சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்
பொதுவாக சர்க்கரை நோய் என்னும் டயாபிடீஸ் பற்றி பலவிதமான பொதுவான அபிப்பிராயங்களும், தவறான கருத்துக்களும் பரப்பப்படுகிறது.
உதாரணமாக பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான் போன்ற கசப்பானவைகளை உட்கொண்டால் சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்றும், சில மூலிகைகள், நாட்டு மருந்துகள் எடுத்துக்கொண்டால் டயாபிடீஸ் சரியாகிவிடும் என்றும், தினந்தோறும் மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும் என்று பல தகவல்கள், WhatsApp, Facebook போன்ற சோஸியல் மீடியாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்பப்படுகின்றன.
பாமர மக்களும், படித்தவர்களும் இதை நம்பி தங்கள் பணத்தை இழக்கின்றனர், நோயை வளர்த்துக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் சர்க்கரை நோய் என்றால் என்னவென்று புரிதல் இல்லாமைதான் காரணம்.
சர்க்கரை என்பது ஒரு நோயல்ல.
அது ஒரு குறைபாடு.
தலைவலி, ஜூரம், மற்றும் வைரஸ் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோயாக இருந்தால் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும். ஆனால் குறைபாட்டிற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. அது சரியாகாது.
சுமார் 6 மணி நேரம் எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் உங்கள் இரத்தை பரிசோதனை செய்து அதில் 120 என்கிற அளவுக்கு மேல் குளுகோஸ் இருந்தாலும், உணவு உண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு 170 க்கு மேல் இரத்தத்தில் சுகர் இருந்தாலும் நீங்கள் சர்க்கரை நோயாளியாக கருத்தப்படுகின்றீர்கள். அன்றிலிருந்து நீங்கள் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ள அறிவுறுத்தப் படுகி்ன்றீர்கள். (அடிப்படையில் இந்த ரீடிங் அளவே தவறானது. அது நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியது).
சர்க்கரை நோய்க்காக சரியாக, முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் பலவிதமான பயங்கர வியாதிகள் வருமென்று பயமுறுத்தப்படுகின்றீர்கள்.
நீங்கள் எந்த வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அது உங்கள் இரத்ததில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை மட்டுமே குறைகின்றது. பொதுவாக அனைத்து மருத்துவங்களும் நோயாளியை திருப்திபடுத்துவதற்காக இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டும் குறைத்தால் போதுமென்று நினைக்கின்றன.
அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட நேரிடுகிறது.
இந்நோயைப் பற்றி ஓரளவு தெரிந்த படித்த சிலபேர்கூட சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும், அதை குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதில் பல விஷயங்களை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள்.
உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டால் பிறகு ஏன் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள். ஒரு நோயை கட்டுப்படுத்த முடியுமென்றால் பிறகு அதை குணப்படுத்தவும் முடியும் அல்லவா?.
மருந்து சாப்பிடாவிட்டால் இந்த சர்க்கரை நோயால் பல வியாதிகள் வந்துவிடும் என்று டாக்டர்களின் அட்வைஸ்படி (பயமுறுத்தலின்படி) சுகர் வந்த நாள்முதல் தினந்தோறும் தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள். பிற்காலத்தில் எந்தெந்த வியாதிகள் வந்துவிடக்கூடாது என்று தவறாமல் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டீர்களோ, பிறகு சுமார் 4, 5 வருடங்களில் அந்த வியாதிகள் உங்களை சூழ்ந்துள்ளது என்பதை அப்போது உணர ஆரம்பிக்கின்றீர்கள்.
பொதுவாக அந்த நேரத்தில் வாயுக்கோளாறு, அஜீரனம், பசியின்மை, மலச்சிக்கல், உடல் அசதி, பாத எரிச்சல், தோல்களில் அரிப்பு, பார்வை குறைபாடு, கைக்கால்கள் மரத்துப்போதல், மூட்டுவலி, கொலஸ்டிரால், BP, சிறுநீரக கோளாறு போன்ற பல வியாதிகள் உங்களுடன் இருக்கும்.
நீண்ட நாட்கள் பலவிதமான மருந்துகள் உட்கொண்ட பின்னரும் அந்த மருந்துகள் உங்கள் நோயை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்று அப்போது ஓரளவு உங்களுக்கு புரிய ஆரம்பிக்கின்றது. வேறு வழி தெரியாமல் திரும்பவும் அதே மருந்துகளை தான் தொடர்ந்து சாப்பிடுகின்றீர்கள்.
