தமிழகத்தில் கடந்த பத்து வருட காலமாக 2006 இருந்து தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விவசாயிகள் சவுக்கு மலைவேம்பு நிலிகிரி தைலம் போன்ற மரங்களைப் பதிவு செய்து அதனைக் குத்தகை ஒப்பந்த படி (contract farming) TNPL சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்த கடந்த இரண்டு வருட காலமாக விவசாயிகளிடம் இருந்து சவுக்கு மரங்களை எல்லாம் வாங்குவதற்குப் பதில் வெளி நாடுகளில் இருந்து மரத்துகள்களை இறக்குமதி செய்கின்றனர்.
ஆதலால் விவசாயிகளிடம் இருந்து மரங்களை வாங்குவதற்கு என்னென்ன கடினமான முறை திட்டங்களை வகுத்து விவசாயிகளைத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி, சவுக்கு போன்ற மரங்களை
– வெட்டி தான் கொடுக்க வேண்டும்
– மர பட்டியை உரித்துக் கொடுக்க வேண்டும்
– ஒப்பந்தமிட்ட தொகைக்கு எடுத்துக் கொள்ள முடியாது
என்ற புதிய விதிகளை வகுத்தனர்.
அடுத்து தொலைப்பேசியில் அழைத்து எப்பொழுது மரம் எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று கேட்டல் இன்று கூறுகிறேன் அடுத்த வரம் கூறுகிறேன் ஆட்கள் கிடைக்க வில்லை, மரம் அறுப்பதற்கு இயந்திரங்கள் இல்லை போன்ற காரணங்களைத் தருகின்றனர். இறுதியாகக் குழல் விளக்கு (TUBELIGHT ) அளவுக்குத் தான் மரங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஆணைப் பிறப்பிக்கின்றனர்.
குழல் விளக்கு அளவுக்குக் கொடுத்தால் அந்த விவசாயி 40 முதல் 50 டன் அளவு கூட மிஞ்சாது.
இப்படி எல்லாம் செய்வதற்கு காரணம் விவசாயிகளிடம் இருந்து வாங்கக் கூடாது என்பது தான் நோக்கம். TNPL விவசாயிகளிடம் இருந்து வாங்கியதை நிறுத்தியது முதல், விவசாயிகள் சேஷாய் பபெர்ஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் மரங்களை வாங்கிக் கொண்டாலும் வில்லையை மிகவும் அடித்து அடிமாட்டு வாங்குவது போல் வாங்குகின்றனர்.
ஆதலால் விவசாயிகள் சவுக்கு நடவு செய்வதை நிறுத்தி அதில் இருந்து ஏற்படக்கூடிய நட்டத்தைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன் . நெல் கரும்பு போன்றவை எல்லாம் கை விட்ட பொழுது இந்தச் சவுக்கு ஒன்றாவது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதல் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் கொடுத்து வந்தது. அதையும் முடித்துக் கட்டிய TNPL நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வோம்.
நன்றி TNPL !!
-கார்த்திகேய சிவசேனாபதி
06-01-2019