சினைப்பிடிக்காத கிடேரிகளுக்கு காரணங்களும் சிகிச்சை முறையும்.
1. கருமுட்டை சுழற்சி குறைபாடு.
2.கர்பப்பை நோய்.
தீர்வு.
1.முறையான சமச்சீர் உலர்ந்த தீவனங்களை கொடுத்தல் வேண்டும்.
2. தேவையான பொருட்கள்.
முள்ளங்கி (1-4 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு .
சோற்றுக்கற்றாழை (5-8 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு 1 மடல்.
முருங்கை இலை (9-12 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 கைப்பிடி அளவு .
பிரண்டை (13-16 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 கைப்பிடி அளவு .
கருவேப்பிலை (17-20 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 கைப்பிடி அளவு .
செய்முறை
முள்ளங்கி மற்றும் சோற்றுக்கற்றாழை கொடுக்கும் பொழுது உப்பு , வெல்லம் மேலே தடவி வாய் வழியாக உள்ளே கொடுக்க வேண்டும்.
மற்ற பொருட்கள் முருங்கை இலை , பிரண்டை , கருவேப்பிலை மைபோல் அரைத்து நாட்டு சர்க்கரை கலந்து சிறிது சிறிதாக வாய்வழியாக உள்ளே செலுத்த வேண்டும்.
20 நாட்களுக்கு தொடர்ந்து மூலிகை பொருட்கள் அளித்து சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்தவுடன் காளை உடன் சேர்க்கலாம் அல்லது கருவூட்டல் செய்து கொள்ளலாம்.