ஆரம்பத்தில் ஓரிரு மாத்திரைகள் எடுத்திருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையும், அளவும் கூடியிருக்கும்.
மருந்து மாத்திரைகள் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டும் குறைத்தது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
உங்கள் இரத்தத்தில் அதிகப்படியாக சேரும் குளுகோஸை தடுப்பதற்கான அடிப்படையான காரணம் உங்கள் உடலிலிருந்து இன்னும் நீக்கப்பட வில்லை. அதானால் தான் தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
சரி எப்படி இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது, மருந்துகள் எடுக்கும்போது மட்டும் எப்படி சுகர் குறைகிறது, குறைந்த அந்த குளுகோஸ் எங்கே போகிறது?
நீங்கள் உண்ணும் உணவுகளும் மற்றும் நீர்வகைகளும் சரியாகவும், முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஜீரணிக்கப்பட்டால்தான் அந்த உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்ஸ், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உடலில் சேர்ந்து உங்களுக்குத் தேவையான சக்தியை (Energy) கொடுக்கும்.
இந்த ஜீரணம் நாக்கில் ஆரம்பித்து வயிறு, மண்ணீரல், கணையம், சிறுகுடல், பித்தப்பை வழியாக முறையாக ஜீரணிக்கப்பட்டு கல்லீரலில் முடிகிறது. நீங்கள் உண்ட உணவு ஒவ்வொரு உறுப்பிலும் ஜீரணிக்கப்பட்டு அதிலிருந்து முறையாக பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் இந்த சக்திதான் குளுகோஸ் என்னும் சர்க்கரை ஆகும். (The end product of digestion).
இந்த குளுகோசை நமது உடல் பயன்படுத்த இன்சுலின் என்னும் ஹார்மோன் திரவம் தேவைக்கேற்ப உங்கள் கணையத்தில் சுரக்கப்பட
வேண்டும்.
அந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் பயன்படுத்த வைக்கிறது.
நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.
தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.
நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் தெறியாது. காரணம் தெறியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா?. தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்பது மட்டும் தெறிந்துவிட்டது. பி்ன்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும்.
நீங்கள் உண்ட உணவுகள் முறையாக ஜீரணிக்கபட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் இந்த தரமான குளுகோஸ் என்னும் எரிபொருள்தான் நாம் அன்றாடம் இயங்குவதற்கு தேவையான சக்தியாக பயன்படுகிறது.
இந்த குளுகோஸ் இரத்த ஓட்டத்தின் மூலம் நம் அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு செல்களின் இயக்கத்திற்கு தேவையான சக்தியை வழங்குகின்றன. இந்த தரம்மிக்க குளுகோஸ் தேவைக்கேற்ப செல்களால் உபயோகப்படுத்தப்பட்ட பின்னர், மீதம் எஞ்சியுள்ள குளுகோஸ், கிளைகோஜனாக மாற்றப்பட்டு பின்னர் ஏற்படும் அவசர உடல் தேவைகளுக்காக கல்லீரலிலும், தசைநார்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது.
நம் ஜீரண உறுப்புக்களில் கோளாறு ஏற்படும்போது நாம் உண்ணும் உணவுகள் மற்றும் திரவங்கள் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை.
அவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாமல் அரைகுறையாக ஜீரணிக்கப்பட்டு கடைசியாக வெளிப்படும் குளுகோஸ் சத்துக்கள் நமது செல்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது.
(அல்லது குறைவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது).
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட இந்த குளுகோஸ் நமது இரத்தத்தில் கலந்து சுற்றிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இரத்தப் பரிசோதனை செய்தால் உங்களுக்கு சுகர் அதிகமிருப்பதாக காட்டும். இந்த நிலைதான் டயாபிடீஸ் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக மருத்துவமணைக்கு செல்லும்போது தான் உங்களுக்கு சுகர் டெஸ்ட் செய்யப்படுகிறது. அப்போது இரத்தப் பரிசோதனையில் சுகர் இருப்பதாக கண்டுபிடிக்கப் படுகிறது. சர்க்கரை இருப்பது டெஸ்டில் கண்டுபிடிக்கப்படும் போதுதான் நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக ஆக்கப் படுகின்றீர்கள்.
