலம் நீரை பாய்ச்சும் போது அடர்த்தி கொண்ட உப்பு பிரிந்து பல பயனுள்ள பயிர் சாகுபடிக்கு உதவுகிறது.

இதன் முதலீடு ₹28 ஆயிரம் முதல் ₹1.50 லட்சம் வரை …. பலன்களை காணும் போது முதலீடு ஒரு மேட்டரே இல்லப்பா.

பணப்பயிர்கள்

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரவு பகலாக களப் பணிகள் செய்ய தயார் என்று இருந்தால் மட்டுமே கீழ் கண்ட பணப்பயிர்கள் செய்யலாம் :
1. சம்பங்கி மலர்.
2. கண் வழி கிழங்கு.

வருட வருமானம் நிச்சயம் … ஆனால் மறுபடியும் கண்டிஷனை படீங்க…!!

 

ஆறு அடி – எட்டு அடி என நன்கு வளர்ந்த மரக்கன்றுகள் துரிதமாக
வளர்ந்து பலன் தருமா?

ஆம்:
கன்று 3 மாதம் ஒரு முறை பை மாற்றம் செய்யப்பட்டு செடியின் ஆனி வேர் மற்றும் சல்லி வேர்கள் மோட்டார் காயில் போல பைக்குள் சுருள் போடாமல் இருந்தால் மட்டுமே…..!!!

நர்சரி நமது கட்டுபாட்டில் இல்லையே….!!! இதை உறுதி செய்யாமல் கன்று நட்டால் எதிர்மறையான பலன்கள் கிடைக்கும்.
என்ன தீர்வு…..??

செம்மண் மற்றும் இயற்கை உரம் சேர்த்து – செடி 3 அடி உயரத்தில்….. நடவு செய்யும் பட்சத்தில்… மரங்கள் வறட்சியை தாங்கி நன்கு வளரும் –
நர்சரி நிலையில் ரசாயன உரங்கள் சேர்த்தால் நட்ட பிறகும் மரங்கள் அதே உரத்தை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்…..!!
வளர்ச்சி குன்றும்…!!
திரு.செல்வராஜ்
(Forest Range Officer – Mettupalayam)

வெயில் காலத்தில் கொத்துமல்லி செடி வளர்ச்சி இல்லை….
மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பாக வந்த அதே விதை… அதே பாத்தி….???

விடை:
விதைகள் குறைந்தது 10% ஈரப் பதம் கொண்டு இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக பச்சை துணியில் நிழல் பந்தல் அமைக்கும் போது வளர்ச்சி நன்கு இருக்கும் ‌.

இது அனைத்து வகை கீரைகளுக்கும் பொருந்தும் தீர்வு ..‌!
இருபது நாட்கள் – ஒரு அறுவடை என்பது தான் கீரை மந்திரம்

செம்மரம்

 

சென்னை அருகே ..
25 ஏக்கருக்கு- 20 வருடம் மிக நல்ல வருமான வாய்ப்பு உள்ளது …!

செம்மரம் – முதல் வருடம் முதல் பக்க கிளைகள் முறையாக கவாத்து செய்து …. நல்ல தொழு உரம் மற்றும் நீர் மேலாண்மை செய்யும் போது ….. மேற்படி வருவாய் கூடுமே  தவிர குறையாது.

மரமும் நமது குழந்தைகள் போல.. வளர்த்தலின் அருமை பிற்காலத்தில் பெருமை.

நன்றி .

ஏர்வளம் திவாகர் பிரசன்னா பழனிச்சாமி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.