குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை

குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை
Agriwiki.in- Learn Share Collaborate

குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை :
கோழிகளுக்கு  குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை  மற்றும்  கவனிக்க வேண்டிய 15 முக்கிய குறிப்புகள் 

*1. முட்டையிடும் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது*

*2. அடைகோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது*

*3.மூன்று மாதம் வரை இளம் கோழி குஞ்சகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது*

*4. தடுப்பு ஊசிகள் / தடுப்பு மருந்துகள் கொடுத்த கோழிகளுக்கு ஓரு மாதம் வரை குடற்புழு நீக்கம் செய்யக்கூடது*

*5. தாய் கோழிகளுக்கு கொடுத்தால் அந்த நாள் இணைச்சேர்கை இல்லாமல் சேவல்களை தனிமைப்படுத்த வேண்டும்*

*6. குடற்புழு நீக்கத்திற்கு பிறகு கொடுக்கும் உணவு, எளிதில் செரிமானம் ஆகும் உணவாக மட்டுமே தரவேண்டும்*

**7. அதிக கார தன்மையான உணவு இருத்தல் கூடாது*

*8. இரண்டு மணி நேரம் தண்ணீர் உணவு இல்லாமல் இருப்பது நல்லது*

*9. மூன்றாம் நாள் ரசம் சாதம் கொடுப்பது மிகவும் நல்லது*

*10. ஆங்கில தடுப்பு ஊசிகள் பயன்படுத்தக் கூடியவர்கள் குடற்புழு நீங்கம், குறைந்த பட்சம் ஓரு வாரதரதிற்கு முன்பாக செய்யவேண்டும்*

*11. மறு நாள் காலை கோழிகளின் எச்சங்களை ஆய்வு செய்யவேண்டும்*

*12. வெயில் காலங்களில் குடற்புழு நீங்கம் செய்யும் போது மூன்றாம் நாள் குளிர்ச்சியான உணவு கொடுப்பது நல்லது.*

*13. குடற்புழு நீங்கம் செய்யும் உணவு அதிக அளவு கோழிகளுக்கு கொடுக்க கூடாது அதன் வீரியம் கோழியை பாதிக்கும்.*

*14. ஏதேனும் கோழிகள் அதிக சேர்வுடன் கானப்பட்டால் அதற்கு தனி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்*

*15. வேறு பண்ணையில் இருந்து கோழிகள் வாங்கி வந்தால், அவர்களுடம் கடைசியாக குடற்புழு நீக்கம் செய்த நாள்/*ஆங்கில தடுப்பு மருந்துகள் போட்ட நாள் போன்ற தகவல்களை அறிந்த பின்னரே குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்*

 

*நன்றியுடன்*
*பசுமை தர்மராஜ்*