உங்களுக்கு இருக்கும் இந்த நீரிழிவு நோயை டெஸ்ட் மூலம் கண்டுப்பிடிப்பதற்கு பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்கு முன் இதே சர்க்கரை நோய் உங்களுக்கு இருந்தது. ஆனால் அது
உங்களுக்குத் தெரியாது. அது தெரியும்வரை உங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. சாதாரணமாக இருந்தீர்கள். சர்க்கரை இருப்பது தெரிந்தப்பின் பலவிதமான பயங்கள் உங்களை தொற்றிக்கொண்டது.
மக்களிடத்தில் நிலவும் பொதுவான கருத்துக்களால், தினசரி சரியாக மாத்திரை மருந்துகள் சாப்பிடாவிட்டால் பல விதமான நோய்கள் வந்து விடுமென்று பயப்படுகின்றீர்கள். சுகர் டெஸ்ட் செய்வதற்கு முன்பு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் கூட உங்களுக்கு சுகர் இருந்திருக்கலாம். அப்போது சுகருக்கான எந்த மருந்தும் எடுக்காமல் நார்மலாக தான் இருந்தீர்கள். ஆனால் டெஸ்ட் ரிபோர்ட்டை பார்த்ததும் இப்போது பயம் உங்களை தொற்றிக் கொண்டது.
எத்தனையோ பாமர ஏழைமக்கள், குரவர்கள், கூலித் தொழிலாளிகள், தொடர் குடிகாரர்கள் ஆகியோர் பெரிய மருத்துவமணைக்கு செல்வதில்லை. அவர்களுக்கு சுகர் இருந்தாலும் அதை பொருட் படுத்துவதில்லை. மருந்துகள் எடுத்துக் கொள்ளுவதுமில்லை, மாதாமாதம் டெஸ்டுகள் செய்வதுமில்லை.
இது சரி அல்லது சரியல்ல என்று சொல்தை விட, அவர்கள் நோய் பயமின்றி வாழ்கின்றனர் என்பது தானே உண்மை.
முழுமையற்ற ஜீரணத்தால் உருவான தரம் குறைவான குளுகோஸ் சத்துக்கள், நமது செல்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு, இரத்தத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இந்த அதிகப்படியான குளுகோஸை நமது சிறுநீரகம் இனம்கண்டு சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
இந்நிலையில் சிறுநீர் பரிசோதனை செய்தால் அதில் சுகர் இருப்பதாக கூறுவார்கள். மேலும் உங்கள் சத்துக்கள் சிறுநீர் மூலமாக வெளியேறுவதாக கூறி மாத்திரை மருந்துகள் கொடுத்து அதை தடுப்பார்கள்.
இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தானே சிறுநீரகத்தின் வேலை. பிறகு சிறுநீரில் வெளியேறுவது எப்படி சத்துக்கள் ஆகும்.
நம் உடலுக்குத் தேவையில்லாத நமது செல்களால் நிராகரிக்கப்பட்டு அவசியம் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுதான் இந்த குளுகோஸ். அதை வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் சரியாகத்தான் செய்கிறது. அவ்வாறு கழிவுகள் வெளியேற்றப் படவில்லையெனில் சிறுநீரகம் செயலிலழந்துவிட்டது என்று அர்த்தமாகிவிடும்.
சர்க்கரை நோயின் ஆரம்பத்திலேயே சிறுநீரகம் செயலிழந்து விடுமா? அல்லது உங்கள் சிறுநீரகம் நன்றாக இயங்குகின்றதா? இதில் எது உண்மை?.
அடுத்தது மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்தவுடன் எவ்வாறு இரத்தத்தில் சுகர் குறைகிறது.
சுகருக்காக மருந்துகள் எடுக்கும்போது நமது செல்களால் நிராகரிக்கப்பட்ட முறையற்ற ஜீரணத்தால் உருவான தரம் குறைந்த குளுகோஸ் சத்துக்கள், மருந்துகள் மூலம் வலுகட்டாயமாக மீண்டும் நமது செல்களுக்குள் புகுத்தப்படுகிறது.
அவ்வாறு வலுகட்டாயமாக நமது செல்களுக்குள் புகுத்தப்படும்போது, ஆரோக்கியமாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்களெல்லாம் நாளடைவில் படிப்படியாக பாதிப்படைந்து உடம்பின் பல பகுதிகளில் நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தி கடைசியாக உறுப்புகள் செயலிழப்பு வரை கொண்டுச் செல்கின்றது.
