ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?!

இது இயற்கை விவசாயத்தில் மிக முக்கியமான செயல்பாடு.

 

ஏன் பயிர் சுழற்சி அவசியம்? – அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.  என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

என் தந்தை சொல்லுவார், நிலத்தை கொஞ்சம் ஆறப்போடனும் என்று.

அந்த வயதில் எனக்கு ஏன் என்று கேட்கவும் தோன்றவில்லை.

பின்னாளில் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

மதியம் சாப்பாட்டுக்கு அம்மா முன்கூட்டியே சமைக்க தொடங்குவார்கள். அப்படிதான் இதுவும். நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை மெதுவாக சமைத்து பயிர் எடுக்கும் வகைக்கு கொண்டு வருகிறது. அதுதான் அப்பா, ‘நிலத்தை ஆறப்போடு’ என சொன்னார்

எல்லா பயிர்களும் மண்ணில் இருந்து ஒரே மாதிரி சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. சில பயிர்கள் சில சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும். சில பயிர்கள் அந்த சத்துக்களை குறைவாக எடுத்துக் கொள்ளும்.

அதிகமாக ஒரு சத்து எடுத்துக் கொள்ளும் வேளையில் மண்ணில் அந்த சத்து குறைபாடு தற்காலிகமாக இருக்கும். அந்த சத்து மீண்டும் நுண்ணுயிர்களால் உயார்ப்பிக்க சிறிது காலம் தேவை படும்.
இந்த காலத்தில் அதே பயிரை மீண்டும் பயிரிட்டால் அந்த சத்து குறைவாகவே கிடைக்கும் நிலை ஏற்படக்கூடும்.

வேறு ஒரு பயிர், அந்த சத்து குறைவாக தேவைப்படும் பயிர், செய்யும்போது அந்த சத்து குறைவாகவே மண்ணில் இருந்து எடுக்கப் படும். அந்த காலத்தில் அந்த சத்து மீண்டும் மண்ணில் நிலைபெறும்.
இதுதான் அந்த சூட்சுமம்.

இதனால் மண்ணில் சத்துக்கள் சமநிலை உறுதி படுகிறது.

அடுத்து பயிர்கள் தனக்கு வேண்டிய சத்துக்களை மண்ணில் இருந்து தான் எடுத்துக் கொள்ளுகிறதா, அவை எப்படி பயிர்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து தொடர் பதிவில் பார்க்கலாம்.

சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *