கருங்கல் அடித்தளம்

கருங்கல் அடித்தளம் load bearing structure
Agriwiki.in- Learn Share Collaborate
கருங்கல் அடித்தளம்

சிமெண்ட் என்ற பொருளுக்கு மட்டுமே கட்டிடத்தில் வயது என்ற ஒன்று உண்டு.மற்ற பொருட்களுக்கு அதாவது கருங்கல்,மண், மணல்,செங்கல் போன்ற பொருட்களுக்கு வயது என்ற ஒன்று இல்லவே இல்லை.

கட்டிடத்தின் வலிமைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சிமெண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகமாக பயன்படுத்தினாலும் அதன் ஆயுள் அதிகரிக்காது. அதே 70 வருடங்கள் தான்.

இன்று பெரும்பாலான கட்டிடங்கள் concrete column மற்றும் beam இல்லாம அதாவது framed structure முறையிலேயே கட்டப்படுகிறது. இதனை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு அவன் பில்லர் போட்டு கட்டிவிட்டான் இவன் பில்லர் போட்டு கட்டிவிட்டான் (பெரும்பாலான வேலைகள் கட்டுமான துறையில் இப்படித்தான் நடக்கிறது.)என்று நல்ல கடினமான மண் மற்றும் தரைதளம் மட்டுமே கட்டும் நண்பர்கள் கூட இதனை பற்றிய அறிவு இல்லாமல் மிக குறைந்த செலவு பிடிக்கும் கருங்கல் மற்றும் செம்மண் கொண்டு போடப்படும்(load bearing structure) கடைக்காள் மற்றும் நம் பாரம்பரிய முறை அடித்தளத்தை புறம் தள்ளி விடுகிறார்கள்.

ஆனால் லாரிபேக்கர் load bearing structure முறையிலேயே g+3 அதாவது மூன்று மாடிகள் கட்டி உள்ளார்.

எனக்கு கிடைத்த சில லாரிபக்கரின் கட்டுமான படங்களை இணைத்துள்ளேன்.நானும் g+2 வரை கட்டியுள்ளேன்.  – HariPrasath