தரம் குறைந்த குளுகோஸ் நமது செல்களுக்குள் புகுத்தப்படும் இந்திலையில் தான் தோல்களில் அரிப்பு, கைகால்களில் மதமதப்பு, பாத எரிச்சல், உடல் சோர்வு, கண்பார்வை கோளாறு என்று பலவித நோய்களை உணர ஆரம்பிகின்றீர்கள். இது நோயின் இரண்டாவது நிலை. இதே நிலை தொடரும் போது உடல் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு செயலிழப்பு ஏற்படுகிறது. உடல் உறுப்புகள் செயலிழப்பு என்பது நோய்கள் முற்றிவிட்டதன் கடைசி நிலையாகும்.
மேலும்மேலும் செல்கள் கடுமையாக பாதிப்படையும் போது உங்களுக்கு ஏதாவது காயங்களோ, புண்களோ ஏற்பட்டால் அது விரைவில் ஆறுவதில்லை. மேலும் இது கைக்கால்களை வெட்டி எடுக்கும் நிலைமை வரைக்கும் கொண்டுச் செல்கி்ன்றது. (ஆங்கில மருத்துவத்தில்).
ஒவ்வொரு உருப்பிலும் உள்ள செல்கள் பாதிப்படையும் போது இன்சுலினை சுரக்கும் கணையமும் பாதிக்கப்படுகி்றது. அதனால் அது தற்காலிகமாக இன்சுலின் சுரப்பை நிறுத்தி வைக்கின்றது. பான்கிரியாஸ் என்னும் கணையத்துக்கு தேவையான நல்ல சக்தி கிடைக்கும் போது அது மீண்டும் இன்சுலினை சுரக்க ஆரம்பித்துவிடும்.
இதுதான் சர்க்கரை நோய் பற்றிய சுருக்கமான விளக்கம்.
இப்படி பல பதிப்புகளை ஏற்படுத்தும் இந்த சர்க்கரை நோயை குணப்படுத்தவே முடியாதா? நிச்சயமாகமாக முடியும்.
இந்நோய்க்கு காரணம் முறையற்ற ஜீரணம் என்று பார்தோம். அது எவ்வாறு ஏற்படுகிறது.
நமக்கு பசி ஏற்பட்ட பின்னரும் வேலை, வியாபாரம் போன்ற பல காரணங்களால் உணவு சாப்பிட முடியாத நிலையில் சிறு தீனியாக அதிகமாக டீ, பால், காப்பிகளை குடித்தல், பட்டர் பிஸ்கட் என்னும் சிறுநீரகத்தைச் பாதிக்கக் கூடிய அதிக உப்பு கலந்த பிஸ்கட் சாப்பிடுதல், அடிக்கடி பஜ்ஜி, சமோசா, மிக்ஷ்ர் போன்ற எண்ணெயில் மூழ்கி பொரித்தவைகளை சாப்பிடுதல் இவைகள் தான் ஆரம்ப ஜீரணக் கோளாறுகளுக்கு காரணம்.
ஜீரண மண்டலம் பாதிப்படைந்த பிறகு நீங்கள் எது சப்பிட்டாலும் அது முழுமையற்ற, முறையற்ற ஜீரணகமாகத்தான் அமையும். ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.
1. ஒருபோதும் பசியில்லாமல் சாப்பிடவோ, தாகமில்லாமல் தண்ணீர் குடிக்கவோ கூடாது.
மேலும் பசிக்கு தகுந்த அளவுதான் உணவு உண்ண வேண்டும், தாகத்துக்கு தகுந்த அளவுதான் நீர் பருக வேண்டும்.
2. உணவை ஓரளவு நிதானமாக மென்று அதன் சுவையை உணர்ந்து சாப்பிடவேண்டும். நீங்கள் அவசர நிலையில் இருந்தால் உணவு உண்ணுவதை சற்று தள்ளி வைத்து பிறகு சாப்பிடுங்கள். இயற்கையான முறையில் விளைந்த உணவுகளே சிறந்தது.
3. உணவு சாப்பிடும்போதும், சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்கக் கூடாது. விக்கல் போன்ற அவசிய தேவை ஏற்பட்டால் தவிர. குறைந்தது அரைமணி நேரம் கழித்துதான் தண்ணீர் குடிக்கவேண்டும்.
