தண்ணீருக்காக தமிழகம் கையேந்த வேண்டிய அவசியமில்லை
தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் *தமிழகம் கையேந்த வேண்டிய* அவசியமில்லை…ஏன்????
தண்ணீருக்கான நோபல் பரிசு பெற்ற திரு”ராஜேந்திரசிங்”அவர்கள்.தமிழ் நாட்டின் காவேரி நதி வறட்சியை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு கூறியதாவது……..!!!
✍ நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது,இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.
✍ இரு மாநிலங்களில் ஓடும் காவிரி பிரச்னையே தீரவில்லை. தேசிய நதிகளை இணைப்பதால் பிரச்னைகள் அதிகரிக்கும்.
✍ எந்த மாநிலத்திடமும் தண்ணீர் கேட்டு, தமிழகம் கை ஏந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✍ காவிரி ஆற்றுப் பகுதிகளை நாங் பார்வையிட்டோம்; அந்த பகுதிகள், ராஜஸ்தான் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது.
✍ வறட்சி ஏற்படுவதற்கு ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் ஒரு காரணம். மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை இணைந்து வகுத்துள்ளது. அதன்படி எந்த ஒரு நீர்நிலையிலும் மணல் அள்ளக்கூடாது எனச் சட்டம் உள்ளது.
✍ ராஜஸ்தானில் தண்ணீர் சேமிப்பு திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 7 ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில், குறைந்த அளவிலேயே மழை பொழியும். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள்ளது.
✍ ராஜஸ்தான் மாநிலத்துடன், ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
✍ இருபது சதவீதம் மழை பெய்யும் ராஜஸ்தானில் ஆறுகளில் தண்ணீரை ஒடவிடும்போது எண்பது சதவீதம் மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது வியப்பாகவும் வேதனையாகவும் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது.
✍ ஆறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் தாய்க்கும் மேலாக போற்றப்படவேண்டும் கடவுளுக்கும் மேலாக வணங்கப்பட வேண்டும் ஆனால் இங்குள்ள நீர் நிலைகளின் நிலமை நேர்மாறாக இருக்கிறது.
✍ எத்தனையோ தலைமுறையை வாழவைத்த நீர் நிலைகள் இன்னும் பல தலைமுறையை வாழவைக்கவேண்டாமா? தமிழகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் வறட்சியை எளிதாக விரட்ட முடியும்.
✍ இதற்கு நீதிக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோரை இணைத்து தண்ணீர் விழிப்பு உணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இவரை பற்றிய சிறு பார்வை……..!!!!!
✳ 1985 முதல், இவர் தலைமையின் கீழ் செயல்படும் தருண் பாரத் சங் (இளைய பாரத சங்கம்) என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
✳ மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியுள்ளார். 1,200 கிராமங்களைத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளார். இவரது வழிகாட்டுதலால் பல மாநிலங்களில் தண்ணீர்ப் புரட்சி உருவானது.
✳ ஆண்டிற்குச் சராசரி 450 மி.மீ. மழை பெய்யும் ராஜஸ்தானிலுள்ள அல்வர் என்ற மாவட்டம் முழுவதிலும் 1058 கிராமங்களில் நீர் வளம் பெருக்கிச் சாதனை படைத்துள்ளார் ராஜேந்திர சிங். வற்றிப்போன இரண்டு நதிகளை வற்றாத நதிகளாக ஓடவைத்து, வனங்களை உருவாக்கியுள்ளார்.
இந்த மாமனிதர் பெற்ற விருதுகள் பற்றி……
தண்ணீருக்கான நோபல் பரிசு என்று அறியப்படும் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது வழங்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் பாரம்பரிய மழை நீர் சேகரிப்பு முறைகளை கடைப்பிடித்து தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்ததை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
ஆசியா கன்டத்தின் மிகவும் உயர்ந்த விருதான ராமன் மகசேசே விருது,மற்றும் ஜம்னாலால் பஜாஜ்
விருது, .வழங்கப்பபட்டுள்ளது.
அதுமட்டுமின்றி…
இன்னும் ஒருபடி உயரத்தில் இவரை வைத்து போற்றியது இங்கிலாந்து நாட்டின் பிரபல நாளேடு…..
உலகைக் காப்பாற்றும் 50 பேரில் ஒருவர்’ இவர் என ‘தி கார்டியன்’ பத்திரிகை இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
மிகவும் சரியான புகழாரம் தான்.
(ஆதாரம்)
# தி இந்து.
# ஆனந்தவிகடன்.
மற்றும் பிற இனையதளங்கள்.
பின்னூட்டம்……
* நம் தமிழ் நாட்டில் சராசரி பெய்யும் மழைநீரின் அளவு 900மி.மீ.மீ சில தரவுகள்1000 மி.மீ. எனவும் கூறுகின்றன. இந்த அளவு மழை நீர் கர்நாடகத்தில் கூட கிடையாது. இதை சரியான முறையில் பயன் படுத்தும் தொழில் நுட்பமும், ராஜேந்திரசிங் மற்றும் தியோடர் பாஸ்கரன் போன்ற மாமனிதர்களும் தான் நம் தமிழ்நாட்டிற்கு மிக மிக தேவை.!!