சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு

சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு
Agriwiki.in- Learn Share Collaborate

சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா,
சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும்.
இன்னும்கொஞ்சம் அதிகம் தெரிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்கும்பாங்க.

நெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா
முழுமையான பதில் எங்கயும் கிடைக்கல.

ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது.

சாமை, தினை, கம்புனு எத எடுத்தாழும் பல ரகங்கள் இருந்திருக்கு.

நெல்ல பிரிச்சு பாத்த நம்ம சிறுதானியங்கள பிரிச்சு பாக்க தவறிட்டோமோ…

அரிசி ரகங்களுக்கள பொருத்து பலன்கள் மாறும்னா சிறுதானியமும் அப்படிதான இருக்கனும்.

சிறுதானியத்தோட உட்பிரிவ பத்தி பேசாததற்கு காரணம் என்னவோ தெரியல.

எனக்கு கிடைத்த சில வகைகளின் பெயர்கள் :

சாமை (Little Millet)

மல்லியச்சாமை
பெருஞ்சாமை
வெள்ளைப்பெருஞ்சாமை
வெள்ள சாமை
கட்டவெட்டிச் சாமை
திருகுலாசாமை
சடஞ்சாமை
கருஞ்சாமை
செஞ்சாமை,
சிட்டஞ்சாமை
பில்லுசாமை

தினை (Italian Millet or Foxtail Millet)

கென்டி தினை
செந்தினை
மரதினை
பாலாந்தினை
வெள்ளை தினை
கோராந்தினை
கில்லாந்தினை
பெருந்தினை
மூக்காந்தினை
கருந்தினை
பைந்தினை
சிறுதினை
யாடியூரு தினை
மாப்பு தினை
நாட்டுதினை

வரகு (Kodo Millet)

திரிவரகு
புறவரகு
பெருவரகு (இரண்டு வரி உடையது),
உடும்புகாலி வரகு (சடைசடையாய் விளையும் வரகு),
செங்காலி வரகு,
சிட்டுக் கீச்சான் வரகு..

கேழ்வரகு (Finger Millet)

சாட்டைக் கேழ்வரகு
காரக் கேழ்வரகு
கண்டாங்கிக் கேழ்வரகு பெருங்கேழ்வரகு
சுருட்டைக் கேழ்வரகு
அரிசிக்கேழ்வரகு
கருமுழியான் கேழ்வரகு
ஜாகலூரு கேழ்வரகு
முட்டை கேழ்வரகு
மலளி கேழ்வரகு
பில்லிமண்டுகா கேழ்வரகு
பிச்சாகாடி கேழ்வரகு
நாகமலா கேழ்வரகு

சோளம் (Great Millet or Sorghum)

செஞ்சோளம்
கருஞ்சோளம் (இருங்கு சோளம் )
உப்பஞ்சோளம்
மாஞ்சோளம்
அரிசி வெள்ளச் சோளம்
கறுப்பு ரட்டு சோளம்
சிகப்பு ரட்டு சோளம்
கோவில்பட்டி மொட்ட வெள்ளச் சோளம்
அரியலூர் நெட்ட
மஞ்ச சோளம்

இன்னம் பல வகைகளின் பெயர்கள கூட தவறவிட்டுட்டோம்.

இந்த பதிவ பாக்குறவங்க இது மாதிரி உங்களுக்கு தெரியும் ரகத்தோட பெயர், ஊர், பயரிடும் முறை/மாதம் னு எந்த தகவல் இருந்தாலும் கமண்டில் சொல்லவும்.

அரிய வகை விதை இருக்குறவங்க பகிர்ந்துகலாம்…

தொலைத்த தகவல்களை மீட்டெடுப்போம்

ஜனகன்
24/8/2018