காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர்
காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக…அரிசி தண்ணீர்
அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்:
அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என்.பி.கே. மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது.
அரிசி நீரில் பல ஸ்டார்ச் வைட்டமின்கள், புரோட்டீன்கள் உள்ளன, காய்கறிகள், பூக்கள் மற்றும் போன்சாய்களுக்கு மிகவும் நல்லது.
பலன்கள்:
அதிக பூ பூக்கவும் பெரிதாகவும் உதவுகிறது…
காய்கறிகள் திரட்சியாக காய்க்க உதவுகிறது..
அனைத்து விதமான செடிகளுக்கும் தரலாம்…
அரிசி தண்ணீர் எப்படி செய்வது ?
சாதம் வடித்த கஞ்சி….
5 நிமிடம் சாதம் கொதித்த தண்ணீர் அல்லது வடித்த கஞ்சி பயன்படுத்தி கொள்ளலாம்…
1 லிட்டர் சாதம் வடித்த தண்ணீர்
2 லிட்டர் தண்ணீர்
2 ஸ்பூன் கடுகு தூள் இருந்தால் சேர்த்து கொள்ளலாம்..
பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி கடுகு தூள் 2 ஸ்பூன் சேர்த்து 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொண்டு துணி போட்டு மூடி நிழலில் 3 நாட்கள் வைக்கவும்..
பயன்படுத்தும் முறை:
4 நாள் நன்றாக கலந்து கொண்டு செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்.. 1 லிட்டர் வரை ஊற்றி கொள்ளலாம்…
10 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்…
அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்:
அதிக விட்டமின், அமிலம், கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது.
காய்கறிகள் நன்றாக திரட்சியாக காய்க்கும்.. அதிக பூ பூக்கும்…
பிரசன்னா திருச்சி
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?