சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம்
by வெ.லோகநாதன், நம்பியூர்
சுதேசி மற்றும் சுதேசி பொருளாதாரம். இது நாம் அடிக்கடி பேசப்படும் விடயம். இது பற்றி இன்னும் உள்நோக்கி செல்ல வேண்டியது தற்கால சூழலுக்கு மிகவும் அவசியம்.
தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன?
இன்று நம் நாட்டில் குண்டூசி முதல் சொகுசு கார்கள் வரை பன்னாட்டு கம்பெ கம்பெனிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது அதுவும் சீன பொருட்கள் ஆதிக்கம் அதிகம்.
நாம் அனைவரும் எந்த பொருட்கள் வாங்கும் போதும் நம் நாட்டில் தயாரான பொருட்களா என்று பார்த்து வாங்க வேண்டும். அதைவிட தற்சார்பு பொருளாதாரம் மிகவும் சிறந்த விசயம்.
தற்சார்பு பொருளாதாரத்துக்கு ஒரு உதாரணம் – கற்றாழை!

தற்சார்பு பொருளாதாரம் பற்றி ஒரு உண்மை சம்பவம் கூறுகிறேன் சுமார் 35 வருடத்திற்கு முன் எனது தாத்தா என்பதையும் விட நமது தாத்தா என்றே கூறலாம், ஏதோ ஒரு பட்டையை தண்ணீர் தெளித்து வைப்பார்கள். தினமும் ஒரு கால் மணிநேரம் மடடுமே அதற்கு செலவு செய்வார்.
அடுத்து மதியம் சாப்பிட்டு ஓய்வுக்கு செல்வார். அவர் அதை ஊறிய பின் தட்டி மருக்கேற்றுவார். அதை மரத்தில் கட்டி மேலும் முருக்கேற்றி கயிராக திரித்து கட்டிலுக்கு கட்டிவிடுவார்கள். அந்த தாவரம் – கற்றாழை!
அதே போல் தேங்காய் மட்டை அடித்து நாராக்கி அதை கயிறு முருக்கி தண்ணீர் இறைக்க, நுகத்தடிக்கு கட்ட, மாடு ஆடுகள் கட்ட இப்படி பல பயன்பாட்டுக் பயன்படுத்தி விடுவார்கள்.
மேலும் கிழிந்து போன அவரது வெள்ளை வேஷ்டி கூட மாடுகளுக்கு தும்பு , கழுத்து கயிறு என மாறிவிடும். கயிற்று கட்டிலுக்கு போக மீதி உள்ள கயிறு எலி முயல் போன்றவை பிடிக்கும் வளை ஆகிவிடும். இன்னும் அந்த வளை அவர்கள் ஞாபகமாக உள்ளது.
இவர் ஓர் ஆண்டில் தயாரிக்கும் இதுபோன்ற பொருட்கள் இன்றைய மதிப்பில் 15000 முதல் ( இன்று வடைக்கயிறு என்பது இல்லை இது ஏத்தம் இறைக்க பயன்படும் ) 20000 ரூபாய் வரையில் இருக்கும். இதற்கு இவர் பயன்படுத்தும் நேரம் தினமும் 15- 30 நிமிடங்கள்.
பருத்தி விதை முதல் பழ விதை வரை எதுவும் பணம் கொடுத்து வாங்குவது இல்லை. இது போன்று எண்ணற்ற செயல்களை நம் முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் நாம்.
இன்றைய நிலை
இன்று ராகிகளி செய்யதெரியாத அம்மாக்கள்….
பலாப்பழம் சுழை பால் இல்லாமல் பிரிக்கதெரியாத அப்பாக்கள்…..
பெப்ஸி , கோக், பாக்கெட் உணவுகளுக்கு அடிமையாக்கும் இன்னும் பன்னாட்டு உணவகங்கள் ஸ்விகி,ஜுமோட்டோ அபாயம் வேறு…… இதற்கு தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்று மேக்இன் இண்டியா போன்று மேக்இன் ஹோம் என்பதை நாம் நம் பகுதியில் ஊக்குவிக்க வேண்டும்
தற்சார்பு பொருளாதாரம் – மேக்இன் ஹோம்
இன்று மேக்இன் இண்டியா போன்று மேக்இன் ஹோம் என்பதை நாம் நம் பகுதியில் ஊக்குவிக்க வேண்டும் இன்றைய நிலையில் இனிவரும் காலங்களில் சுதேசி பொருளாதாரம் அத்தோடு தற்சார்பு மரபுவழி தேசிய பொருளாதாரம் தான் நமக்கு நீண்ட பயனளிக்கும் என்பதுதான் நம் சந்ததிகள் பயனுற நாம் செய்யும் ஏற்பாடாக இருக்கும்
பதிவு செய்த நாள் 23 /4/2020
வெ.லோகநாதன், நம்பியூர்
Wishing you all the success and need you to update your write ups about your thoughts and views.
Supper sir, today s nessary article in our every family
இன்றய அனைவரது தேவை நமது தேவை நாமே எற்படுதுவது
Well said, it is timely needed to continue to produce every one. If we produce mass it can be put on commercial too.
நன்றி அய்யா.