ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன…. ஒரு வேளாண்மை நிலம் என்றால் அதில் ஒற்றை பயிர் மட்டும் விளைவிப்பது என்றும் ஆபத்தையே விளைவிக்கும்…
கணேசு குமார் பெரியசாமி தம்பியின் பதிவிலிருந்து.
#Integrated_Farming_System (IFS)
ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன?
இந்த முறை உழவர்களின் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.. இந்த முறை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.. காலங்காலமாக நம் உழவர்கள் பாரம்பரியமாக செய்து வந்த வேளாண்மை தான்..
எப்படி ஒற்றை நெல் நாற்று முறையை ராஜராஜன் 1000 என்று பெயர்சூட்டி திரு. கருணாநிதி அறிவித்து புகழ் தேடிக் கொண்டாரோ.. அதைப் போல் தான் இந்த ஒருங்கிணைந்த பண்ணையமும்..
வேளாண்மை என்பதை மனிதர்கள் எக்காலத்திலும் செய்ய முடியாது.. அதை இயற்கையால் மட்டுமே செய்ய முடியும், மனிதர்கள் அதற்கு உதவி மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்..
ஒரு வேளாண்மை நிலம் என்றால் அதில் ஒற்றை பயிர் மட்டும் விளைவிப்பது என்றும் ஆபத்தையே விளைவிக்கும்..
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறுகிய (short term crops), இடைகால (medium term crops) மற்றும் நீண்டகால( perennial crops) வருமானம் தரும் பயிர்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் போன்ற வாய்ப்புள்ள பொருளாதாரத்தை தரக்கூடிய எல்லாவற்றையும் செய்யலாம்..
அதில் முக்கியமானது என்னவென்றால்?
ஒரு விடயத்தின் கழிவு மற்றொன்றுக்கு உணவாக அமைந்து கழிவுகள் அனைத்தும் இன்னொன்றின் உணவாக மாற வேண்டும்.
உதாரணமாக: கோழியின் கழிவு மீனுக்கும், மீனின் கழிவானது பாசன நீரின் வழியே பயிருக்கும், பயிரின் தாள் (இலை, தழை) கால்நடைகளுக்கும், கால்நடையின் கழிவு மீண்டும் பயிருக்கும், மீனுக்கும் உணவாக வேண்டும்..
தற்சார்பு வேளாண்மையை முன்னெடுக்க மிக முக்கியமான ஒன்று எக்காரணத்தை கொண்டும் இடு பொருட்கள்( Farm inputs) வெளியே இருந்து வாங்குவது கூடாது.. நாமே இயன்றவரை உற்பத்தி செலவை குறைத்தால் தான் வேளாண்மை பொருளாதார அடிப்படையில் கை கொடுக்கும்..
எனவே ஒருங்கிணைத்த பண்ணையம் ஒரு வரப்பிரசாதம் தான்..