ஊட்டஉரம்

ஊட்டஉரம் compost

நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்க வயலுக்கு ஊட்ட உரம்

வணக்கம்,
1 ஏக்கருக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன்
மீன்அமிலம் – 1லிட்டர்
இஎம் – 500 மில்லி
கோமியம் – 10 லிட்டர்
பயறு மாவு – 2 கிலோ
பழக்கரைசல் – 2 லிட்டர்
வெல்லம் – 2 கிலோ
பஞ்சகவ்யா – 1 லிட்டர்
அசோஸ்பைரில்லம் – 1 கிலோ
சூடோமோனஸ் – 500 கிராம்
கடலைபுண்ணாக்கு -10 கிலோ
புங்கன் புண்ணாக்கு – 10 கிலோ
ஆமணக்கு புண்ணாக்கு – 10 கிலோ.

நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும்.

6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில், வேப்பம் புண்ணாக்கு- 10 கிலோ கலந்து வயலுக்கு தூவி விடவும்.

ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும்.