உயிர்வேலி பற்றி சில தகவல்கள் :
******************************************
உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல.. செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை.
தற்சார்பு பொருளாதாரத்திற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும் உயிர்வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றைத் தடுக்கும் தடுப்பானகவும் அமையும்.
இதனால் நம் நிலத்தின் உள்ளே நாம் பயிரிடும் பழமரங்கள், பயிர்கள், தென்னை, வாழை போன்றவைகளை கீழே சாயவிடாமல், காற்றின் வேகத்தைக் குறைத்தும், தடுக்கும் தடுப்பாகவும் பயன்படும்.
பல்லுயிர்களின் பெருக்கமாகவும், அதற்குத் தேவையான வாழ்விடமாகவும் அமையும். உயிர்வேலி நம் நிலத்தை சுற்றி அமைக்கும் போது பாம்பு போன்ற நாம் அஞ்சக் கூடிய உயிர்கள் அனைத்தும் நிலத்திற்குள் தங்காமல் வேலியில் தங்கி நமக்கும் பாதுகாப்பு வளையமாக செயல்படும்.
ஆந்தை, மயில்கள், இன்னும் பல பல பறவை இனங்கள் போன்ற உயிர்கள், வேலிகளிலே கூடு கட்டித் தங்கி சிறு சரணாலயமாகவும் செயல்படும்.
உயிர் வேலி அமைக்கும் போது அகழி எடுத்து, கரையை உயர்த்திப் பின் உயிர்வேலி விதைகள் மரங்கள் நட வேண்டும். இதனால் மண் அரிப்புத் தடுக்கப் படுகிறது.
தேனீக்களுக்கும் உணவும், வாழ்விடமாகவும் உயிர்வேலிகள் அமையும். கால்நடைகளுக்கும் தேவையான உணவையும் வழங்குகிறது. பனை , சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் உயிர்வேலியில் இருக்கும் போது நமக்கான உணவையும், வீட்டுத் தேவைகளுக்கு உண்டான மரப் பொருட்களையும் அளிக்கிறது.
உயிர்வேலிக்கு பயன்படுபவைகள் சில :
• பரம்பை முள்
• கிளுவை முள்
• நாட்டுக் கருவேலம்
• பனைமரம்
• கலாக்காய்
• சீகைக்காய்
• கொடுக்காய்ப்புளி
• இலந்தை
• சவுக்கு இன்னும் பலப்பல…
பராமரிப்பு இல்லா மரங்கள் நிறைய உள்ளன.
வரும் மழைக்காலத்திற்கு முன்னர் நிலத்தின் எல்லைப்பகுதிகள் முழுவதும் உயிர்வேலி வளர்வதற்கு சிறிது இடம் ஒதுக்கி ( குறைந்தது 10அடி ) உயிர்வேலி அமைத்து அதற்கான பலனை அனுபவிப்போமாக…
நன்றி..
தேன்கனி நாட்டு விதைப்பகிர்வுக் குழு,
சிவகாசி.
தொடர்புக்கு : 94435 75431, 96554 37242
நாட்டுவிதைகள், தேன்கனி உயிர்வேலி
மிகவும் பயனுள்ள தகவல் — நன்றி
உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்