பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு
பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்ட தென்னைக்கு பராமரிப்பு முறைகள்
3 மாத பராமரிப்பு:
1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம்புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.
மாதவாரியாக பராமரிப்பு:
1.மாதத்தின் முதல் நாள் மரத்திற்கு 10 கிராம் சூடோமோனாஸ் /விரிடி தரைவழி பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம்.
2. *3ம் நாள்* மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா / 200 கிராம் அசோஸ்பைரில்லம் தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.
3. *13ம் நாள்* மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா / 100 கிராம் பாஸ்போபாக்டீரீயா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.
4. *23ம் நாள்* மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.
மீண்டும் அடுத்த மாதம் இதனைத் தொடரலாம்.
மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.
பாசனம்:
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட் களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.
மூடாக்கு:
மூடாக்கு முக்கியம். குறைந்த தண்ணீர், இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்.
மேலும் சந்தேகங்களுக்கு
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552