சுபாபுல் பற்றிய சில குறிப்புகள்

சுபாபுல் பற்றிய சில குறிப்புகள் subabul-white-leadtree
Agriwiki.in- Learn Share Collaborate

சுபாபுல் பற்றிய சில குறிப்புகள் :

# சுபாபுல் விதைகளை அப்படியே விதைக்கும் போது , கடினமான மேல்தோல் காரணமாக முளைப்பு திறன் மிக குறைவாக இருக்கும்.
அதனால் விதைகளை முந்தின நாள் இரவு கொதிக்கும் நீரில் கொட்டி, அடுப்பிலிருந்து இறக்கி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி பின் துணியில் பரப்பிவிட்டு, மறுநாள் காலையில் விதைத்து தண்ணீர் பாய்ச்சும் போது 3 அல்லது 4 நாட்களில் முளைத்து வரும்.

# விதைகளை ஆங்காங்கே ஊன்றாமல், நிலத்தில் ஒன்னரை அடி இடைவெளி வைத்து, கயிறு பிடித்து, கயிற்றை ஒட்டி 1 இன்ச் ஆழத்துக்கு நிலத்தை கீறி விதைகளை மணலுடன் கலந்து நெருக்கமாக விதைக்கும்போது நிறைய தீவனங்களை அறுவடை செய்யலாம்.

# சுபாபுல்லை மரமாக வளர்க்காமல், 3 1/2 லிருந்து 4 அடி உயரத்தில் பராமரிக்கும் போது, தீவன மகசூல் குறையாமல் இருக்கும். அதாவது, 4 அடி உயரம் வளர்ந்த உடன் தரையிலிருந்து அரை அடி விட்டு அறுக்க வேண்டும்.

# அதிக புரதம் உள்ள தீவனமான சுபாபுல்லை , அறுத்த உடன் கால்நடைகளுக்கு தராமல் 3 அல்லது 4 மணிநேரம் வாட விட்டு தரும்போது வயிறு உப்பிசம் ஏற்படுவதை தவிர்க்கலாம். நன்றி