அனைத்து வகை காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள் தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, ஆரஞ்சு, அவகோடா, போன்ற பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை நிலவ இருக்கும் அதிகமான வெப்பத்தை அடிப்படையாகக்கொண்டு நமது மரங்களை அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் தண்டுதுளைப்பான் உருவாக்கும் பூச்சிகளும் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் எந்த இடத்தில் உள்ள தோட்டமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயற்கை வழி அல்லது உயிர் வழி இயற்கை பாதுகாப்பு திரவங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொள்ளுவது நல்லது
இயற்கை வழி திரவங்களில்
வேப்ப எண்ணெய் கரைசல் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து சிகைக்காய் தூளில் கரைத்து வடிகட்டி தெளிக்கலாம்
வேப்பங்கொட்டை கரைசல் 100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ எடுத்து கரைத்து தெளிக்கலாம்.
மூலிகை பூச்சி விரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து தெளிக்கலாம்.
கற்பூர கரைசல் தெளிப்பது ஆக இருந்தால் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம்.
இயற்கைவழி திரவங்களை வாரம் ஒருமுறை கூட மாலை வேளையில் தெளித்துக் கொள்வது பலவகைகளில் நன்மை தரும்.
உயிர்வழி திரவங்களில்
10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் 75 மில்லி பேசிலஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற திரவம் கலந்து அதனுடன் 100 கிராம் அளவுள்ள மைதா மாவை பசையாக காய்ச்சி தண்ணீருடன் கலந்து மீண்டும் மேற்கண்ட திரவத்தில் கலந்து மாலை வேளையில் தெளிக்க தண்டுதுளைப்பான் வரும் பகுதிகளில் இது நல்ல பலன் தரும்.
10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம், 75 மில்லி வெர்ட்டிசீலியம் லக்கானி என்ற திரவத்தை கலந்து அதனுடன் 100 கிராம் அளவுள்ள மைதா மாவை பசையாக காய்ச்சி தண்ணீருடன் கலந்து மீண்டும் மேற்கண்ட திரவத்தில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை முழுமையாக தவிர்க் கலாம்
உயிர்வழி திரவங்களை முடிந்த வரை 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தோட்டத்தின் இருப்பைப் பொறுத்து தெளிப்பது நல்லது.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்