ஊட்டமேற்றிய ஆட்டு எரு

ஊட்டமேற்றிய ஆட்டு எரு

ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை

 

ஊட்டமேற்றிய ஆட்டு எரு –  பயிரின் வளர்பருவம், பூக்கும்பருவம், காய்க்கும் பருவம் என அனைத்து நிலைகளிலும் தரலாம் போட்டவுடன் பயிரில் உடனடி மாற்றத்தை காணலாம்..

நன்கு தூளாக்கப்பட்ட ஆட்டுஎரு – 100 கிலோ.
பஞ்சகவியம் – 1லிட்டர்
மீன்அமிலம்- 1லிட்டர்
பழக்காடி – 1லிட்டர்
வெல்லம் – 2 கிலோ.
பயறுமாவு – 5 கிலோ
சாணிப்பால் – 10 லிட்டர்
கோமியம் -.10 லிட்டர்.
அசோஸ்பைரில்லம் – 1 கிலோ.
பாஸ்போபாக்டீரியா – 1கிலோ.
சூடோமோனஸ் – 1கிலோ
கடலைபுண்ணாக்கு -.10 கிலோ
எள்ளுபுண்ணாக்கு – 10 கி
ஆமணக்கு புண்ணாக்கு – 10 கி.

#ஆட்டு எருவை, டிராக்டர் விட்டு மிதித்து, நன்கு தூளாக்கி கொள்ளவும்.

# தூளாக்கப்ட்ட எருவை பரப்பி அதன் மேல் பஞ்சகவியம், மீன்அமிலம், பழக்காடி ஆகியவற்றுடன் சமபங்கு தண்ணீர் கலந்து எரு மேல் தெளிக்கவும்.

#கடலைபுண்ணாக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே தண்ணீரில் ஊறவிட்டு, புளிக்க விடவும்.

# எள்ளு, ஆமணக்கு புண்ணாக்கு, ஆகியவற்றை எரு மேல் பரவலாக தூவவும்.

# வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து கரைசலாக்கிய பின்னர், எருவின் மேல் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை தூவி, நுண்ணுயிரிகள் பல்கி பெருக பயறுமாவையும் தூவவும்.

# இடுபொருட்கள் தூவப்பட்ட எருவின் மேல் கடலைபுண்ணாக்கு, வெல்லம், கோமியம், சாணிப்பால் கலந்த கரைசலை எரு முழுவதும், நன்கு நனையும்படி தெளித்து, எருவை நன்கு கலந்து குலியலாக சேர்த்து மரநிழலில் தென்னஓலை போட்டு மூடி 7 நாட்கள் வைக்கவும்.
தினமும் எருவின் மேல் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து எரு மேல் தெளித்து வரவும்.

# 7 நாட்களுக்கு, பிறகு ஆட்டு எரு, இயற்கை இடுபொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கி பெருகி, ஊட்டமேறிய உரமாக தயாராகி இருக்கும்.

இந்த ஊட்டமேற்றிய ஆட்டுஎருவை, பயிரின் வளர்பருவம், பூக்கும்பருவம், காய்க்கும் பருவம் என அனைத்து நிலைகளிலும் தரலாம்.

ஊட்டமேற்றிய ஆட்டு எரு போட்டவுடன் பயிரில் உடனடி மாற்றத்தை காணலாம்.

நெற்பயிரில் நடவுக்கு முன் அடியுரமாகவும், வளர் பருவத்தில் 15 நாட்கள் இடைவெளி விட்டு இரண்டு முறையும், தொண்டைபருவத்தின் போது ஒரு முறை என நான்கு முறை, ஊட்டஉரம் தரும்போது, சிறப்பான மகசூலை அடையலாம்.

ஊட்டஉரத்தை பயன்படுத்துதற்கு முன் வயலில் ஈரப்பதம் இருப்பது அத்தியாவசியம்.
ஈரப்பதம் இல்லா மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் சிறப்பாக நடக்காது.

வயலுக்கு ஊட்டஉரம் இடுவதற்கு முன்னர் பயிர்களில், வேரழுகல், பூஞ்ஞான் நோய்களை கட்டுபடுத்த,வேப்பம் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு தலா 10 கிலோ ஊட்டஉரத்துடன் கலந்து பயன்படுத்தலாம்.

இவ்வாறாக சிறப்பாக ஊட்ட எருவை பயன்படுத்தும்போது பயிரின் பாதுகாப்பும், வளர்ச்சியும் நிலைபடுத்தப்படுகிறது.

நன்றி.
அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.