சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்

Agriwiki.in- Learn Share Collaborate
இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள உணவு முறைகள் மாத்திரை சாப்பிடுபவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டியவை.  இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கு வேறு ஒரு உணவுக் குறிப்பு தரப்பட்டுள்ளது.  எனவே அதை முதலில் கடைபிடித்து, ஊசி மருந்தின் அளவைப் படிப்படியாகக் குறைத்து மாத்திரை போடும் நிலைக்கு வந்த பின்னர், இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகளைக் கடைபிடிக்கவும்.

காலை 6 மணிக்கு – மருத்துவ குணமுடைய சாறு

பின் வரும் சாறு வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் மாற்றி மாற்றி அருந்தவும்:

 

 • வில்வ இலை சாறு
 • அருகம் புல் மற்றும் மணத்தக்காளி ஆகிய இரு சாறுகளின் கலவை
 • துத்தி இலை சாறு மற்றும் இளநீர் கலவை (துத்தி இலையை அடையாளம் காண முடிந்தால் மட்டும் இதை செய்யலாம்.)

காலை 7.30 மணிக்கு – நீர் சிகிச்சை

பின்வரும் நீர் சிகிச்சைகளில் ஏதாவது ஒன்றை தினமும் 30 நிமிடங்கள் செய்து வரவும்:

 

காலை உணவு 8.30 மணிக்கு – கீரைக் கூட்டு

பின் வரும் கீரைக்கூட்டு வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் மாற்றி மாற்றி சாப்பிடவும்:

 

 • முருங்கைக் கீரை
 • மணத்தக்காளி
 • முளைக்கீரை அல்லது அமராந்த்
 • அரைக்கீரை

காலை 11 மணிக்கு – பழச்சாறு

பின் வரும் பழ வகைகளில் ஏதாவது ஒன்றில் சாறு எடுத்து தினமும் மாற்றி மாற்றி சாப்பிடவும். கண்டிப்பாக இதில் பால் அல்லது கூடுதல் இனிப்புக்காக வேறு எந்த பொருளையும் (தேன், சர்க்கரை, பனைவெல்லம் முதலியவை) சேர்க்கக் கூடாது:

 

 • ஆரஞ்சு
 • மாதுளை
 • திராட்சை

மதியம் 1 மணிக்கு – சாத்வீக உணவு

கீழேத் தரப்பட்டுள்ள 4 வகைகளிலும் ஒவ்வொரு கப் சாப்பிட வேண்டும். மதிய உணவுக்கு இதே போல் தினமும் சாப்பிடவும். கண்டிப்பாக புளி மற்றும் எண்ணை எந்த உணவிலும் சேர்க்கக் கூடாது.

 

 1. கீரை கூட்டு (காலையில் சாப்பிட்ட கீரைக்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு கீரையைக் கூட்டு அல்லது பொரியல் அல்லது மசியல் செய்யலாம்) – 1 கப்
 2. வாழைத்தண்டு பச்சடி – 1 கப்
 3. பூசணிக்காய் பொரியல் – 1 கப்
 4. பாசிப்பயறு சுண்டல் அல்லது கொண்டைக்கடலை சுண்டல் – 1 கப்

மாலை 4 மணிக்கு – பஞ்சாட்சரம் சாறு

இரவு 7 மணிக்கு – சாத்வீக உணவு

பின் வரும் உணவு வகைகளில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றை செய்து சாப்பிடவும். எனினும் காய்கறி கலவை சாப்பிடுதல், நோய் விரைவில் குணமடைய வழி செய்யும்.

 

குறிப்பு:

இந்த உணவு முறையை பின்பற்றத் தொடங்கிய மூன்றாம் நாள் முதல், மாத்திரை போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். முப்பது நாட்கள் இதே போல் தொடர்ந்து சாப்பிட்ட பிறகு, மதிய உணவில் மட்டும் ஒரு சிறிய மாற்றம் செய்து கொள்ளவும். பாசிப்பயறு  அல்லது கொண்டைக்கடலை சுண்டல் 1 கப்பிற்கு பதில் சிறுதானிய வகைகளில் ஏதாவது ஒன்றை (வரகு, சாமை, குதிரைவாலி, திணை, பனிவரகு / காடைக்கண்ணி, சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு / ராகி), ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேர்த்துக் கொள்ளவும். இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.
Original article from: https://passionsandpractices.blogspot.in/2013/10/sarkarai-viyaadhiyai-kattupaduthum-unavu-muraihal-1.html