உணவு,உடை,இருப்பிடம்

உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள்
Agriwiki.in- Learn Share Collaborate

உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதைத்தான் நமது பெரியோர்கள் “”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்று சொல்லி வைத்தனர்.

உணவு,உடையில் பல பாரம்பரிய இயற்க்கை முறைகளை பல பெரிய மனிதர்களின் முன்ணெடுப்பால் பல மாறுதாள்களும் விழிப்புணர்வும் மக்களின் மனதில், செய்கையில், சிந்தனையில் ஏற்பட்டுள்ளது உண்மை. எனவே இனி இருப்பிடத்திலும் பாரம்பரிய முறையை பயன்படுத்த வேண்டும். இவை நமது சூழலுக்கு ஏற்ற வீடுகள்.

பணம் படைத்தவர் மட்டுமே வீடு கட்ட முடியும் என்பதை மாற்ற வேண்டும்.இதற்கான மாறுதல் இனி ஏற்ப்படும் என்பதை நேற்று நான் பதிவிட்ட பதிவு எனக்கு உணர்த்தியது. இவை அனைத்தையும் உங்களிடம் கொண்டு செல்லும் கருவி மட்டுமே நான்.

இவை அனைத்தும் approved technologies.  இதனை கொண்டு பல கல்லூரிகள், அரசு கட்டிடடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், போன்றவை பல வெளி மாநிலங்களில் கட்டப்பட்டுள்ளது.

இதனை பகிர்ந்த,பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.முடிந்த வரை இயற்கையை சிதைக்காமல் வாழ முயற்சிப்போம்..

உங்கள் ஆதரவுடன் ஹரி
For Contact: 9865368997