கொய்யாவில் பழ ஈ தாக்கத்தை குறைக்கும் முறைகள் :
ஒரு ஏக்கரில் அமைந்துள்ள மரங்களுக்கு குறைந்தபட்சம் 20 எண்ணிக்கையிலான பழ ஈ பொறிகளை மரத்தின் மொத்த உயரத்தில் பாதி அளவில் இருக்குமாறு கட்டி விடுவது நல்லது.
அந்த பழைய பொறிகளில் மாட்டப்ப்படும் லூர் எனப்படும் ஈக்களை கவர்ந்து இழுக்கும் சோப்பு கட்டி போன்ற பொருளை அதன் ஆயுளுக்கு ஏற்ப உடனடியாக மாற்றி விடுவது நல்லது.
நிலத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நிலத்தில் விழுந்த அழுகிய பழங்கள் ,பாதிக்கப்பட்ட பழங்கள், பாதிக்கப்பட்ட இலைகள் போன்ற தவறான பழ ஈ க்களை வரவேற்கும் பொருட்களை பாலிதீன் கவரில் சேகரித்து அழித்துவிடவேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை வழி தீர்வாக கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் என்ற திரவங்களை தெளிப்பது நல்லது.
அல்லது உயிர்வழி தீர்வாக பெவெரியா பேசியானா என்ற திரவத்தை பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிப்பது நல்லது.
அழுகிய நிலையில் இருக்கும் தாவரக் கழிவுகள் அல்லது விலங்குகளின் கழிவுகளை முறைப்படுத்தி, எம் கரைசல் மற்றும் வேஷ்டி டீகம்போஸர் பயன்படுத்தி சரி செய்து வைத்துக்கொள்வது நல்லது .
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்