சாப்பிட்டவுடன் குடிக்கும் நீர் வயிற்றில் உள்ள ஜீரண நீரின் கெட்டித் தன்மையை நீர்க்கச் செய்துவிடும். மேலும் நீங்கள் அரைகுறையாக மென்று சாப்பிட்ட உணவுத் துகள்கள் தண்ணீருடன் கலந்து வயிற்றில் மிதக்க ஆரம்பித்து விடும். இதனால் நீங்கள் உண்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகாமல் நீண்ட நேரம் வயிற்றிலேயே தங்க நேரிடும். பிறகு அது புளித்துபோய் கெட்ட வாயுவை உற்பத்திப்பன்னி முதலில் புளித்த ஏப்பத்தை ஏற்படுத்தும். இதுதான் ஜீரணக்கோளாரின் ஆரம்பம். மேலும் நீங்கள் உண்ட உணவில் உள்ள எண்ணெய் மற்றும் கொழும்புகள் குளிர்ந்த நீர் பட்டவுடன் உறைந்து கெட்டியாகி இரத்தக் குழாயில் படியும். (Heart valve Blocks)
எனவே பசிக்குதான் உணவு, தாகத்திற்குதான் தண்ணீர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (மனிதனைத் தவிர மிருகங்களும் மற்ற ஜீவராசிகளும் இதை முறையாக கடைபிடிக்கின்றன).
3. நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவைகளைத் தவிர, வேறு எந்த எண்ணெய்யையும் பயன்படுத்தக் கூடாது. இதுவும் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டிருந்தால் மிகவும் நல்லது.
4. பாட்டில்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எந்த பொருட்களை யும் கட்டாயமாக உபயோகப்படுத்தக் கூடாது. விளம்பரங்களில் வரும் எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள்.
5. டீ, காப்பி, பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதை தவிர்க்க முடியாதவர்கள் பால் சேர்க்கமல் டீ, காஃபி சாப்பிடலாம் அல்லது சுக்கு காஃபி சாப்பிடலாம். பால் கலந்து தயாரிக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
6. ஊறுகாய், அப்பளம், முருக்கு, வடாகம், பிஸ்கட் போன்றவைகளை சாப்பிடக் கூடாது. (பிஸ்கட்டில் பல விதமான இரசாயனங்களும், மைதாவும் கலந்துள்ளது).
உப்பு, புளிப்பு, காரம் போன்றவைகளை அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. மைதாவினால் தயாரிக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணாதீர்கள். வெள்ளை சர்க்கரையையும் அது கலந்து தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களையும் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
8. நன்றாக பழுக்காத பழங்களையும், புளிப்பான பழங்களையும், கார்பைடு கல் வைத்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களையும் சாப்பிடாதீர்கள். பழங்களை செங்காயாக வாங்கி நீங்களே பழுக்கவைத்து சாப்பிடுங்கள்.
பழங்கள் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னும், பின்பும் எதையும் சாப்பிடவோ, அருந்தவோ கூடாது.
துவர்ப்பான இளநீரையும் குடிக்காதீர்கள். அனைத்திலும் இனிப்பானவைகளே சிறந்தது.
9. ஹோட்டல்களில் உணவு உண்ணுவதையும், கடைகளில் ஜூஸ் குடிப்பதையும் தவிர்த்து விடுங்கள். குளிர்பானங்களை நிச்சயமாக குடிக்கக் கூடாது.
10. ப்ராய்லர் கோழி மற்றும் பன்னையில் வளர்க்கப்பட்ட எறால், மீன் போன்றவைகளை சாப்பிடக் கூடாது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.
இவற்றைக் முறையாக கடைபிடித்து வந்தால் படிப்படியாக உங்கள் ஜீரணச் சக்தி மேம்படும், நல்ல குளுகோஸ் உற்பத்தியாகும். நமது செல்கள் அதை கிரகித்துக்கொண்டு முறையாக செயல்படத் தொடங்கும், சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நோய்கள் நீங்க ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்து மாத்திரைகளை குறைத்துக்கொள்ளலாம்.
உங்கள் உணவுகளை முறைப்படுத்தி, ஜீரணத்தை சரிசெய்யாத வரையில் எந்த மருந்து, மாத்திரையாலும் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வயிற்றில் ஆரோக்கியமான நல்ல உணவுகளே செரிக்க முடியாமல் இருக்கும் போது கெமிக்கல் மருந்துகள் மட்டும் எப்படி செரிமானமாகும்.
உங்கள் ஜீரண மண்டலத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் சிகிச்சையை எந்த மருத்துவமுறை மேற்கொள்கின்றதோ அதுவே சிறப்பான மருத்துவ முறையாக இருக்கும். நன்றி.