கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால்

கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால்
Agriwiki.in- Learn Share Collaborate

கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால்

 

கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால், வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும்.

 

கோமாரி நோய்

அதற்கு முதலுதவியாக சீரகம் ,
வெந்தயம் ,
மிளகு ,
பூண்டு 4 பல் நாட்டுச்சக்கரை ,
ஒரு மூடி தேங்காய் மற்றும் மஞ்சள் தூள் ( இவை அனைத்தும் நன்கு அரைத்துக் கொண்டு நெல்லிக்கனி அளவில் கொடுக்கலாம் ) மொந்தன் வாழப்பழம் 2 ( ஒரு வேளைக்கு ) சோற்றுகற்றாழை கால் கிலோ( ஒருவேளைக்கு)
இவை அனைத்தும் தேவையான அளவு எடுத்து கொண்டு
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 வேளை அல்லது 5 வேளை கொடுக்கவும்.

*குறிப்பு* :
நோயினால் பாதிக்கப்பட்ட மாடாக இருந்தாலும் சரி அல்லது நோயினால் பாதிப்படாத மாடாக இருந்தாலும் மேலே சொன்ன அனைத்தையும் கொடுக்கலாம் ..

 

*கோமாரி நோய்*

தற்போது பரவ ஆரம்பித்துள்ளது…
_____________________________________

*நோய் அறிகுறிகள்*

*கோமாரி நோய் கண்ட ஆடு.. மாடுகளுக்கு, வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும்*

இந்த அறிகுறிகள் இருந்து, இரண்டு நாட்கள் கவனிக்காமல் விட்டால் கூட, ஆடு.. மாடுகள் இறந்துவிடும்.

*கோமாரி வாய்ப்புண்!*

*தேவையான பொருட்கள்*

*1.* சீரகம் 10 கிராம்
*2.* வெந்தயம் 10 கிராம்
*3.* மிளகு 10 கிராம்

*செய்முறை*

மேற்கூறிய வற்றை எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு அம்மியில் அரைக்க வேண்டும்.

*இதனுடன்*
பூண்டு – 4 பல்..
மஞ்சள் தூள் 2 ஸ்பூன்.. வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை – 30 கிராம் ஆகியவற்றைக் கலந்து, மீண்டும் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் அரை மூடி தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பிசைந்து எடுத்துகொள்ள வேண்டும்…

*கொடுக்கும் முறை*

சிறு உருண்டையை மாட்டின் கடவாய்ப் பகுதியில் வைத்து வாயின் மேல்பாகத்தைப் பூசுவதுபோல் கையை வெளியில் எடுக்க வேண்டும்… மாட்டுக்கு மேல்வாயின் முன்பகுதியில் பற்கள் இருக்காது. அதனால் கடித்து விடும் என்று பயப்படத் தேவையில்லை. இது ஒருவேளைக்கான அளவு…

இதுமாதிரி தினமும் 3 வேளை… அதிகபட்சம் 5 நாட்களுக்குக் கொடுத்து வந்தால் வாய்ப்புண் சரியாகி விடும்….

*கோமாரி கால் புண்!*

*தேவையான பொருட்கள்*

*1.* நல்லெண்ணெய் 250 மில்லி
*2.* பூண்டு 4 பல்
*3.* மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
*4.* வேம்பு…குப்பைமேனி…மருதாணி…துளசி… இவைகள் ஒரு கைப்பிடி..

*செய்முறை*

250 மில்லி நல்லெண்ணெயில்… பூண்டு – 4 பல்… மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்… வேம்பு.. துளசி.. குப்பைமேனி.. மருதாணி.. இலைகள் தலா 1 கைப்பிடி போட்டு.. 10 நிமிடங்கள் சூடு படுத்தி… கொஞ்சம் ஆற வைத்துவிட வேண்டும்…

*கொடுக்கும் முறை*

இவற்றை லேசான சூட்டில் நூல் துணி அல்லது பஞ்சில் நனைத்து… மாட்டின் கால் நகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புண்… புழுக்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை புண் மீது படும்படி மேற்புறமும்… கீழ்புறமும்… தாராளமாகவிட வேண்டும். பாதிக்கப்பட்ட கால் தவிர மற்ற கால்களுக்கும் இவ்வாறு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கால்புண் ஆறி விடும்….

*கோமாரிக் காய்ச்சல்!*

கோமாரி நோயுடன் காய்ச்சலும் இருந்தால்…

*தேவையான பொருட்கள்*

*1.* வெற்றிலை 4
*2.* சீரகம் 5 கிராம்
*3.* மிளகு 5 கிராம்
*4.* தனியா விதை 5 கிராம்
*5* சின்ன வெங்காயம் 3
*6.* முருங்கை இலை ஒரு கைப்பிடி
*7.* நிலவேம்பு இலை 5 (அல்லது பொடி)

*செய்முறை*

வெற்றிலை – 4… சீரகம்… மிளகு.. தனியா விதை.. ஆகியவற்றில் தலா 5 கிராம்.. சின்ன வெங்காயம் – 3.. முருங்கை இலை – 1 கைப்பிடி… நிலவேம்பு இலை -10 அல்லது 5 கிராம் நிலவேம்புப் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும்…

*கொடுக்கும் முறை*

இவற்றை சிறு உருண்டை அளவு எடுத்து மாட்டின் நாக்கில் தடவிவிட வேண்டும். இது ஒரு வேளைக்குரிய அளவு… இதுபோல ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும்.

*மேற்சொன்ன அளவுகள் ஒரு மாட்டுக்கானவை மட்டுமே…

கி. அருள் முருகன் , கவுந்தப்பாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.