ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை
Waste decomposer என்பதும் ஒரு இயற்கை இடுபொருள்தான்.
இது ஜீவாமிர்தத்துக்கு மாற்று என்பது போல ஒரு கருத்து பரவலாக்க உள்ளது.
இது சரியான கருத்து அல்ல. ஒவ்வொன்றும் அதற்கான தனித்தன்மையை உள்ளடக்கியது.
அனைத்து இயற்கை இடுபொருள்களும் மண்ணை வளமாக்கி நலம் பேனுபவைதான்.
மேலும் ஜீவாமிர்தம் ஒரு இயற்கை உரம் என்பதாக ஒரு கருத்தும் உள்ளது. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
கீழே வருவது ஒரு தெளிவுக்காக.
ஜீவாமிர்தம் – ஒரு விளக்கம்.
ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை !!
இதை தெளிவாக உள்வாங்கி கொள்ள வேண்டும்.
இது நுண்ணுயிர்களின் செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை.
இதில் அனைத்து நுண்உயிர்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இவைகள் தான் மண்ணில் இருந்து பயிர்வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரியான வடிவில் எடுத்துக்கொடுக்கிறது.
மண்ணை மிக வளமிக்கதாக செய்கிறது.
இது செவ்வனே செயல் பட நல்ல கரிமச்சத்து உள்ள மண் வேண்டும்.
நிறைய தொழுஉரம் போடுங்கள்.
பசுந்தாள் உரப்பயிர் செய்து உழுது விடுங்கள்.
இதற்கு பின் பயிர்களுக்கு ஜீவாமிர்தம் மட்டுமே கொடுத்தாலே நல்ல மகசூல் எடுக்க முடியும்.
பயிர் பாதுகாப்புக்கு வேறு முயற்சி தேவைப்படாது.
இதை கொடுத்துக் கொண்டே இருங்கள்.
மறு உபகாரமாக மண் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும்.
Waste decomposer ம் இதைத்தான் செய்கிறது.
யாருக்கு எது தேவையோ அதை பயன்படுத்துங்கள்.
இதில் ஜீவாமிர்தம் சிறந்தது, waste decomposer சிறந்தது என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது மண்ணை வளப்படுத்தும் வேலையை அவைகளுக்கு கொடுப்போம்.
https://www.facebook.com/pg/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-356499684497280/posts/