எளிய உயிர்வேலி

எளிய உயிர்வேலி

ஒரு மறைப்பானாக அதே வேளை முள் இல்லாத உயிர் வேலியாக செம்பருத்தியைத் தேர்ந்தெடுக்கலாம். மிக நெருக்கமாக வளருகிறது. குறுக்குக் குச்சிகளை தேவைப்படும் உயரத்தில் படுக்கைவசத்தில் கட்டி இன்னும் பலப்படுத்தலாம். இரு முனைகளை அழுத்திப்பிடித்துக் கொள்ளும் அமைப்பும் இருந்தால் இன்னும் சிறப்பு. மலர்கள் மருத்துவ குணமுடையது. காயவைத்து பொடியாக்கி காசாக்கலாம்.